கல்லீரல் நோய்களைக்

By Unknown → புதன், 10 செப்டம்பர், 2014
Advertise
கல்லீரல் நோய்களைக் குணப்படுத்த - இயற்கை மருத்துவம்...
நம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய பாகமாக கல்லீரலைக் கூறலாம். மிகவும் சென்ஸிட்டிவ்வான உறுப்பான கல்லீரல் நம் உடலில் செய்யும் வேலைகள் பலப்பல! சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. மேலும், புரத உற்பத்திக்கும் இது மிகவும் உதவிகரமாக உள்ளது.
அதே நேரத்தில், கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கிறது. கல்லீரலில் ஏற்படும் நோய்க்கு கல்லீரல் நோய் என்று பெயர். இந்த நோய் ஏற்படுவதை உடல் நலக் குறைவு, வாந்தி, மயக்கம், களைப்பு, எடை குறைவு ஆகிய பல அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். 75%க்கும் மேற்பட்ட கல்லீரல் திசுக்கள் சேதமடையும் போது கல்லீரல் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது. கல்லீரல் முழுவதுமாக செயலிழந்தால் மாற்றுக் கல்லீரல் பொருத்திக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது. கல்லீரலுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளை சில எளிமையான வழிகளின் மூலமே குணப்படுத்தி விடலாம்.
ஆப்பிள் சீடர் வினிகர் ....
ஒவ்வொரு சாப்பாட்டிற்கு முன்னரும் இந்த ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்வது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரைக் கலந்து, அத்துடன் ஒரு ஸ்பூன் தேனையும் கலந்து குடிக்கலாம். தினமும் 3 முறை இதைக் குடித்து வந்தால் கல்லீரல் சுத்தமாகும்.
டான்டேலியன் ரூட் தேநீர்.....
டான்டேலியன் வேரில் தயாரிக்கப்பட்ட டீயை தினமும் இரு முறை குடித்து வந்தால், கல்லீரல் செயல்பாடுகள் அதிகரிக்கும். கொதிக்கும் நீரில் இந்த வேர்களைச் சிறிது சேர்த்து, அந்த நீரை அருந்துவதும் நல்லது.
நெல்லிக்காய்....
வைட்டமின் சி அதிகமுள்ள நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். அதிலும் ஒரு நாளுக்கு 5 நெல்லிக்காய்கள் வரை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வலுவடையும். வேண்டுமானால் தயிர், உப்பு ஆகியவற்றுடன் நெல்லிக்காயைச் சேர்த்து பச்சடியாகவும் சாப்பிடலாம்.
அதிமதுரம்....
சில கல்லீரல் நோய்களுக்கு அருமையான ஆயுர்வேத மருந்தாக விளங்குகிறது அதிமதுரம். இந்த அதிமதுரத்தின் வேரை நன்றாகப் பொடித்து, அதை டீத்தூளுடன் கொதிக்கும் நீரில் போட வேண்டும். சிறிது நேரம் கழித்து, அதை வடிகட்டி குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரு முறை குடிப்பது உசிதம்.
மஞ்சள்....
தினமும் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடலுக்குப் பலப்பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, ஹெப்பாடிட்டிஸ் பி மற்றும் சி ஆகியவற்றுக்குக் காரணமான வைரஸ்கள் பரவுவதை மஞ்சள் தடுக்கிறது. அதற்கு தினமும் பாலுடன் அல்லது ஒரு ஸ்பூன் தேனுடன் அரை ஸ்பூன் மஞ்சளைக் கலந்து குடிக்கலாம்.
ஆளி விதைகள்....
இரத்தத்தில் உள்ள சில ஹார்மோன்கள் கல்லீரலை சில சமயம் சேதப்படுத்துகின்றன. இதைத் தவிர்க்க, ஆளி விதைகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பப்பாளிப் பழம்.....
கல்லீரல் நோய்க்கு பப்பாளிப்பழம் ஒரு அருமையான மருந்தாகும். தினமும் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றுடன் 2 ஸ்பூன் பப்பாளிப்பழச் சாற்றைத் தொடர்ந்து 4 வாரங்கள் சாப்பிட்டு வருவது பலன் கொடுக்கும்.
கீரை, கேரட் ஜூஸ்.....
அரை டம்ளர் கீரை ஜூஸ் மற்றும் அரை டம்ளர் கேரட் ஜூஸ் ஆகியவற்றைத் தினமும் 3 மணிநேரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் ஓடிப் போகும்.
சிகரெட், ஆல்கஹால் வேண்டாம்....
மது அருந்துவது கல்லீரலுக்கு மிகவும் கேடானது. எனவே, கல்லீரல் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மது அருந்துவதை உடனே நிறுத்த வேண்டும். அதேப்போல் சிகரெட் புகைப்பதையும் கண்டிப்பாக நிறுத்த வேண்டும்.
அவகேடோ மற்றும் வால்நட்ஸ்.....
கல்லீரல் நோய்கள் எதுவும் வராமல் இருக்க இந்த இரண்டையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதனால் அவற்றில் உள்ள க்ளுடாதியோன், கல்லீரலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும்
ஆப்பிள், காய்கறிகள்.....
கல்லீரலைக் காப்பாற்ற பசுமையான காய்கறிகளையும், ஆப்பிளையும் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் காய்கறிகள் பித்தநீரை சீராக சுரக்க உதவுவதுடன், ஆப்பிளில் உள்ள பெக்டின் செரிமான பாதையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.
ஃப்ளூரைடுக்கு 'நோ'.....
ஃப்ளூரைடு கலக்காத நீரை தினமும் 12 டம்ளர் வரை அருந்துவது, கல்லீரலுக்கு நல்லது.
உடற்பயிற்சி.....
தினமும் குறைந்தது 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து வந்தால், நன்றாக செரிமானம் ஆகும்; நிறைய வியர்க்கவும் செய்யும். இவ்விரண்டும் கல்லீரல் பாதிப்படைவதை வெகுவாகத் தவிர்க்கும். மேலும் வாரத்திற்கு 5 முறையாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
க்ரீன் டீ ....
இதில் நிறைய கேட்டச்சின்கள் இருப்பதால் கல்லீரலுக்கு மிகவும் நல்லது. தினமும் 3 முதல் 4 கப் க்ரீன் டீயைக் குடித்து வந்தால், கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
பால் நெருஞ்சில் விதை (மில்க் திஸ்ல் ஸீட்ஸ்) .....
பால் நெருஞ்சில் என்று அழைக்கப்படும் மூலிகை பலவிதமான ஈரல் நோய்களைக் குணப்படுத்த வல்லது. வைரல் ஹெப்பாடிட்டிஸ், கைரோசிஸ், ஆல்கஹாலிக் ஹெப்பாடிட்டிஸ் உள்ளிட்ட பலவற்றிற்கும் அருமையான மருந்தாக இம்மூலிகை விளங்குகிறது. தினமும் இருமுறை 900 மில்லிகிராம் அளவில் இந்த மூலிகையை சாப்பாட்டின் போது எடுத்துக் கொள்வது நல்லது.
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " கல்லீரல் நோய்களைக் "

Your Comment Has Been Published!