சுடரான
சுழுமுனையில் சந்திரன் சேர்ந்தால் பஞ்சபூதமும், அறிவும் ஒடுங்கும்.
சூரியன் சேர்ந்தால் ஐம்புலன்களும், அறிவும் ஒடுங்கும். சந்திரனும்,
சூரியனும் சேர்ந்து ஒடுங்கில் அறிவும், தசவாயுவும் ஒடுங்கும். இந்த வாயுவை
நடுநிலையிலும், மூலத்திலும், நாபியிலும், கண்டத்திலும், சுழியிடத்திலும்
சதா நிற்கப் பெற்றவர்களே மெய்ஞானியர்கள் என்பது சித்தர்கள் கூற்று.
சமாதியில் கூடிய சாதகன் இடகலையை பிங்கலையிலும், பிங்கலையை இடகலையிலும்
மாற்றக் கற்றுக் கொண்ட பின், பகல் முழுவதும் இடகலையிலும், இரவில் பிங்கலையிலும் நடத்தப்படுவான்.
இந்த யோகத்தின் போது முதல் தீட்சையாக ரோமத் துவாரங்கள் வழியாக கெட்ட
நீர்கள் வியர்வையாகக் கசியும். இரண்டாவது கட்டத்தில் வாத, பித்த, சிலேத்தும
தோஷங்கள் நீங்கும். மூன்றாவது கட்டத்தில் பழைய கெட்ட உதிரங்கள் கசியும்.
நான்காவது நிலையில் சர்ப்பத்தின் தோல் உரிவது போல் சரீரத்தின் தோல்
உரியும். ஐந்தாம் கட்டத்தில் சட்டை கழன்று தேகம் சிவந்த நிறமாக விளங்கும்.
பஞ்ச மூர்த்திகள் கேட்டதைத் தருவார்கள்.
ஆறாவது நிலையில் சட்டை கழன்று சுழுமுனை வாசல் திறந்து தூரதிருஷ்டி ஏற்படும். ஏழாம் கட்டத்தில் சட்டை வெறுப்பாய் கழன்று தீபம் போல் பிரகாசிக்கும். எட்டாவது நிலையில் இலாகிரியுமாகும். ஒன்பதாவதில் தேகம் சூரியனைப் போல பிரகாசிக்கும். அட்டமா சித்திகளும் ஏற்படும். தேவர்களும் ஏவல் புரிவர். பத்தாவது நிலையில் தேகம் சுடரொளிபோல் பிரகாசிக்கும்.பதினொன்றாவது நிலையில் கத்தியால் வெட்ட முடியாத படிக்கு தேகம் கல்போல் இருகும். பன்னிரண்டாவது கட்டத்தில் சொரூபசித்தி, அண்டத்தில் மௌனம், நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் ஏற்படாது.

No Comment to " பஞ்சபூதமும் "
Your Comment Has Been Published!