இனிமையான இரவு உறக்கம் வேண்டுமா?

By Unknown → புதன், 18 டிசம்பர், 2013
Advertise
இனிமையான இரவு உறக்கம் வேண்டுமா?

தண்ணீர் இல்லாமல் கூட சில நாள் உயிர் வாழலாம் ஆனால் தூக்கம் இல்லாமல் நம்மால் உயிர் வாழ முடியாது.

மனிதன் அன்றாட வாழ்க்கையை திறம்பட செய்து முடிக்க தூக்கம் மிக முக்கியம் என்றால் அது மிகையாகாது.

ஒரு காலத்தில் மனிதன் தூங்கியே காலம் கழித்து கொண்டு இருந்தான் அப்பொழுது 'தூங்காதே தம்பி தூங்காதே' என்ற கண்ணதாசன் பாடல் வரிகள் தேவைப்பட்டது நமக்கு.

கால போக்கில் விலைவாசி உயர்வால் மனிதன் உழைக்க நேரிட்ட போது உறக்கம் மறந்தான்.

ஒரு மனிதன் ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் அன்றாட பணிகளை செய்து முடிக்க முழுமையான எட்டு மணி நேர இரவு உறக்கம் இன்றியமையாதது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு கட்டுரை ஒன்றில் 8 மணி நேரம் தூங்குபவர்களின் அறிவு ஆற்றல், நினைவாற்றல் பளிச்சிடுவதாகம், எட்டு மணித்துணிகளுக்கு குறைவாக தூங்குபவர்களின் அறிவு ஆற்றல், நினைவாற்றல் நாளுக்கு நாள் மங்குவதாவும் கூறுகிறது.

பிரான்சில் உள்ள நோட்ரே டாம் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவு எட்டு மணி நேர ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் மனிதர்களின் மறுகட்டமைப்பு நினைவு, உள் வாங்கி கொள்ளும் திறமை, புரிந்து கொள்ளும் திறன் மற்றும் ஆக்க சிந்தனை மற்றவர்களை விட பள்ளிசிடுவதாக தெரிவிக்கிறது.

ஆழ்ந்த உறக்கம் பெற சிறந்த 5 வழிகள் உங்களுக்காக:

1 . படுக்கை சொல்லும் முன்பு காபி,தேநீர் போன்றவற்றை அறவே தவிருங்கள். இதில் உள்ள காபின் என்ற வேதி பொருள் மூளை அட்ரினலின் சுரப்பதை அதிக படுத்தி தூக்கத்தை கெடுக்கிறது.

2 . ஆல்கஹால் தவிருங்கள். இது போதை தருமே தவிர நல்ல ஆழ்ந்த உறக்கத்தை கெடுக்கும். இது சில சமயங்களில் மட்டுமே பயன் தர கூடியது.

3 . தூங்கசெல்லும் சிறிது நேரம் முன்பு உங்களை தயார் படுத்த உடலையும், மனதையும் எளிதாக்கும் சில உடல் பயிற்சிகள்(stretching), யோகா, குட்டி வெந்நீர் குளியல் போன்றவை செய்யலமே.

4 . வழக்கமான அன்றாட உடல் பயற்சிகள், மாலையில் சிறிது நேரம் உங்களுக்கு பிடித்த விளையாட்டுகள் உலகத்தை மறந்த தூக்கத்தை உறுதியாக்கும்.

5 . முக்கியமாக உங்கள் படுக்கையை உங்களுக்கு பிடித்த மன நிலைக்கு ஏற்றது போல இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள் அதாவது அமைதியாகவும், நல்ல காற்றோட்டமும், வெளிச்சம் குறைவாகவும் மற்றும் சௌகரியமாகவும் இருக்குமாறு அமையுங்கள்.


Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " இனிமையான இரவு உறக்கம் வேண்டுமா? "

Your Comment Has Been Published!