Advertise
வீட்டு மருத்துவக் குறிப்புகள்- இய‌ற்கை வைத்தியம்:-

1) செருப்புக்கடி புண்ணுக்கு

தென்னை மரக் குருத்தோலையை அல்லது குருத்தோம்பை (தென்னம்பூவு தோன்றிய பின் உருவாகும் சிறு சிறு காய்) நெருப்பில் சுட்டுக் கரியாக்கி தேங்காய் எண்ணெயில் குழப்பி புண்ணில் தடவி வர குணமாகும்.

2) மூட்டுவலி, மூட்டு வீக்கம் குணமாக

கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு. இம்மூன்றையும் சரிபங்கு எடுத்து நீர்விட்டு அரைத்து, சுடவைத்து பொறுக்கும் பக்குவத்தில் சிறிது கற்பூரம் கலந்து வலி உள்ள இடங்களில் தடவ உடன் பலன் கிடைக்கும்.
3) புணகளுக்கும், சிரங்குக்கும் தைலம்

1. ஊமத்தை இலைச்சாறு (300 மிலி), தேங்காய் எண்ணெய் (100 மிலி), நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் மயில் துத்தம் (2 கிராம்) இலைச்சாற்றில் மயில் துத்தத்தைக் கரைத்து எண்ணெய் சேர்த்து அடுப்பிலேற்றி சாறு வற்றும் வரைக் காய்ச்சி வடிகட்டி, ஆறியவுடன் பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தடவி வர எப்படிப்பட்ட நாட்பட்ட புண்ணானாலும் விரைவில் குணமாகும். அறுவை சிகிச்சை செய்தப் புண்களுக்குக் கூட இது மிகவும் சிறந்த பலன் தருகிறது. இத்தைலம் அடர் பச்சை நிறத்தில் இருக்கும்.

2. எருக்கிலைச் சாறு (100 மிலி), தேங்காய் எண்ணெய் (100 மிலி), மஞ்சள்பொடி (3 கிராம்). இம்மூன்றையும் ஒன்றாகக் கலந்து சாறு வற்றும் வரை அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி, வடிகட்டி ஆறியவுடன் கரப்பான் புண், அடிபட்ட புண், சிரங்கு, பொடுகுப் புண் ஆகியவைகளுக்கு வெளியே தடவி வர மிகச் சிறந்த பலனைத் தரும்; விரைவில் குணமாகும்.
4) பித்த தலைச்சுற்று, கண் எரிச்சல்

கொத்தமல்லி விதை (பத்து கிராம்), சீரகம் (பத்து கிராம்), நல்லெண்ணெய் (200 மிலி). அடுப்பில் சீரகம் நன்கு கருஞ்சிவந்த நிறத்தில் வரும் வரை காய்ச்சி (எண்ணெய் சூட்டிலேயே சீரகம் கருஞ்சிவப்பு நிறம் வரும்) பின் வடிகட்டி தலைக்குத் தேய்த்து நன்கு குளித்து வர உடன் தீரும். இரத்த அழுத்த நோயாளிகள் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தல் மிகவும் நல்லது. தினசரி தலையிலும் சிறிது தடவி வர மிகவும் நல்லது.
5) காதில், ஈ, எறும்பு நுழைந்துவிட்டால்

1. வீட்டருகே தானாக முளைத்து கிடக்கும் குப்பைமேனி எனும் செடியின் இலைச் சாற்றினை இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட ஈ அல்லது எறும்பு உடனே வெளிவரும் அல்லது இறந்து போகும்.

2. சுத்தமான நீரில் சிறிது உப்பு சேர்த்து உப்பு நீராக்கி அதை மூன்று அல்லது ஐந்து துளி காதில் விட உடன் பலன் கிடைக்கும்.

6) உடன் தீப்பட்ட புண்ணுக்கு...

1. தீப்பட்டவுடன் சோற்றுக்கற்றாழை என்னும் குமரியை அதன் உள்ளிருக்கும் குழகுழப்பான சோற்றினை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்ட எரிச்சல், காந்தல் உடன் தீரும். இதேபோல செம்பருத்தி இலை, பூ எடுத்து அரைத்தும் தடவலாம்.

2. வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அரைத்து பற்று போட உடன் காந்தல், எரிச்சல் தீரும்.

3. ஊமத்தை இலையை வெண்ணெயில் அரைத்துப் போட எரிச்சல் தீருவதுடன் புண்ணும் எளிதில் ஆறும்.

4. கருவேலம் பிசின் (அ) வெண் குங்கிலியம் என்னும் மருந்துச் சரக்கை தேங்காய் எண்ணெயில் சூடுசெய்து, அதில் கரைந்தவுடன் ஆறிய பின்பு தடவ எரிச்சல் தீரும். (இது நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்).

7) கை-கால்களில் ஏற்படும் பித்தவெடிப்பு நீங்க

1. தேங்காய் எண்ணெய் (200 மிலி), விளக்கெண்ணெய் (200 மிலி), கடையில் கிடைக்கும் வெண் குங்கிலியம் (35 கிராம்), சாம்பிராணிப்பொடி (10 கிராம்). தேன்மெழுகு (60 கிராம்). எண்ணெயை சூடு செய்து அதில் குங்கிலியம், சாம்பிராணி ஆகியப் பொடிகளை கலந்து, நன்கு கரைந்தவுடன் தேன்மெழுகு சேர்த்து நன்கு கலக்கி ஆறவைக்க களிம்பாகி இருக்கும். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் இரவு படுக்கும் முன் தடவி வர பித்தவெடிப்பு உடன் தீரும்.

