Browsing "Older Posts"
Browsing Category
"வெங்காயம்"

Raw ONION on bottom of the feet to take away illness.
நறுக்கிய வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து உடல் சோர்வு போக்கலாம்...
வெங்காயம் நச்சுக்களை உறிஞ்சும் தன்மை உடையது.
இங்கிலாந்தில் பிளேக் நோய் வந்த போது, காற்றில் இருக்கும் நச்சுக்களை எடுக்கவும்...அந்த நோயிலிருந்து விடுபடவும் வெங்காயத்தை அதிகம் உபயோகின்தனர்.
NEVER SAVE AN ONION. It will absorb all the toxins in the air of your refrigerator.
வெங்காயத்தை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உபயோகிக்காதிர்கள். அதில் உள்ள அனைத்து நட்சுக்களையும் வெங்காயம் உறிஞ்சிக்கொள்ளும்.
மேலும் அதனை நீங்கள் உட்கொண்டால் நச்சுக்களை உண்பதற்கு சமம்.
நறுக்கிய வெங்காயத்தை நீங்கள் படுக்கும் படுக்கையை சுற்றிலும் வைத்துக்கொண்டால் இரவு உறக்கம் மற்றும் சுவாசிக்கும் காற்று சுத்தமானதாக இருக்கும். உடல் நலம் இல்லாதவர்கள் விரைவில் குணமடைவார்கள்.
வெங்காயம் மற்றும் வெள்ளைபூண்டு ஒரு சிறந்த நுண்ணுயிர் கொல்லியாகவும், பாக்டீரியா எதிர்ப்பாகவும் செயல்படுகிறது.
நறுக்கிய வெங்காயத்தை உங்கள் பாதத்தின் அடியில் மற்றும் நடுவினில் வைத்து படுத்து தூங்கும்போது அதன் செயல் நேரடியாக நமது உடம்பில் வினை புரியும். உங்கள் இரத்தத்தை நன்கு சுத்தம் செய்யும் மற்றும் உங்கள் வயற்றில் இருக்கும் நட்சுக்களையும் உறிஞ்சிவிடும்.(வெள்ளைபூண்டயும் இது போல் உபயோகிக்கலாம்).

வெங்காயத்தில்
சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. ஜலதோஷம்
வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று, வெந்நீர் குடித்தால்
ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும். வெங்காயத்தில் புரத
சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின்
காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் காரணம் ஆகும்.
நெஞ்சு படபடப்பு
நெஞ்சில் படபடப்பு ஏற்பட்டால் சின்ன வெங்காயத்தை தின்று வெந்நீர்
குடித்தால் குணமாகும். குறிப்பாக இதய நோயாளிகளுக்கு இப்படிபட்ட பிரச்னைகள்
வரும்போது முதலுதவி சிகிச்சையாக இந்த முறையை செய்யலாம். வெங்காயத்தை
பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.
மூல நோய்
மூல
நோய் இருப்பவர்கள் உணவில் அதிகமாக வெங்காயம் சேர்ப்பது நல்லது. மோரில்
சின்ன வெங்காயத்தை நறுக்கி குடித்தாலும் பலன் கிடைக்கும்.
வெங்காயச்சாறு
* வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
* புகை பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
* தேள் கொட்டிய இடத்தில் வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. அதேபோல்
படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவினாலும் மறைந்துவிடும்.
* வெங்காயச் சாறுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
* வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
* வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
3 வெங்காயம் போதும்!''அந்தம்மாவோட பேத்தி போன வருஷம் ஜூரம், சளி, இருமல்னு படுத்த படுக்கையாக் கிடந்தா. நான்கூடப் போய் பத்தியம் சொல்லிப்புட்டு வந்தேன். சின்ன வயசுலேர்ந்து விரதம் விரதம்னு இருந்து, சரியாச் சாப்பிடாம உடம்பக் கெடுத்துக்கிட்டா. வெங்காயம் பக்கமே போகவே மாட்டா. அதுல வந்ததுதான் வினை.''''அவளோட பேரனும் பேத்தியும் எது சமைச்சாலும் அதுல வெங்காயம் வேணும்னு அடம்பிடிக்குமே. இவ மட்டும் எப்புடி வேற மாதிரி இருந்திருக்கா?’
