Browsing "Older Posts"

இரத்த உற்பத்திக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம்.
உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம்.
நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும். பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்..
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.
உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம்.
நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும். பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்..
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.
உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம்.
நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும். பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்..
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்
http://kulasaivaralaru.blogspot.in/

இரத்த உற்பத்திக்கு

By Unknown → புதன், 29 அக்டோபர், 2014
பப்பாளி
...............
பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
................................
பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
..............................
பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
.................................
நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
...............................
பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
..........................
பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
..............................
பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
................................
பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
................................
பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
..............................
பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
..................................
பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
....................................
பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
..........................................

பப்பாளி

By Unknown →
கொலஸ்ட்ரால் பற்றிய மேலும் சில துளிகள்.
கொலஸ்ட்ரால் வருவது எப்படி?
கொலஸ்ட்ரால் - நாம் சாப்பிடும் சில உணவு வகைகள், மன அழுத்தம், பழக்க வழக் கங்களால் ஏற்படும் கொழுப்பு இது. ரத்தத்தில் ஓரளவு வரை கொழுப்பு சேரலாம்; ஆனால், அளவு மிஞ்சினால் ஆபத்து தான். அப்போது தான் அது இதயம் வரை லொள்ளு செய்ய ஆரம்பித்து விடுகிறது. ரத்தத் தில் சேரும் கொழுப்பு, சிறிது சிறிதாக அதிகமாகி, இதய ரத்தக்குழாயில் உள்ள சுவருடன் ஒட்டி, அதை தடிமனாக் குகிறது. அப்போது ரத்தம் சீராக போக முடியாமல் போகிறது. அதனால், ரத்தம் கட்டி விடுகிறது. அப்படி கட்டிவிடும் போது, ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. ரத்தக் குழாயில் அடைப்பு ஏற் பட்டால், இதய பாதிப்பு வருகிறது; மாரடைப்பு ஏற்படுகிறது.
நல்ல கொலஸ்ட்ரால் கொழுப்பு வேறு; கொலஸ் ட்ரால் வேறு; ஆனால், கொழுப்பில் இருந்து பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது தான் கொலஸ்ட் ரால். ஓரளவு கொழுப்பு , நம் உடலுக்கு நல்லது மட்டுமல்ல; செல்கள், உறுப்புகள் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக உதவுகிறது. அதே கொழுப்பு, அதிகரிக் கும் போது, கெட்ட கொழுப் பாக மாறுகிறது. அப்போது தான் கொலஸ்ட்ரால் என்று கணக்கிடப்படுகிறது.
இரு வகை கொழுப்பு
எல்.டி.எல்: "லோ டென் சிட்டி லிப்போப் ரோட் டீன்ஸ்' என்று அழைக்கப்படும் எல்.டி.எல்., கொலஸ்ட்ரால், மிக ஆபத்தானது. அதிக அளவில் ரத்தத்தில் சேர்ந்தால், ரத்தக்குழாய் சுவரில் படிந்து, அதை அடைக்கிறது. ரத்தக்குழாய் அடைப்புக்கு இது தான் முக்கிய காரணம்.
எச்.டி.எல்: "ஹை டென்சிட்டி லிப்போப்ரோட்டீன்' என்று அழைக்கப்படும் அதிக அடர்த்தி உள்ள கொலஸ்ட்ரால். இது உடலில் அதிகமாக சேர்ந்தாலும், கல்லீரலுக்கு போய், அங்கிருந்து கழிவாக வெளியேறி விடும்.
ட்ரைகிளிசரைட்ஸ்:
இது மூன்றாவது வகை கொழுப்பு. தசைநார்களுக்கு எனர்ஜியை தரும் இது, அதிகமாகும் போது கொழுப்பாகி, ரத்தத்தில் சேர்கிறது. இதய பாதிப்பு வரும் போது, ரத்தத்தில் இதன் அளவும் சரிபார்க்கப்படுகிறது.
உணவால் தான்...
