பணம் மட்டுமே

By Unknown → செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014
Advertise
பணம் மட்டுமே பிரதாணம் என்ற நிலையில் இந்த பூமியில் மனிதன் செய்யும் தவறுகள் ஏராளம். ஆதி மனிதன் ஓடித் திரிந்த காடுகள் இன்று நம் கண் முன்னே மிக வேகமாக மறைந்து வருகின்றன. பரிணாம வளர்ச்சி எனும் மாயையின் பிம்பத்தைப் பற்றிக் கொண்டு கர்வத்துடன் மனிதன் செய்யும் அட்டூழியங்கள் எண்ணில் அடங்கா.
மனிதன் வாழும் நகரங்கள் நரகமாகிவிடாமல் தடுக்கும் ஒப்பற்ற சேவைகளை செய்து வருவது காடுகள் தான். ஆனால் இவற்றையெல்லாம் மறந்து அக்காடுகளை அழித்து பணம் பார்க்க வேண்டும் என்று எண்ணுகின்றது பகுத்தறிவு பெற்ற மிருகக்கூட்டம்.
காடுகள் காடுகளாக இருக்க வேண்டும் என்றால் அங்கே எது இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் யானைகள் இருக்க வேண்டும். மனிதர்களை விட பன் மடங்கு அறிவாற்றல் பெற்ற யானையை தந்தமும், வால் முடியும் பயக்கும் வியாபாரக் கருவியாக பார்க்கிறான் மனிதன். யானைகள் இல்லையேல் வனங்கள் ரனங்களாகி விடும். ஒரு யானை போடும் சானத்தில் பல்லாயிரம் நுண்ணுயிரிகள் தங்களது வாழ்க்கையைத் தொடங்குகின்றன, பல நூறு பூச்சிகள் தங்களை கதக்தப்பாக வைத்து பாதுகாத்துக் கொள்கின்றன. அது மட்டும் அல்ல பல அரிய வகை தாவரங்களும், மரங்கள் மற்றும் மூலிகைகளும் முளைக்க மூலப்பொருளாக யானையின் எச்சம் உதவுகிறது.
ஆகவே யானைகள் மறைந்தால் காற்றில் பல மரங்கள் மறைந்து போகும், மரங்கள் மறைந்தால் காடு மறையும், காடு மறைந்தால் புச்சிகள் முதல் பல் மிருகங்கள் வரை மறைந்து போகும். இவை அத்தனையும் தொலைத்து தனியாய் மனிதன் வாழ்ந்து விட முடியுமா?
ஒரு யானை தன் உணவு தேடி பல்லாயிரம் மையில்கள் கடந்து கூட்டம் கூட்டமாக சென்று மீண்டும் தன் இடத்திற்கு எந்த இடர்பாடுமின்றி திரும்பி விடும். ஒரு யானையால் தான் இருக்கும் இடத்தில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு யானைக்கு சமிஞ்கைகள் தர முடியும். இவ்வளவு நினைவாற்றலுடனும், அறிவாற்றலுடனும் உணவு தேடி பயணிக்கும் யானை திரும்பி வருவதற்குள் அதன் பாதையில் மனிதன் பிரம்மாண்ட கட்டிடங்களை எழுப்பி விடுகிறான். திரும்பி வரும் யானைகள் வழி தவறி வனத்தில் இருந்து இறங்கி ஊருக்குள் வந்ததும் அது அடுத்த நாள் செய்தித்தாளில் இடம்பெருகிறது “ஊருக்குள் காட்டு யானை அட்டகாசம்” என்று. இது யானையின் தவறா?
ஆம்! இன்று சர்வதேச யானைகள் தினம். யானைகளைக் காப்போம், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வோம்!
- சு யோகேஷ் கார்த்திக், விதை அறக்கட்டளை
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " பணம் மட்டுமே "

Your Comment Has Been Published!