''முதல்ல அப்படித்தான் இருந்தா. நான்தான் அவகிட்ட, விரதம்னு பாக்காத, ஒடம்பை முதல்ல பாருன்னு, வெங்காயத்தோட மகிமையை எடுத்துச் சொன்னேன். உடம்புக்கு நல்லதுன்னு தெரிஞ்சு, விசாலமும் வெங்காயத்தை விரும்பிச் சாப்பிட ஆரம்பிச்சு, இன்னிக்குத் தெம்பா எந்திரிச்சு உட்கார்ந்திட்டா வாசம்பா. நம்ம முனியாண்டி தோட்டத்துலேர்ந்துதான், வாரம் தவறாம கிலோக்கணக்குல வெங்காயம் விசாலம் வீடு தேடிப் போகுதாமே!''
'' 'சுவாமி இல்லேன்னா சாணியைப் பாரு, பேதி இல்லைன்னா வானத்தைப் பாரு’ங்கிற மாதிரி 'வெங்காயம் இல்லேன்னா, வியாதி வரும் பாரு’ங்கிறது நெசமால்ல இருக்கு.''
''இல்லையா பின்னே? தெனமும் காலைல முருங்கைக்கீரையை வேகவெச்சு, அதுல வெங்காயத்தைப் பொடிசா நறுக்கிப்போட்டு சூப் செஞ்சு குடிச்சா, ரத்த அழுத்தம் குறைஞ்சிடும். இன்னிக்கு பொம்பளைப் புள்ளைங்க வீட்டு விலக்கு வர்றதுக்குள்ளயே, நடக்கக்கூட முடியாம உடம்பு பெருத்துடுதுங்க. அப்புறம் ஒடம்பைக் குறைக்க ஜிம்முக்கு ஓடுதுங்க. வெறும் வெங்காயத்தைத் தெனமும் சாப்பிட்டு வந்தாலே போதும்டி. உடம்புல இருக்கிற தேவையில்லாத கொழுப்பெல்லாம் கரைஞ்சிடும். ஒல்லி உடம்புக்காரியா சிக்குன்னு ஆயிரும்டி.
''வெறும் வெங்காயத்தை மென்னு தின்னா வாயெல்லாம் நாறுமே அம்மணி?''
''வயித்துக் கோளாறுனால வாய்ல வீசுற நாத்தத்தைவிட, வெங்காயத்துனால வர்ற வாசம் எவ்வளவோ மேலு வாசம்பா. அதை முதல்ல புரிஞ்சுக்க.
பல் வலி, ஈறு வலிக்கெல்லாம் வெங்காயம்தான் அருமருந்து. வெங்காயச் சாறையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளிச்சா, ஈறுவலி ஓடிப்போயிரும். வெங்காயச் சாறைப் பஞ்சில் நனைச்சு பல் ஈறுகள்ல தடவிட்டு வந்தா, வலி இருந்த இடம் தெரியாமப்போயிரும். வயித்துக்கோளாறையும் சரிசெஞ்சிரும்.
உடல் உஷ்ணத்தைப் போக்கக்கூடிய சக்தியும் வெங்காயத்துக்கு உண்டு வாசம்பா. எப்பவும் ஏ.சி-க்குள்ள இருக்கிற மாதிரி உடம்பும் வயிறும் குளுகுளுன்னு இருக்கும். உடம்பை உறுதியாவும் வெச்சிருக்கும். கழனி வேலைக்குப் போறவங்களுக்கு வெங்காயமும், வெறும் சோறும்தான் காலை ஆகாரம்'' - வெங்காயப் பெருமையை அம்மணி வரிசையா அடுக்க,
''ஓஹோ... அதான் 'வரப்பைத் தலையணையாவும், வாய்க்காலைப் பஞ்சு மெத்தை’யாவும் நெனச்சு, காளி, கண்ணாத்தாவும் கழனியே கதியாக்கெடக்கிறாங்களோ. சரி சரி... மேல சொல்லு.''
