குதம்பைச்சித்தர்

By Unknown → செவ்வாய், 22 ஏப்ரல், 2014
Advertise
குதம்பைச்சித்தர்
அழுகணி சித்தரின் என் கண்ணம்மா, அகப்பேய் சித்தரின்
அகப்பேயைப் போன்று குதம்பைச் சித்தரின் பாடல் கண்ணிகளில் ‘குதம்பாய்’
என்ற வார்த்தை ஜாலம் வருகின்றது. இவர் ‘குதம்பை’ என்ற காதணியணிந்த
பெண்ணை முன்னிலைப்படுத்திப் பாடுவதால் இவர் குதம்பைச் சித்தர் என்ற
பெயர் பெற்றார் .

பெண் குழந்தை இல்லாத குறைக்கு ஆணாய்ப் பிறந்த இவரைப் பெண்
குழந்தை போல அலங்காரம் செய்து மகிழ்வார்களாம். அப்படி அணிகலன்கள்
அணியும் நிலையில் காதில் குதம்பை என்ற ஆபரணத்தை அணிந்
திருக்கையில் அவ்வளவு அழகாகக் காட்சி தருமாம் அந்தக் குழந்தை.
அதனால் அதனை ‘குதம்பை’ என்ற சிறப்புப் பெயராலேயே அழைக்கத்
தொடங்கினார்களாம்.
குதம்பைச் சித்தரின் பாடல்களை மன அமைதியான நேரங்களில் ஆழ்ந்து படித்தீர்கள் என்றால் மெய்பொருள் உங்களுக்கு விளங்கும்
பாடல்கள் பகுதி -1
பூரணங் கண்டோர்இப் பூமியிலேவரக்
காரணம் இல்லையடி குதம்பாய்
காரணம் இல்லையடி.
போங்காலம் நீங்கநற் பூரணம் கண்டோர்க்குச்
சாங்காலம் இல்லையடி குதம்பாய்
சாங்காலம் இல்லையடி.
செத்துப் பிறக்கின்ற தேவைத் துதிப்போர்க்கு
முத்திதான் இல்லையடி குதம்பாய்
முத்திதான் இல்லையடி.
வஸ்து தரிசன மாட்சியாய்க் கண்டோர்க்குக்
கஸ்திசற்று இல்லையடி குதம்பாய்
கஸ்திசற்று இல்லையடி.
பற்றற்ற வத்துவைப் பற்றறக் கண்டோர்க்குக்
குற்றங்கள் இல்லையடி குதம்பாய்
குற்றங்கள் இல்லையடி.
காட்சியாம் காட்சி கடந்த பிரமத்தைச்
சூட்சியாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
சூட்சியாய்ப் பார்ப்பாயடி.
வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை
இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
இட்டமாய்ப் பார்ப்பாயடி.
எங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை
அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
அங்கத்துள் பார்ப்பாயடி.
அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப்
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி.
ஆவித் துணையாகும் ஆராவ அமுதத்தைச்
சேவித்துக் கொள்வாயடி குதம்பாய்
சேவித்துக் கொள்வாயடி.
தீண்டா விளக்கினைத் தெய்வக் கொழுந்தினை
மாண்டாலும் போற்றிடுவாய் குதம்பாய்
மாண்டாலும் போற்றிடுவாய்.
அண்டமும் பிண்டமும் ஆக்கிய தேவனைத்
தெண்டனிட்டு ஏத்தடியே குதம்பாய்
தெண்டனிட்டு ஏத்தடியே.
விந்தை பராபர வத்தின் இணையடி
சிந்தையில் கொள்வாயடி குதம்பாய்
சிந்தையில் கொள்வாயடி.
விண்ணொளி யாக விளங்கும் பிரமமே
கண்ணொளி ஆகுமடி குதம்பாய்
கண்ணொளி ஆகுமடி.
பத்தி சற்றில்லாத பாமர பாவிக்கு
முத்திசற்று இல்லையடி குதம்பாய்
முத்திசற்று இல்லையடி.
எல்லாப் பொருளுக்கு மேலான என்தேவைச்
சொல்லாமற் சொல்வாயடி குதம்பாய்
சொல்லாமற் சொல்வாயடி.
எந்த உயிர்க்கும் இரைதரும் ஈசனைச்
சந்ததம் வாழ்த்தடியோ குதம்பாய்
சந்ததம் வாழ்த்தடியோ.
காணக்கிடையாத கற்பாந்த கல்பத்தை
நாணாமல் ஏத்தடியே குதம்பாய்
நாணமற் ஏத்தடியே.
அணுவாய் பல்அண்டமாய் ஆனசிற்சோதியைத்
துணிவாய்நீ போற்றடியோ குதம்பாய்
துணிவாய்நீ போற்றடியோ.
மாணிக்கக் குன்றிற்கு மாசற்ற சோதிக்குக்
காணிக்கை நன்மனமே குதம்பாய்
காணிக்கை நன்மனமே.
-தொடரும்
ஸ்ரீ குதம்பைச் சித்தருக்கு சென்னை -தாம்பரம் -மாடம்பாக்கத்தில் ஸ்ரீ தேனுகாம்பாள் சமேத ஸ்ரீ தேனுபுரிஸ்வரர் சிவாலயம் அருகில் http://anaathee.blogspot.in/2013/04/blog-post_2.html
உள்ள 18 சித்தர்கள் ஆலயத்தில் தனி சன்னதி கொண்டு நாடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்
நமசிவாய சிவாயநம சிவயசிவ சிவசிவ
நமசிவாய சிவாயநம சிவயசிவ சிவசிவ
நமசிவாய சிவாயநம சிவயசிவ சிவசிவ

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " குதம்பைச்சித்தர் "

Your Comment Has Been Published!