ஆல்
மாற்றடுக்கில் அமைந்த அகன்ற இலைகளையுடைய பெருமரம். கிளைகளிலிருந்து விழுதுகள் வளர்ந்து ஊன்றி மரத்தைத் தாங்கும் அமைப்புடையது. நிழல் தரும் மரமாகத் தமிழகமெங்கும் வளர்க்கப்படுகிறது. சாறு பால் வடிவாக இருக்கும். இலை, பூ, பழம், விதை, பால், பட்டை, விழுது ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
விழுது, பட்டை, இலை, ஆகியவை உடல் பலம் பெருக்கியாகவும் வெப்பு அகற்றியாகவும் செயற்படும்.

1. ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை, மொட்டு, கொழுந்து, பழம், விழுது வகைக்கு 40
கிராம் 2 லிட்டர் நீரில் சிதைத்துப் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி காலை
மாலையாக ஒவ்வொரு நாளும் குடித்து வர மேக எரிச்சல், மேகப்புண், மேக ஒழுக்கு
தீரும்.
2. ஆலம் பால் 20 துளி சர்க்கரையுடன் காலையில் சாப்பிட்டுப் புளி, காரம் நீக்கி உண்ண ஒரு மண்டலத்தில் கொறுக்கு தீரும்.
3. ஆலம் பாலை காலை மாலை தடவி வர வாய்ரணம், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, கை, கால் வெடிப்பு, பல் ஆட்டம் ஆகியவை தீரும்.
4. ஆலம் பட்டை, ஆத்திப்பட்டை, அவுரிவேர்ப்பட்டை வகைக்கு 40 கிராம், 10 கிராம் மிளகுடன் சிதைத்து 8 லிட்டர் நீரில் போட்டு 2 லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 250 மி.லி. வீதம் தினம் 3 வேளை குடித்து வர பாதரசபாசாணங்களின் வேகம் குறையும்.
5. ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை வகைக்கு 200 கிராம் சிதைத்து 4 லிட்டர் நீரில் இட்டுக் காய்ச்சிக் காலையில் மட்டும் ஒரு குவளை குடித்து வரலாம். 4 நாள்களுக்கு ஒரு முறை தயாரித்துக் கொள்ளலாம். 1 முதல் 4 மண்டலம் வரை சாப்பிட மதுமேகம் தீரும்.
6. ஆலம் பழம், விழுது, கொழுந்து சம அளவு அரைத்து எலுமிச்சை அளவு காலை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 120 நாள்களில் விந்து அணுக்கள் உற்பத்தியாகும்.
7. விழுது துளிரையும் விதையையும் அரைத்து 5 கிராம் அளவுக்குக் காலையில் மட்டும் பாலில் கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.
8. துளிர் இலைகளை அரைத்து 5 கிராம் அளவுக்குத் தயிரில் கலந்து கொடுத்து வர இரத்த பேதி நிற்கும்.
9. விழுதைக் கொண்டு பல் தேய்த்து வரப் பற்கள் உறுதிப்படும்.

No Comment to " ஆல் "
Your Comment Has Been Published!