''மாதவிடாய்க் கோளாறு, நரம்புத்தளர்ச்சி, மூல நோய், தலைவலி, ஜீரணக்கோளாறு, தொண்டை வலி அத்தனைக்கும் வெங்காயம்தான் மருந்து. தெனமும் மூணு வெங்காயத்தைச் சாப்பிட்டு வந்தாலே போதும். உடம்பு நல்லா வலுவா இருக்கும். முடி உதிர்ந்த இடத்துல வெங்காயத்தைத் தேச்சிட்டு வந்தா, முடி நல்லா வளரும். ஆறு வெங்காயத்தைத் தண்ணீருல கலக்கிக் குடிச்சா, சிறுநீர்க் கடுப்பு, எரிச்சல் போகும். சர்க்கரை நோய் இருக்கிறவங்க, வெங்காயத்தை அதிகமா சேர்த்துக்கலாம். நாய்க்கடி, பாம்புக்கடி, தேள்கடினு விஷத்தை முறியடிக்கிற குணமும் வெங்காயத்துக்கு உண்டு. அதனால எல்லா வயசுக்காரங்களும் தெனமும் வெங்காயத்தை நிறையச் சேர்த்துக்கணும்."

வெங்காயம் இளமையைப் பாதுகாக்கும்வெங்காயத்தில் வைட்டமின் ஏ,பி,சி ஆகியவை உள்ளன. உடல்தளர்ச்சியினால் ஏற்படும் உபாதைகளை எல்லாம் வெங்காயம் போக்குகிறது. இருதயத்தை வலுப்படுத்துகிறது. இது உடலுக்குச் சக்தியை அளிப்பதுடன் இழந்த சக்தியைத் திரும்பப் பெறவும் பயன்படுகின்றது. வெங்காயம் இளமையைப் பாதுகாக்கும். நீரழிவு நோயாளிகளுக்கு வெங்காயம் அருமருந்து. காரணம் வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. வெங்காயத்தின் விஞ்ஞானப் பெயர் 'ஆலியம்சிபா.'
பீட்ரூட்
கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.
நம்ம ஊரு வைத்தியம் - வெங்காயம்! வெங்காயத்துல சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்னு ரெண்டு வகை இருக்கறது பலருக்கு தெரியும். அதேபோல வெள்ளை வெங்காயம்னு ஒண்ணும் இருக்கு. இதுகள்ல மருத்துவ குணம் நிறைஞ்சது... சின்ன வெங்காயம்தான்!ஜலதோஷம் வந்தா ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்னு, வெந்நீர் குடிச்சா... ஜலதோஷம் குறையுறதோட தும்மலும் நின்னுடும். கூடவே... நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் இதெல்லாமும் குணமாகும். நெஞ்சு படபடப்பு வந்தாலும், சின்ன வெங்காயத்தை தின்னு வெந்நீர் குடிச்சா, உடம்பு சமநிலைக்கு வந்துடும். இதய நோயாளிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது... முதலுதவி சிகிச்சையா இதை செய்யலாம். பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தா... ரத்தக்கொதிப்பு குறைஞ்சு, இதயம் பலமாகும்.
மூல நோயால அவதிப்படுறவங்க சாப்பாட்டுல அதிகமா சின்ன வெங்காயம் சேர்த்துக்கறது நல்லது. நீர்மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடிச்சாலும் பலன் கிடைக்கும். வெளிமூலம் உள்ளவங்க, சின்ன வெங்காயத்தை வதக்கி, பிரச்னை உள்ள இடத்துல வெச்சுக்கிட்டா... பலன் கிடைக்கும் (வெள்ளை வெங்காயத்தை அப்பப்போ நல்லெண்ணய் விட்டு வதக்கிச் சாப்பிட்டாலும் மூல உபத்திரவம் குறையும்).
பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல்னு அவதிப்படுறவங்களுக்கும் சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும். சின்ன வெங்காயத்தை மையா அரைச்சுக்கோங்க. இதை, நாட்டுக்கோழி முட்டையோட வெள்ளைக்கருவுல சேர்த்து, ஆம்லெட்டுக்கு அடிக்கிற மாதிரி நல்லா அடிச்சுக்கணும். இல்ல, மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினாலும் சரி. இப்படி செய்றப்ப... ஷாம்பு மாதிரி பொங்கி வரும். அதை அப்படியே தலையில தேய்ச்சி, அரை மணி நேரம் கழிச்சி வெதுவெதுப்பான தண்ணியில குளிக்கணும். முட்டை நாத்தம் போகறதுக்கு, நல்ல சிகைக்காய் பவுடரை போட்டு தேய்ச்சி குளிக்கணும். வாரத்துல ஒருநாள் வீதம், ரெண்டு மாசத்துக்கு இப்படி செய்தா... தலைமேல பலன் கிடைக்கும்.
