
நார்த்தங்காய்: இதை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும், மலச்சிக்கலைப் போக்கும் சக்தி உண்டு.
முருங்கைப் பிஞ்சு: இதை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து இரண்டு வேளை வீதம், 3 நாட்கள் சாப்பிட குணமாகும்.
காரட், பீட்ரூட்: சாப்பிட்டு வந்தால், மஞ்சள் காமாலை குணமாகும். உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
வெண்டைக்காய்: உணவில் அடிக்கடி சேர்த்துவர மூளை பலமடையும், கண்கள் குளிர்ச்சியடையும், எலும்பு பலப்படும்.
பேரிக்காய்: தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், இதய படபடப்பு நின்றுவிடும்.
தக்காளி காய்: இதை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர உடல் வீக்கம் குறையும், தோல் நோய் குணமாகும்.
சேப்பங்கிழங்கு: உண்ணும் உணவில் வாரம் இரு முறை சேர்த்துக் கொண்டால் நரம்புகள் பலப்படும்.
வெள்ளை பூசணி: மூன்று மாசம் தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் இளைத்தவர் பெருக்கலாம். சாறு எடுத்து 100 மி.லி. வீதம் தினமும் சாப்பிட புற்றுநோய் குணமாகும்.
நீர்கடுப்பு, நீர் எரிச்சல்: வெங்காயத்தை, பச்சையாக சாப்பிட்டு தண்ணீர் குடிக்க தீரும்.
பாகற்காய் சாறு: சாப்பிட, சர்க்கரை வியாதி குணமாகும். வற்றல் செய்து வறுத்து உண்டு வர காமாலை, கல்லீரல் குறைபாடு நீங்கும்.
அவரைக்காய்: உணவில் அடிக்கடி சேர்த்து சமைத்து சாப்பிட, இரத்தம் சுத்தமாகும். இரத்த விருத்தி அதிகரிக்கும்.
No Comment to " உடல் வளர்ச்சிக்கு. "
Your Comment Has Been Published!