2. கிளிஞ்சில் சுண்ணாம்புப் பொடி, விளக்கெண்ணெய் இவை இரண்டும் தேவையான அளவு கல்லுரலில் இட்டு நன்கு அரைத்து பசையாக்கி பாதிக்கபட்ட இடத்தில் தடவிவர உடன் தீரும். விளக்கெண்ணெய் அதிகமாக சேர்க்காமல் பசையாகும் அளவு மட்டும் குறைவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை இரு வேளை தடவிவர உடன் தீரும்.

8) தலைமுடி வளரவும், முடி உதிராமல் இருக்கவும்

1. நெல்லிக்காய்ச் (பெரிது) சாறு கால் லிட்டர், மஞ்சள் சரிசாலைச் சாறு கால் லிட்டர், வெந்தயம் ஐந்து கிராம், வெந்தயத்தை அரைத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி தொடர்ந்து தலைக்குத் தேய்த்து வர தீரும்.

2. தேங்காய்ப் பால் ஒரு லிட்டர், சீரகம் இருபது கிராம், தேங்காய் எண்ணெய் நூறு மி.லி., நன்னாரி வேர்ப்பொடி பத்து கிராம், எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி, பின் வடிகட்டி தொடர்ந்து தலைக்குத் தேய்த்துவர நல்ல பலன் கிடைக்கும்.

9) உள்நாக்கு வளர்ச்சிக்கு

வெள்ளைப் பூண்டை நன்கு அரைத்து, வெள்‍ளைத் துணியில் தடவி சிறிது நேரம் துணியை விளக்கில் வாட்டி பிழியச் சாறு வரும். இச்சாற்றுடன் தேன் சரிபங்கு கலந்து கொண்டு உள்நாக்கில் தடவியும், நான்கு துளி வீதம் தொண்டையில் படும்படி விழுங்கியும் வர குணமாகும்.

10) உஷ்ண நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உடன் தீர

1. நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் வெங்காரம் என்னும் மருந்தை சட்டியில் இட்டு பொரித்து, பொடித்துக் கொண்டு, அரைத் தேக்கரண்டி வீதம் இளநீரில் கலந்து பருகி வர உடன் தீரும்.
2. யானை நெருஞ்சில் (பெரும் நெருஞ்சில்) என்னும் செடியின் இலையைப் பறித்து அதை பாத்திரத்திலிட்டு அது மூழ்குமளவு நீர்விட்டு, 15 நிமிடங்கள் கழித்து வடிகட்ட நீர் ஜெல்லி போலாகும். இதை இரண்டு டம்ளர் வீதம் பருகி வர உடன் குணமாகும்.
3. மண்பாண்ட நீரில் இரண்டு டம்ளரில், தேன் ஒரு தேக்கரண்டி, ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டு, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு, அரைத் தேக்கரண்டி உப்பு ஆகியன கலந்து பருக உடன் தீரும்.

11) கக்கூஸ் படை, தேமல், சொறி ஆகியன குணமாக

1. சீமை அகத்தியிலை, கற்பூரம் சிறிதளவு இரண்டையும் எலுமிச்சைப் பழச்சாறு விட்டு அரைத்து தடவி வர குணமாகும்.
2. குப்பைமேனி இலையை உப்பு சேர்த்து நீர்விட்டு அரைத்து பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தடவி வர குணமாகும்.
3.அவுரி இலை, அல்லது சென்னா இலையை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து தடவி வர குணமாகும்.
4. மிளகுப் பொடியை வெங்காயச் சாறு விட்டு அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவி வர குணமாகும்.

12) பேன், பொடுகு, தலை ஊரல் தீர

1. பொரும் வெற்றிலை அல்லது மலையாள வெற்றிலைச் சாறு (300 மிலி). இம்மூன்றையும் ஒன்றாக கலந்து அதில் பேன் கொல்லி விதை, கோஷ்டம், அதிமதுரம், குன்றிமணி விதை எல்லாம் பத்து கிராம் வீதம் எடுத்து, இவை நான்கையும் பொடித்து சாறுவிட்டு அரைத்து மேற்கூறிய எண்ணெயில் கலந்து சாறு வற்றும் வரை நன்கு காய்ச்சி வடிகட்டி தலைக்குத் தேய்த்து வர வருடக்கணக்கிலுள்ள பேன் தொல்லைகளும் உடன் தீரும்.

2. மருதோன்றிச் சாறு (100 மிலி), படிகாரம் (அ) சீனாக்காரம் (5 கிராம்), மருதோன்றிச் சாற்றில் இதைக் கரைத்து தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் கழித்துக் குளித்துவர பேன் தொல்லை தீரும்.

13 ) அரையிடுக்கிலுள்ள அரிப்புத் தேமல், கரும்படை குணமாக

மிளகு, நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வெண்காரம் இரண்டையும் 25 கிராம் அளவில் எடுத்து, பசு நெய் விட்டு நன்கு மையாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து தடவி வர குணமாகும்.



Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " வீட்டு மருத்துவக் குறிப்புகள்- இய‌ற்கை வைத்தியம் "

Your Comment Has Been Published!