எண்ணிலடங்கா அதிசியத்தையும், ஆச்சர்யத்தையும் நமது சித்தர்கள் நமக்கு காட்டிசென்றுள்ளனர். உணவே மருந்தாகச் செய்து நமது வாழ்வை ஆரோக்கியமாக வாழ வழி செய்தனர். சித்தர்களின் வழியை தற்போதைய அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. அதில் ஒன்றுதான் நாம் பார்க்க இருப்பது.
கறிவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து (Lipophilic) சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் முழுமையாக உடலைச் சென்றடையும். கறிவேப்பிலையைத் தாளிதம் செய்யும்போது மிக லேசாக எண்ணெயில் வதக்க வேண்டும். இல்லை எனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆவியாகி பலன் இல்லாமல் போய்விடும்.
‘கறிவேப்பிலையையும் கடுகையும் ஒன்றாகச் சேர்த்து தாளிப்பதினால் நன்மை உண்டா?’ என்பதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலையும் கடுகும் இணைந்து உடலில் உள்ள திசுக்களை அழிவில் இருந்து பாதுகாப்பதாகவும் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free radicals) உருவாவதைத் தடுப்பதாகவும் கண்டுபிடித்து உள்ளனர். உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் கறிவேப்பிலையும் பொட்டுக்கடலையும் சம பங்கு கலந்து, பொடியாக்கிப் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டுவரலாம்
இனிமேலாவது, கறிவேப்பிலையைத் தூக்கித் தூர எறிந்துவிடாமல் நன்றாக மென்று சாப்பிடுங்கள்!
ஒரு சிறிய விஷயத்தில் இத்தனை நல்லனவற்றை வைத்த சித்தர்கள் வாழ்க. அனால் இதை அவர்கள் எவ்வாறு கண்டுபிடித்தனர் என்பதே விடைதெரியாத கேள்வி.

No Comment to " உணவும் மருந்தும் "
Your Comment Has Been Published!