பெருங்காயம் :

By Unknown → புதன், 13 ஆகஸ்ட், 2014
Advertise
செரிமான பிரச்சனையை தீர்க்கும் பெருங்காயம் :-
பெருங்காயத்திற்கு சில மருத்துவ குணங்கள் உண்டு. இது உணவுக்குழாய் வாயுநிலை தடுப்பானாகவும், உணர்ச்சியைக் கிளறிவிடும் தடுப்பானாகவும், நுண்ணுயிர் கொல்லியாகவும், மலமிளக்கியாகவும், சளி நீக்கியாகவும் மற்றும் தூக்க மருந்தாகவும் பயன்படுகிறது. பெருங்காயம் அன்றாடம் சமைக்கும் உணவில் சேர்க்கப்படுகிறது.
செரிமானப் பிரச்சனைகளான வயிற்று வலி, வாயு, குடல் புழுக்கள், வயிற்றுப் பொருமல், எரிச்சல் ஏற்படுத்தும் குடல் புண்கள் போன்ற சிலவற்றை குணப்படுத்த உதவுகிறது. சிறிது பெருங்காயத்தை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து பருகினால், செரிமான தொந்தரவுகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
பெருங்காயத்தின் பயன்பாட்டினால் பெண்களுக்கு மாதவிடாயினால் ஏற்படும் பிரச்சனைகளான வயிற்று வலி, சதை பிடிப்பு, ஒழுங்கற்ற மாதவிலக்குக் காலம் மற்றும் வாய்வுகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பெண்ணுக்கு ஏற்படும் புண்களுக்கும், வெண் கசிவுகளுக்கும் இது சிறந்த மருந்தாக விளங்குகிறது.
பெருங்காயத்தை தேன் மற்றும் இஞ்சியுடன் கலந்து குடித்தால் சுவாசக் கோளாறுகளான வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவைகள் குணமாகும். பெருங்காயம் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. இரத்த சர்க்கரை அளவை குறைக்க, பாகற்காயில் பெருங்காயத்தை சேர்த்து சாப்பிடலாம்.
இந்த வாசனைப் பொருள் நரம்பு உந்தியாக செயல்படும். எனவே இதை நரம்பு தளர்ச்சி நோய், தசை வலிப்பு, மயக்க நிலை மற்றும் இதர நரம்பு சீர்குலைவுகளுக்கு பயன்படுத்தலாம். பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து பருகினால் தலைவலி மற்றும் கடுமையான ஒற்றை தலைவலி நீங்கும்.
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " பெருங்காயம் : "

Your Comment Has Been Published!