குண்டானவர்களுக்கு பல வியாதிகள் வரும். மாரடைப்பு உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் இவைகளுக்கு முக்கிய காரணம் அதிஸ்தூலம் (Obesity).
உணவு, தண்ணீர், வாழ்க்கை முறை மாற்றங்களால் ஒபிசிடியை குறைக்கலாம்.
உங்களின் எடை குறைக்கும் முயற்சிகளுக்கு முற்றிலும் யோகாசனங்கள் உதவும்.
சரியாக மூச்சு விடும் பயிற்சி
சௌகரியமாக உட்காரவும் (அ) படுத்துக் கொள்ளவும் ஆழமாக மூச்சு விடவும்.
சுவாசிக்கும் போது அடிவயிறும் மார்பும் அசைவதை கவனிக்கவும். மூச்சு 2 (அ) 3
விநாடிகளில் வெளியேறும்.
மூச்சை வெளியேற்றும் போது அடிவயிற்றை உள்ளிழுக்கவும் இழுக்கும் போது மூச்சை
அடக்கிக் கொள்ளக் கூடாது. நார்மலாக சுவாசித்துக் கொண்டு அடிவயிற்றை
உள்ளிழுக்கவும்.
மூச்சை உள்ளிழுக்கும் போது, அடிவயிற்றை உள்ளிழுக்கும் நிலையில் வைத்து,
மார்பில் மூச்சை உள்ளிழுக்கவும். அடிவயிற்றை மூச்சினால் உப்பாமல்
பார்த்துக் கொள்ளவும். நுரையீரலுக்குள் உள்மூச்சை செலுத்தும் போது,
உதரவிதானம் விரிவடைய வேண்டும்.
மேற்சொன்ன முறை யோகாசனங்கள் செய்யும் போது பழக்கப்படுத்திக்
கொள்ளவும்.
யோகாசனங்கள்
இவற்றை தேர்ந்த குருவிடம் கற்றுக் கொண்ட பிறகு செய்யவும். ஒபிசிடியை குறைக்க உதவும் ஆசனங்கள்.
ஹலாசனம்
பத்தகோனாசனம்
கூர்மாசனம்
மத்ஸ்யேந்திராசனம்
பஸ்சிமோஸ்தாசனம்
ஹனுமானசம்
மூலபந்தாசனம்
சர்வங்காசனம்
புஜங்காசனம்
தநுராசனம்
மயூராசனம்
சக்ராசனம்
சவாசனம்.
பிராணயாமம் செய்வது நல்லது. பிராணயாமம் மற்றும் யோகாசனங்ளை தினமும் 30 நிமிடங்களாவது செய்யவும்.
No Comment to " உடல் எடை குறைய யோகா "
Your Comment Has Been Published!