போகர்

By Unknown → செவ்வாய், 27 மே, 2014
Advertise
போகர் வடித்த ஸ்ரீ தண்டாயுதபாணி நவபாஷாண திருமேனி வரலாறு..!
பதினெண் சித்தர்களில் ஒருவராகப் போற்றப்படும் போகர் பெருமான் ககன குளிகையின் மூலம் விண்வெளியில் பறந்து செல்லும் ஆற்றல் பெற்றவர்.
இவர் ஒருமுறை வெளிநாட்டிலுள்ள மூலிகைகளை ஆராய்ந்து அறிவதற்காக நாடு விட்டு நாடு பறந்து சென்ற போகர் சீன தேசத்தில் இறங்கி ஆய்வுகள்
செய்யத் தொடங்கிய போது இவ்வுலகின் சாதாரண மக்களைப் போல் இல்லற வாழ்வில் ஈடுபட்டு அங்கேயே வசிக்கத் தொடங்கி விட்டார்.
இதனால் அவரிடமிருந்த அற்புத சக்திகளும்,ஆற்றல்களும், ஒவ்வொன்றாய் மறைந்தது.போகருடைய சித்திகள் எல்லாம் சக்தி இழந்து போய்விட்டது.
போகரிடம் சீடராக இருந்தவர்களில் "புலிப்பாணி"மிகவும் விசுவாசத்துடன் பிரியமான சீடனாக இருந்து வந்தார். அதனால் அவருக்கு அனைத்து விதமான சித்துக்களையும் கற்றுக்கொடுத்திருந்தார் போகர் பெருமான்.
தமது குருவிற்குத் தெரிந்த அனைத்து சித்துக்களும் தமக்கு கைவரப்பெற்ற பிறகும் கூட புலிப்பாணி தமது குருநாதரை விட்டுப் பிரியாமல் இருந்தார். அப்படிப்பட்ட நிலையில்தான் மூலிகைகளின் ஆய்விற்கு சீனாவிற்குச் சென்ற தமது குரு நெடு நாட்களாகியும் திரும்பாதது கண்டு கவலை அடைந்தபுலிப்பாணி குருநாதரைத் தேடி ஆகாய மார்க்கமாய் புறப்பட்டுச்சென்று சீனாவில் கண்டறிந்து சக்தியிழந்த நிலையில் இருந்த அவரை மீட்டு தமது முதுகின் மீது ஏற்றிக்கொண்டு
ஆகாய மார்க்கமாக தங்களது இருப்பிடமான பழனி மலை அருகிலுள்ள "கன்னி வாடி" மலையை வந்தடைகிறார்.
தனது குருவான போகர் சகல விதமான சித்திகளின் ஆற்றலை இழந்து சாதாரண மனிதனைப் போல் இருப்பதைக்கண்டு புலிப்பாணி துயரமுற்று கண்ணீர் விட போகர் அவரைத்தேற்றி
சீடனே !எனது அருளாலும்,ஆசியாலும் உனக்கு அஷ்டமாசித்திகளும் கைவரப்பெற்றுள்ளன.நீ அவற்றை எனக்கு குருவாக இருந்து போதித்து விட்டால் நான் மீண்டும் எல்லாம் வல்ல சித்தனாக ஆகி விடுவேன் என்று கூற புலிப்பாணி ஆறுதல் பெற்றாலும்,தமது குருவை சீடனாக ஏற்க மனம் தடுமாறுகின்றார்.
அப்போது போகர் தந்தைக்கு உபதேசித்த முருகப் பெருமானின் கதையைச் சொல்ல புலிப்பாணி ஆறுதல் அடைகின்றார். பிறகு இருவரும் ஒரு முடிவிற்கு வருகின்றனர். அதன்படி ஒரு தண்டம்
ஒன்றை நிறுவி அதற்கு புலிப்பாணி அனைத்து கலைகளையும் உபதேசிக்க அதன் அருகில் அமர்ந்து போகர் கேட்டு எல்லா வித சித்துக்களும் மீண்டும் கைவரப்பெறுகிறார்.
அதன் பிறகு உலக மக்கள் அனைவரும் நோய்களில் இருந்து சுலபமாக நிவாரணம் பெரும் விதமாக "நவபாஷாண முருகன்" திரு உருவ சிலையை வடிக்கின்றார்.அதற்கு புலிப்பாணியின்
மூலமாக தாம் சித்து நிலையை அடைந்ததை நினைவு கூறும் பொருட்டு தாம் அமைத்த நவபாஷாண விக்ரகத்திற்கு போகர் "தண்டாயுதபாணி"என்று பெயர் சூட்டினார். இப் பெயரையே
மக்களும் தங்களின் குழந்தைகளுக்கு முருகப் பெருமானின் பெயராக சூட்டி மகிழ்கின்றனர்.
முருகப் பெருமானின் நவ பாஷாண திருமேனி ஆண்டிக் கோலத்தில் தண்டத்தை தாங்கிய திரு உருவமாக உள்ளது.
தண்டம் -கழி -கம்பு
ஆயுதம் -ஆயுதம் போல் உள்ளதால்
பாணி - புலிப்பாணி
போகர் பெருமான் தான் வடித்த விக்ரகம் மனிதகுல சமுதாயம் தொடர்ந்து பயன்பெற வேண்டுமென்ற நோக்கில் பழனி மலையில் பிரதிஷ்ட்டை செய்தார்.இத்திரு உருவச் சிலையில் அபிஷேகம் செய்கின்ற விபூதி, சந்தனம், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், சிலையின்
"நவபாஷாண கட்டு மருந்தின்"சத்தைப் பெற்று பிரசாதமாக மாறுகின்றது. இதனை உட்கொள்வதால் உடலில் உள்ள நாட்பட்ட கொடிய நோய்களையும் போக்குகின்றது.
இப்படி ஆயிரக்கணக்கான வருடங்களாக மக்களை கொடிய பிணிகளில் இருந்து மீட்டு வந்த தண்டாயுதபாணி நவபாஷாண திருமேனியின் பல இடங்களில் சிதிலம் அடைந்து விட்டதால்
இப்போது அபிஷேகங்கள் முன்பு போல் செய்வதில்லை.
இப்போது தேவஸ்தானம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் கலப்படமில்லா ஒரிஜினல்) பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகின்றது. இப்போது
மூலவருக்கு.. (நவ பாஷாண தண்டாயுதபாணி முருகனுக்கு)
ஆறு கால பூசை -
பதினாறு வித அபிஷேகம் -
எட்டு வித வேடம் -
1-சாது,
2-சன்னியாசி,
3-வேடர்,
4-விருத்தர்,
5-சண்முகர்,
6-சுப்பிரமணியர்,
7-வேதியர்,
8-இராஜ அலங்காரம்,
என எட்டு வித அலங்காரம் செய்யப்படுகின்றது.
நவபாஷாண முருகனின் திருமேனியில் இராக்கால பூசையின் போது சந்தனக் கட்டையை அரைத்து சிரசில் வைத்து விடுவர்.
அதிகாலை "விழா பூசை"யின் போது "கவ்பீன தீர்த்தம்"மற்றும் சிரசில் வைத்த சந்தனமும் வழங்குவர்.இது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். இதனைப் பெறுபவர் வாழ்வில் அனைத்து
துன்பங்களும் நீங்கி, சந்தோசமும், மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றமும் பெறுகின்றனர்.

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " போகர் "

Your Comment Has Been Published!