கொலஸ்ட்ரால் ஏற்பட காரணம் பல உண்டு என்றாலும், நாம் சாப்பிடும் உணவால் தான் ஏற்படுகிறது. கொழுப்புஉணவால், உடலில் கொழுப்பு அதிகமாகி, ரத்தத்தில் கொலஸ்ட்ராலாக சேர்கிறது. வயிறு வழியாக உணவு சென்றவுடன், கல்லீரலில் கொழுப்பு பிரிந்து, கொலஸ்ட்ராலாக ரத்தத்தில் சேர்கிறது.
200க்கு மேல் உஷார்
*கொலஸ்ட்ரால் எல்லாருக் கும் இருக்கும்; அது 200 க்குள் இருக் கும் வரை பிரச்னை பண்ணாது.*ஆபத்தான அளவு என்பது 200ல் இருந்து 239 வரை. அப்போது கண்டிப்பாக விழித் துக்கொள்ள வேண்டும்.
*240 ஐ தாண்டி விட்டால், இனியும் சும்மா இருந்தால், அவ்ளோ தான். அலட்சியம், விபரீதத்துக்கு வழி வகுத்து விடும்.
*200, 240 என்றெல்லாம் சொல்லப்படுவது என்ன தெரியுமா? ஒரு டெசிலிட்டர் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மில்லி கிராம் தான்.
*எல்.டி.எல்.,எச்.டி.எல்.,மற்றும் ட்ரைகிளிசரைட்ஸ் ஆகியவற்றிலும் இந்த அளவு உண்டு. எல்.டி.எல்.,130க்குள் இருக்க வேண்டும்; எச்.டி.எல்.,60 க்கு மேல் இருக்க வேண்டும். ட்ரைகிளிசரைட்ஸ் 200 க்கு கீழ் இருக்க வேண்டும்.
பக்கவாதம் எப்படி?
இதய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால், மாரடைப்பு வருகிறது. அதுபோல, மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால், பக்கவாதம் ஏற்படுகிறது. உடலில் நரம்புகள் இயங்கினால் தான் கை, கால்கள் இயங்குவது, வாய் பேசுவது , நடப்பது, மடக்குவது போன்றவை செய்ய முடியும். ரத்தம் சீராக செல்லாமல் போனால், மூளைக்கும் ஆக்சிஜன், சத்துக்கள் பாதிக்கப் பட்டு விடுகிறது; அதனால், அதன் இயக்கம் தடைபடுகிறது. அதனால், பக்கவாதம் ஏற்படுகிறது.
1.A. ஆரோக்கியமான ரத்தக்குழாய் இது. உயர் அடர்த்தி வாய்ந்த எச்.டி.எல்., கொலஸ்ட்ரால், ரத்தக்குழாயில் சென்று, மற்ற கொலஸ்ட்ராலையும் வெளியேற்றி, கழிவாக மாற்றி விடுகிறது.
1.B.ரத்தக்குழாய் சுவரில் படிந்திருப்பது தான் கெட்ட கொலஸ்ட்ரால். இது தான் ரத்தம் செல்வதை பாதித்து, ரத்தக்கட்டியை உருவாக்குகிறது.
மாரடைப்பு வருவது எப்படி?
இதயத்துக்கு ரத்தக்குழாய் மூலம் ரத்தம் வழியாகத்தான் ஆக்சிஜன், மற்ற சத்துக்கள் செலுத்தப்படுகின்றன. ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால், ரத்தம் சீராக செல்வது தடைபடும்; ஆக்சிஜன், சத்துக்கள் செல்வது பாதிக்கப்படும். இதயத்தை எந்நேரமும் இயங்க செய்யும் இதய தசைகள் கடுமையாக பாதிக்கப்படும்; அது செயலிழக்கும் போது, இதயத்துடிப்பு பாதிக்கப்படுகிறது. அதன் அளவு சீராக இல்லாமல் போகிறது. இப்படி எல்லாம் தடைபடும் போது, மாரடைப்பு வருகிறது.
-------------------கொழுப்பை குறைக்கும் பப்பாளி-----------------------------------------
எல்லோரும் விரும்பி சாப்பிடும் பப்பாளிப் பழம் நிறைய சத்துக்கள், மருத்துவ குணங்கள் கொண்ட பழமாகும். பெரும்பாலும் கோடைகாலம்தான் இந்த பழத்திற்கான சீசன்.
