ஆரஞ்சு

By Unknown → புதன், 10 செப்டம்பர், 2014
Advertise
அழகு ஆரோக்கியம் ஆரஞ்சு
பழங்கள் இயற்கையின் அருட்கொடையாகும். பழங்கள்தான் மனிதர்களுக்கு சமைக்காத உணவு. நன்கு கனிந்த பழங்களில் மனிதனுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்துள்ளன. நோயின் பிடியில் பாதிக்கப்பட்டவர்களும், நீண்ட ஆரோக்கியத்தை பெற விரும்புகிறவர்களும் கண்டிப்பாக தினமும் பழங்களை சாப்பிட வேண்டும்.
சிலர் பழங்களை சாப்பிடாமல் ஜூஸ் செய்து சாப்பிடுகின்றனர். இதில் பழங்களின் முழுமையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல் போய் விடுகின்றன. முடிந்தவரை பழங்களை நேரடியாக உண்பதே நல்லது. பழங்கள் ஒவ்வொன்றும் பல மருத்துவப் பயன்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த இதழில் நமக்கு மிகவும் பரிச்சயமான பழமும், எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழமுமான ஆரஞ்சு பழத்தின் பயன்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.
ஆரஞ்சு பழத்திற்கு கமலா பழம் என்ற வேறு பெயரும் உண்டு. மஞ்சளும் சிவப்பும் கலந்து பந்து போல் அனைவரையும் கவர்ந்திழுக்கும் பழமாகும். அதன் மேல் தோல் நன்கு கனமாக காணப்படும். ஆனால் எளிதில் இதன் தோலை உரித்துவிடலாம்.
ஆரஞ்சு பழத்தின் நறுமணம் அனைவரையும் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது.
ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
100 கிராம் எடை கொண்ட பழத்தில்
நீர்ச்சத்து – 88.0 கிராம்
புரதம் – 0.6 கிராம்
கொழுப்பு – 0.2 கிராம்
தாதுப் பொருள் – 0.3 கிராம்
பாஸ்பரஸ் – 18.0 மி.கிராம்
சுண்ணாம்புச் சத்து – 24.0 மி.கிராம்
கரோட்டின் – 1100 மி.கிராம்
சக்தி – 53.0 கலோரி
இரும்புச் சத்து – 0.2 மி.கிராம்
வைட்டமின் ஏ – 99.0 மி.கிராம்
வைட்டமின் பி – 40.0 மி.கிராம்
வைட்டமின் பி2 – 18.0 மி.கிராம்
வைட்டமின் சி – 80 மி.கிராம்
ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் – வைட்டமின் சி. இது மனித உடலில் இணிடூடூச்ஞ்ஞுண என்ற வளர்ச்சி உண்டாக்கக்கூடிய சத்து கிடைக்கச் செய்கிறது. இந்த இணிடூடூச்ஞ்ஞுண வளரக்கூடிய எலும்புகள் தசை நார்கள், ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும். இது புற்றுநோயைத் தடுக்கக்கூடிய மிக முக்கிய காரணியாகும். மேலும் ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய மிக முக்கிய பொருள் ஆரஞ்சில் உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
ஆரஞ்சு பழத்திற்கு உரிய நிறத்தைக் கொடுக்கக்கூடிய பொருள் இது நுரையீரல் புற்றுநோயைத் தடுக்க வல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
குழந்தை வளர்ச்சிக்கு
குழந்தைகளின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஆரஞ்சு மிகவும் உதவுகிறது. இப்பழத்தை குழந்தைகளுக்கு நேரடியாகவோ அல்லது சாறு எடுத்தோ கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
தூக்கத்தை வரவழைக்கும் மாமருந்து
சிலருக்கு படுக்கைக்கு சென்றவுடன் தான் நேற்றைய, நாளைய பிரச்சனைகள் மனதில் தலைதூக்கும். இதனால் குளிர் சாதன அறையில் நல்ல படுக்கையில் படுத்தாலும் கூட தூக்கம் வராமல் தவிப்பார்கள். அதிகளவு தூக்கம் தரக்குடிய மருந்துகளை சாப்பிட்டாலும் தூக்கமின்றி காணப்படுவார்கள். இவர்கள் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் சுகமான நித்திரை காணலாம்.
மெலிந்த உடல் பலமடைய
பலர் மாதக்கணக்கில் நோயின் தாக்குதலுக்கு ஆட்பட்டு உடல் மெலிந்து காணப்படுவார்கள். இவர்களுக்கு இரத்தச் சோகை உண்டாகியிருக்கும். இதனால் எப்போதும் சோர்ந்தே காணப்படுவார்கள். உடலுக்கு ஊட்டம் தரும் மருந்துகள் டானிக்குகள் என எதைச் சாப்பிட்டாலும் உடல் தேறாமலேயே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் ஏற்ற எளிய டானிக் தான் ஆரஞ்சு பழச்சாறு.
இப்பழத்தின் சாறு எடுத்து அதில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையும் பருகி வந்தால் உடல் தேறும். தேகம் சுறுசுறுப்படையும். புத்துணர்வு பெறும். புது இரத்தம் விருத்தியாகி நல்ல உடல் நிலைக்கு கொண்டுவரும்.
இந்த ஆரஞ்சு பழச்சாற்றினை ஒரு மண்டலம் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் பலமடையும். நரம்புகள் பலம் பெறும்.
மேனிக்கு அழகூட்ட
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம் பளபளப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் இருக்கும். தோல் சுருக்கங்கள் நீங்கும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.
பெண்களுக்கு
மாதவிலக்குக் காலங்களில் அதிக உதிரப் போக்கால் சிலர் சோர்ந்து காணப்படுவார்கள். இதனால் அதிக மன உளைச்சல், எரிச்சல் கொள்வார்கள். இவர்கள் ஆரஞ்சு பழச் சாற்றில் காய்ச்சிய பால் அல்லது தேன் கலந்து அருந்தி வந்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம். ஆரஞ்சு தினமும் உண்பதால் முகத்தில் அழகு கூடும், அதிக தாகத்தைத் தணிக்கும் வாய் நாற்றத்தைப் போக்கும், உடல் வறட்சியை நீக்கும், உடல் சூட்டைத் தணிக்கும், தலைச் சுற்றல் நீங்கும்
பல் உறுதிபட
ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி, ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து இடித்து பல்பொடியாக்கி தினமும் அதில் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " ஆரஞ்சு "

Your Comment Has Been Published!