அதிமதுரம் மருத்துவ பயன்கள்

By Unknown → சனி, 12 ஏப்ரல், 2014
Advertise
அதிமதுரம் மருத்துவ பயன்கள்

சர்க்கரையை விட 50 மடங்கு இனிப்பான பொருளை தெரியுமா? அது தான் அதிமதுரம்! உலகின் சில பகுதிகளில் குழந்தைகள், மிட்டாய் போல் அதிமதுர வேரை சுவைக்கின்றனர். இனிப்பது மட்டுமல்ல, அதிமதுரம் ஆயுர்வேதத்தில் முக்கியமான மருந்து. சக்தி வாய்ந்த 'டானிக்'! தவிர மேலும் பல மருத்துவ குணங்கள் கொண்டது.
அறிமுகம்
அதிமதுரம் 1.5 மீட்டர் உயரம் வரை வளரும் மூலிகைசெடி. நட்டபின் மூன்று (அ) ஐந்து வருடங்கள் விட்டு அறுவடை செய்யப்படும். இந்த வருடங்களில் அதன் வேர்கிழங்குகளும் வேர்களும் பரவலாக, முழுமையாக வளர்ந்திருக்கும். பயன்படும் பாகங்கள் - வேர்த்தண்டு கிழங்கு  மற்றும் வேர்கள். தண்டு கிழங்கு பூமியின் கீழ் 3-4 அடிகளில், பரவலாக கிடைக்கும்.
அதிமதுரத்தின் தாயகம் மத்திய தரைக்கடல் பிரதேசங்கள் எனப்படுகிறது. தென் ஐரோப்பிய பகுதிகள், சிரியா, இராத், துருக்கி, கிரீஸ் மற்றும் ரஷ்யாவில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மற்றும் தென்னிந்தியாவிலும் பயிரிடப்படுகிறது.
பழங்கால கிரேக்கர்களுக்கு அதிமதுரத்தைப் பற்றி தெரிந்திருந்தது. சீன வைத்தியத்தில் உடலை "புதுப்பிக்கும்" மருந்தாக பயன்பட்டது.
அதிமதுரம் மருத்துவ பயன்கள்
பொதுவாக அதிமதுரம் ஒரு 'நிதானமான' மலமிளக்கி. வழவழப்பானதால் எரிச்சலை தணிக்கும். சுவாச குழாய்களில் கபம் முதலியவற்றை விலக்கும். தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும். ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு மருந்து. நுரையீரலுக்கு சிறந்த டானிக். அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும். அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும்.
தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டைக்கு இதமாகும்.
வயிற்றுப்புண்களுக்கு - அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் - காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண்  குணமாகும். வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாட்பட்ட மூட்டுவலிக்கு இரவு முழுவதும் ஊற வைத்து செய்த அதிமதுர கஷாயம் குடிப்பது நிவாரணமளிக்கும்.
காயங்களுக்கு அதிமதுரப்பொடி + நெய் கலந்து பூசலாம். அதிமதுரக் களிம்பு + வேப்பிலை இலை காயங்களை சுத்தம் செய்யும். அதிமதுர களிம்பு + நெய் கலவை காயங்களை ஆற்றும்.
அதிமதுர வேரின் சிறு துண்டுகளை பாலில் அரைத்து. துளி குங்குமப்பூ போட்டு கலந்து, இந்த கலவையை தலையில் வழுக்கை இருக்கும் இடத்தில் தடவி வரவும். சில வாரங்களில் முடிகள் தோன்றும்.
காலாணிகள்  - அதிமதுரப் பொடியை கடுகெண்ணை (அ) நல்லெண்ணெயில் குழைத்து காலாணிகள் மேல் போட்டால், அவை உதிரும்.
மலச்சிக்கல் - அதிமதுரப் பொடியை வெல்லத்துடன் தண்ணீருடன் எடுத்துக் கொள்ளலாம்.
அதிமதுரம் ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆசாரியர் சுஸ்ருதர் அதிமதுரத்தை அதிமுக்கியமான மூலிகையாக குறிப்பிடுகிறார். அலோபதி வைத்தியத்திலும் அதிமதுரப் பொடி பிரபலம்.

எச்சரிக்கை
அதிக ரத்த அழுத்தம் உடையவர்கள் ஜாக்கிரதையாக, டாக்டரின் ஆலோசனைப் படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதர உபயோகங்கள்

  • உணவு தயாரிப்பில் சுவையும் மணத்தையும் அதிகரிக்க அதிமதுரம் பயன்படுகிறது. ஐஸ்கிரீம், மிட்டாய்கள், சிரப்புகள் மற்றும் கேக் போன்ற 'பேக்' செய்தவை முதலியவற்றில் அதிமதுரம் பயனாகிறது.
  • ஒரு தேக்கரண்டி அதிமதுரம் வேர்ப்பொடி கலந்த பாலை வெறும் வயிற்றில் காலையில் அருந்தவும்.
  • சோகையுள்ளவர்கள் அதிமதுர பொடி (அ) கஷாயத்துடன் தேன் சேர்த்து பருகவும்.
  • ஒரு கப் பசும்பாலுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து குடிக்க, தாய்ப்பால் பெருகும்.
  • ஆசாரியர், சரகர் அதிமதுரப் பொடி (10 கி)யுடன் தேன் கலந்து உண்டு பிறகு பாலுடன் குடித்து உண்டு வர காதல் உணர்வுகள் பெருகும் என்றார்.
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " அதிமதுரம் மருத்துவ பயன்கள் "

Your Comment Has Been Published!