இந்த பழத்தில் கிடைக்கும் சில பயன்கள்:
1. இதில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது.
2. பப்பாளியில் உள்ள பேராக்ஸ்நேஸ் என்ற தாதுப்பொருள் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
3. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு லேகியங்களைவிட, பப்பாளிப் பழம் ஒரு அருமையான மருந்து. இதை தவறாமல் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வரவே வராது.
4. அல்சர் தொல்லை உள்ளவர்கள் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம்.
5. பப்பாளியில் `பப்பைன்' என்ற தாது பொருள் உள்ளது. இந்த பப்பைன் மேலை நாடுகளில் மாட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சியை பதப்படுத்த உபயோகிக்கப்படுகிறது.
6. பப்பாளிப் பழத்தில் காணப்படும் வைட்டமின் `ஈ' குடல் பகுதியில் கேன்சர் வராமல் தடுக்கிறது.
7. பப்பாளிப் பழத்தை கூழாக்கி வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், சொரசொரப்பு தன்மை மாறி முகம் பளப்பளப்பாக மாறிவிடும்.
8. கிட்னியில் கல் இருப்பவர்கள் பப்பாளிப் பழத்தை தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் அடையலாம்.
9. சிலருக்கு அதிக புரோட்டின் நிறைந்த உணவு சாப்பிட்டால் செரிக்காமல் வயிறு கோளாறு ஏற்படும். அப்படி உள்ளவர்கள் உணவுக்குப்பின் இந்த பழத்தை சாப்பிட்டால் உணவை விரைவில் செரிக்க வைக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------------
நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!
இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். ( HDL) கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும்.
நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.
சோம்பலை உதற முடியும்!
காலையில் எழுந்தது முதல் சுறுசுறுப்பாக விழிப்புடன் ஒருவர் பணி புரியவேண்டும் என்றால், அவர் உடலில் இரும்புச்சத்து போதுமான அளவில் இருக்க வேண்டும். இரும்புச் சத்து குறையும்போது உடல் பலவீனம் அடையும். இரும்புச் சத்துதான் ஆக்ஸிஜனை சுமந்து சென்று எல்லா உறுப்புகளுக்கும் விநியோகித்து உடலுக்குச் சக்தியைத் தருகிறது. முக்கியமாக மூளையில் டோப்பாமைன் என்ற இரசாயனப் பொருள் சுரந்தால், மனதும் உடலும் விழிப்புணர்வுடன் செயல்படுகின்றன. இதற்கும் இரும்புச் சத்துதான் தேவை.
மாதவிலக்கின் போது பெண்கள் உடலில் இரும்புச்சத்து குறைவதால் மிகவும் களைப்புடன் இருப்பார்கள். உடற்பயிற்சியின் போதும் இந்தச் சத்து உடலில் குறைகிறது. ஐந்து உலர்ந்த திராட்சைப் பழம், ஆரஞ்சுச் சாறு, ஒரு வாழைப்பழம் முதலியவற்றை தினமும் சாப்பிட்டால் போதும். இதன் மூலம் உடலில் இரும்புச் சத்து எளிதாகக் கிகிக்கப்படும். உடலும் மனமும் படு சுறுசுறுப்பாக நாள் முழுவதும் இருக்கும்.
சக்தி வாய்ந்த உணவு மருந்துகள்
சோர்வை அகற்றும் பழம் எது?
நான்கு பேரீச்சம் பழங்களை எடுத்து நன்கு கழுவி அரை டம்ளர் தண்ணீரில் போட்டுவிட்டு இரவில் படுக்கைக்குச் செல்லுங்கள். காலையில் கொட்டைகளை நீக்கிவிட்டு ஊறிய பேரீச்சம் பழங்களையும் அந்தத் தண்ணீரையும் அருந்துங்கள். வாரம் இரு தினங்களில் இது போல் சாப்பிட்டு வந்தால், சோம்பல் எட்டியே பார்க்காது. மாணவ மாணவிகளுக்கு இது ஒரு சுறுசுறுப்பு டானிக்!