தேள் கொட்டின இடத்துல வெங்காயச்சாறை தேய்ச்சா விஷம் ஏறாது. தலை பகுதியில சொட்டை விழுந்து முடி முளைக்காம இருந்தாலும் சின்ன வெங்காயத்தை தேய்ச்சி வந்தா... காலப்போக்குல முடி முளைக்கும். ஆம்பளைங்களுக்கு மீசை பகுதியில இப்படி சொட்டை இருந்தாலும், இதே வைத்தியத்தை செய்யலாம்!

கூந்தல் பராமரிப்பில் வெங்காயம்கூந்தல் பற்றிய பிரச்சனைகள் நிறைய உள்ளன. குறிப்பாக கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை, கூந்தல் வறட்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிறைய முயற்சிகளை, இதுவரை செய்திருப்போம். அதுவும் மார்க்கெட்டில் விற்கப்படும் கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தியிருப்போம். இருப்பினும், அதற்கான சரியான தீர்வை யாரும் பெற்றதில்லை. மேலும் இதனால் கூந்தலுக்கு இருக்கும் பிரச்சனைகள் தான் அதிகமாகியுள்ளதே தவிர, ஒரு முடிவு கிடைக்கவில்லை. எனவே எப்போதும் செயற்கை முறைகளை விட, இயற்கை முறைகளான வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கூந்தலை பராமரித்தால், நிச்சயம் அத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
மேலும் கூந்தலைப் பராமரிப்பதற்கு நிறைய வீட்டுப் பொருட்கள் உள்ளன. உதாரணமாக, முட்டை, தேன், தயிர், பேக்கிங் சோடா, வினிகர், எலுமிச்சை சாறு மற்றும் வெங்காயம் போன்ற பொருட்கள் கூந்தல் பராமரிப்பில் பெரிதும் உறுதுணையாக உள்ளன. ஆம், அனைத்து சமையலிலும் பயன்படும் வெங்காயம் கூந்தல் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் உதவியாக உள்ளது. அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள். * கூந்தல் உதிர்தல்: வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. பொதுவாக சல்பர் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு, கூந்தலையும் வலுவுடன் வைத்துக் கொள்ளும்.
எனவே அதற்கு வெங்காயத்தை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தேய்த்து, ஊற வைத்து குளிக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு முன் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெங்காய பேஸ்ட்டை தலைக்கு தடவி மசாஜ் செய்து, சுடு நீரில் நனைத்த ஈரமான துண்டை, தலைக்கு சுற்றி, ஊற வைத்து பின்னர் குளிக்க வேண்டும்.
* கூந்தல் வளர்ச்சி:
உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளரும். இத்தகைய இரத்த ஓட்டத்தை வெங்காயம் செய்வதால், வெங்காயத்தை சாறு எடுத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படியாக தடவி, மசாஜ் செய்து, 40 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க, கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.
* ஸ்கால்ப் பிரச்சனை:
வெங்காயச் சாற்றை ஸ்கால்ப்பில் படும்படியாக தடவினால், ஸ்காப்பில் தங்கி கூந்தல் வளர்ச்சியைத் தடுக்கும் தொற்றுகள் நீங்கி, கூந்தல் மற்றும் ஸ்கால்ப் நன்கு ஆரோக்கியமானதாகவும், சுத்தமாகவும் இருக்கும்.
* பொடுகுத் தொல்லை:
தலையில் உள்ள அதிகப்படியான வறட்சியினால் பொடுகு வந்துவிடும். பொடுகானது தலையில் அதிகம் இருந்தால், கூந்தல் உதிர்தல் அதிகரித்து, அதன் வளர்ச்சி தடைப்படும். எனவே பொடுகுத் தொல்லையை நீக்குவதற்கு, வெங்காயச் சாற்றுடன், எலுமிச்சை சாறு, தயிர் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, தலையில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.
