சரகலை பயிற்சி!
சித்தர் கலைகளில் உயர்நிலை கலைகளில் முதன்மையான கலையே சரகலை ஆகும்.இக்கலையினை ஆதியில் எம்பெருமான் ஈசன் மகாசக்தியான அன்னை உமையவளுக்கு உபதேசித்த உன்னத கலையாகும்.
சித்தர் கலைகள் அனைத்தும் இறைவனாகிய சிவபெருமானால் தோற்றுவிக்கப் பட்டு பின் அடுத்தடுத்து குருகுல வழி உபதேசமாக சித்தர் பெருமக்களுக்கு உபதேசிக்கப் பட்டவைகள் ஆகும்.
சிவன் சக்திக்குச் சொல்ல
சக்தி நந்திக்குச் சொல்ல
நந்தி காளங்கிக்குச் சொல்ல
காளங்கி மூலருக்குச் சொல்ல
மூலர் அகத்தியருக்குச் சொல்ல
என்ற சித்தர் பாடலின் படி ஆதி முதல் சித்தர் எம்பெருமான் ஈசனே ஆகும்.
சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே
பட்சி தெரிந்தவனை பகை கொள்ளாதே -
சரம் பார்ப்பான் பரம் பார்ப்பான் -
இவை முன்னோர் வாக்காகும். சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே என்பதன் பொருள் சரகலையை இயக்கத் தெரிந்த வனிடம் சரசம் என்ற விளையாட்டுத் தனமாக நடந்து கொண்டால் சரம் கற்றவன் சீறி, சினந்து வாக்கு விட்டால் அது அப்படியே பலித்து விடும். ஏனென்றால் பஞ்சபூத சக்திகள் அனைத்தும் சரகலையில் தேர்ச்சி பெற்றவனின் உடல், மனம் ,வாக்கு மூன்றிலும் ஒருங்கிணைந்து ஆட்சி செய்யும்.
மேலும் சரகலை கற்று தேர்ச்சி பெற்றால் இல்லறத்தில் பூரணத்துவ நிம்மதி, சந்தோசம், மகிழ்ச்சி பெறுவதுடன் சரம் பார்ப்பான் பரம் பார்ப்பான் என்பதற்கிணங்க ஆன்மீக இறைநிலை மெய்ஞான சித்தியும் அடையலாம்.

No Comment to " சிவன் "
Your Comment Has Been Published!