தலைவலியை முன்கூட்டியே தடுக்க முடியும்!
நமது உடலின் லைசின் என்ற அமினோ அமிலம் குறைந்தால், தலைவலிக்கு வரவேற்புக் கொடுத்த மாதிரிதான். லைசின் குறையாமல் பாதுகாத்து வருகிறது வைட்டமின் சி. இதைத் தடுக்க தினமும் இந்த வைட்டமின் மாத்திரையை டாக்டர் யோசனைப்படி சாப்பிடலாம். இதைவிடச் சிறப்பு சி வைட்டமின் அதிகமுள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்தால் தலைவலி வராது. அந்த உணவுகள், பட்டாணி, சோளம், உளுத்தம் பருப்பு, முருங்கைக்கீரை மற்றும் காய், முட்டைக் கோஸ், பாகற்காய், நாட்டு நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்சுச்சாறு, தேங்காய், தேங்காய்ப்பால், ஆட்டு ஈரல், பால்கோவா, நல்ல பசும்பால் ஆகியவற்றில் போதுமான அளவு வைட்டமின் ‘சி’ உள்ளது.
கருத்தரிக்க வழி!
மூலிகைக் கடைகளில் அமுக்கிரா பவுடர் (இதுதான் உண்மையில் வாயாக்ராவாக உருவெடுத்துள்ளது) கிடைக்கிறது. மாதவிலக்கு முடிந்த மறுநாளிலிருந்து தினமும் இரவில் பாலுடன் இந்தப் பவுடரில் ஆறு கிராம் பவுடரைச் சேர்த்து அருந்த வேண்டும். இதன் மூலம் கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படலாம்.
மேலும், சில பெண்களுக்கு அபார்ஷனைக் கூடத் தடுத்துவிடலாம். இதற்கு ஃபோலிக் அமிலம் தேவை. அதற்காகக் கீரை வகைகளில் ஒன்றை பச்சைப் பருப்புடன் சேர்த்துக் சமைத்து பிரசவம் முடியும் வரை, தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வரவும். இதனால் பிரசவத்தில் தொந்தரவு இராது. ஆரோக்கியமான குழந்தையாகவும் பிறக்கும். கருத்தரிப்புத் தாமதமானால் மேற்கண்ட முறைகளுடன் தினமும் கணவனும் மனைவியும் 200 சர்வதேச அலகு வைட்டமின் ஈ மாத்திரையை சாப்பிட வேண்டும்.
ஜலதோஷம் தொடரக்கூடாது!
தொடர்ந்து ஜலதோஷம், மூக்கில் சளி என்றால் தொற்று நோய்க்கிருமிகள் உங்கள் மூக்கு வழியாக உடலுக்குள் பயணித்துக் கொண்டிருக்கின்றன என்று பொருள். எனவே, இதைத் தடுக்க வைட்டமின் சி மட்டுமல்ல, வைட்டமின் உள்ள உணவுப் பொருள்களும் உடனடியாகத் தேவை. வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்றவற்றை மாத்திரைகளாகப் பயன்படுத்துவது நல்லது.
இல்லை எனில், ஜலதோஷம் குணமாகும்வரை இந்த இரு வைட்டமின்களும் தாராளமாக உள்ள தட்டைப் பயறு, சோயா மொச்சை, வெண்ணெய், முட்டைக்கோஸ், முருங்கைக் கீரை, ஆரஞ்சு, மாம்பழம், கேரட் முதலியவற்றை உணவில் நன்கு சேர்த்து வந்தால், ஜலதோஷம் குணமாகி நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
அழகைத் தரும் கீரைகள்!
கேரட், கீரை, முள்ளங்கிக்கீரை, டர்னிப் கீரை, உலர்ந்த திராட்சைப்பழம், பப்பாளி, சீத்தாப்பழம் முதலியன உடலுக்கும் கண்களுக்கும் அழகைத் தருகின்றன. பாதாம் பருப்பும் இந்த வகையில் உயர்வானது. தோல் சுருங்காமல், கண்கள் எரிச்சல் அடையாமல் எப்போதும் புதியனவாகக் காட்சியளிக்க இவற்றில் உள்ள ரிபோஃபிளவின் என்ற வைட்டமினே இந்தப் பணியைச் செய்கிறது.
மலச்சிக்கல் தீர!
பேதி மருந்து சாப்பிடுவதற்குப் பதிலாக 1/4 கிலோ திராட்சையை (அனைத்து இரகங்களும் உகந்தவை) இரவு சாப்பிடலாம். காலைவரை வேறு உணவு வேண்டாம். மலச்சிக்கல் உள்ளவர்கள், ஜீரணக் கோளாறு உள்ளவர்கள் இதே அளவு திராட்சையை வாரம் இருமுறை சாப்பிடவும். இதனால் குடல் முழுவதும் சுத்தமாகும். போனஸாக இதயமும் பலப்படும்!
மேலும் சில துளிகள்.
1. வெந்தயம் அதிக நார் சத்து (50 சதவிதம்) கொண்டவை. இவை சர்க்கரை நோயாளிகளின் இரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையையும், இரத்தத்திலுள்ள அதிக கொலஸ்ட்ராலையும் குறைக்கின்றது.
2. இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும் போது அவற்றுடன் இணைந்து பயன்படுத்தலாம். இப்படி செய்யும்போது விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவிற்கு குறைகிறது. இவைகளை தயார் செய்யும்போது உண்பவரின் ருசிப்புத்தன்மைக்கேற்ப உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம்.
3. இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அதிகளவு இருக்கும்வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம்.
நன்றி கே.எஸ். சுப்ரமணியம்.
நன்றி தமிழ்வணன்.காம்
--------------------------------------------------------------------------------------------------------
பூண்டின் மருத்துவ குணங்கள்
இயற்கை நமக்கு கொடுத்துள்ள பல்வேறு மருத்துவப் பயன்கள் கொண்ட தாவரங்களில் பூண்டு மிகவும் குறிப்பிடத்தக்கது. பூண்டு சாப்பிட்டால் நாற்றம் வீசும் என்பதற்காக சிலர் அதை ஒதுக்கித் தள்ளுகின்றனர். இது முற்றிலும் தவறானது.
1. உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.
2. இதய அடைப்பை நீக்கி இரத்த அழுத்தம் வராமல் காக்கும்.
3. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது.
4. நாள்பட்ட சளித் தொல்லையையும், தொண்டை சதையை நீக்கும்.
5. மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும் சக்தி இதற்க்கு உண்டு.
6. தாய்மார்கள் இதை அதிகம் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். எல்லா பெண்களுக்கும் மாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்கிறது.
7. தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
8. பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.
9. பூண்டின் மருத்துவ சக்தி அபரீதமானது. சளி, ஜலதோஷம், இருமல், தலை பாரம் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக அது திகழ்கிறது.
10. நாக்கில் சுவையின்மை, பசி எடுக்காமை, வயிற்று உப்புசம்,மலச்சிக்கல் போன்ற வற்றுக்கும் இது சிறந்த நிவாரணி ஆகும்.
11. பூண்டு தினசரி சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது என்று ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடைந்த எலும்புகளைக் கூடச் சரி செய்யும் சக்தியும் உள்ளதாம்.
12. வெண் குஷ்டம், குடல் வாயு, கொழுப்பு, சர்க்கரை வியாதி, மூலம், வாத நோய்களுக்கு பூண்டு சரியான மருந்தாகும்.
13. பூண்டின் மகத்துவத்துவம் அறிந்து அதை தினசரி உட்கொள்வது உடல் நலத்துக்கு மிகவும் பயனுள்ளதாகும்.

கொலஸ்ட்ரால்

By Unknown →
புற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்
முற்காலத்தில் வண்ண உணவுகள் மூலம் எளிதில் நோய்களை குணப்படுத்திக் கொண்டார்கள். காலையில் சிவப்பு நிறமுள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டார்கள். காரணம் வளர்சிதை மாற்றத்திற்கு சிவப்பு நிற உணவுகள் அதிகம் உதவுகின்றன. காரட், பீட்ரூட், ஆப்பிள் போன்ற சிவப்பு நிற காய்கள் உடம்பின் வளர்சிதை மாற்றத்திற்கு மட்டுமல்லாது புற்றுநோய் செல்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதிசய சிவப்பு
தினமும் இரண்டு முறை சிவப்பு நிற பழங்களின் கொண்ட ஜூஸ் பருகுவதால் அதிசயிக்கத்த மாற்றங்கள் ஏற்படுவது தெரியவந்துள்ளது.
1) உடம்பில் உள்ள புற்று நோய் செல்களை கட்டுப்படுத்தி புற்றுநோய்க்கான எதிர்ப்பு செல்களை அதிகரிக்கிறது.
2) கல்லீரல், கணையம், சிறுநீரகம் ஆகியவற்றை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதோடு, அல்சர் நோயை குணப்படுத்துகிறது.
3) நுரையீரலை பாதுகாப்பதோடு, உயர் ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.
4) மனித உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
5) கண் தொடர்பான நோய்களை குணமாக்குகிறது.
6) தசை தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது
7) முகப்பொலிவை அதிகரித்து இளமையை நீடிக்கிறது. தோலை பளபளப்பாக வைப்பதில் அக்கறை கொள்கிறது.
8) சீரணமண்டலம், தொண்டை தொடர்பான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
9) பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்துகிறது.
10) காய்ச்சலினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
எப்படி தயாரிப்பது :
இந்த பானத்தை தயாரிப்பது எளிது
காரட்- 1, பீட்ரூட்– 1, ஆப்பிள்– 1
மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து நறுக்கவும். மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து ஜூஸாக்கவும். சுவைக்கு எலுமிச்சை சேர்த்துக்கொள்ளலாம்.
காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை பருகவேண்டும். ஒரு மணி நேரத்திற்குப்பின்னர் காலை உணவு சாப்பிடலாம். மாலையில் 5 மணிக்கு முன்னர் இதனை பருகலாம். உடனுக்குடன் செய்து பருகுவது முக்கியம்.
தினமும் இருவேளை பருகுவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. சிறப்பு மிக்க இந்த பானத்தை உணவியல்துறை நிபுணர்களும் பரிந்துறைக்கின்றனர். இந்த பானம் எடைக்குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த அதிசய பானத்தை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பருகியதன் மூலம் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் குணமாகியுள்ளது தெரியவந்துள்ளது. எனவே அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இன்றுமுதல் இந்த பானத்தை பருகலாம்.

புற்றுநோயை

By Unknown →
பீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் டிப்ஸ்
பீரியட் பிரச்னை பெண்களை பாடாய்படுத்தும் பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது. நாட்கள் தள்ளி போவது, அதிகப்படியான உதிரப்போக்கு, அதிகவலி போன்ற மாதவிடாய் பிரச்னைகளால் பல பெண்கள் அவதிப்படுகிறார்கள். கருப்பையில் அல்லது ஹார்மோனில் வில்லங்கம் ஏதாவது இருந்தால் அதை உணர்த்தும் எச்சரிக்கையாக இந்த பிரச்னை இருப்பதால் இதற்கு உடனே தீர்வு காண வேண்டியது அவசியம் என்கிறார் டாக்டர் சசிக்குமார். அவர் கூறியதாவது: ஒரு காலத்தில் பீரியட்ஸ் டைமில் ஓய்வும், சத்தான உணவும் கிடைத்தது. இப்போது அப்படியில்லை. பிஸியான வாழ்க்கை முறையில் நல்ல ஓய்வு என்பது கனவாகி விடுகிறது. ஹார்மோன் சுழற்சியின் வெளிப்பாடு தான் மாதவிடாய். மாதம் ஒரு கருமுட்டை பெண்ணின் முட்டைப் பையில் இருந்து வெளிப்படும். * இந்தக் கரு குழந்தையாக உருவாகி விட்டால் பீரியட்ஸ் வராது. முட்டை உயிராக மாறாமல், வெளிப்படுவது தான் உதிரப்போக்கு. இந்த சுழற்சிக்கு ஈஸ்ட்ரோ ஜென் மற்றும் புரோஜஸ்ட்ரான் ஆகிய 2 ஹார்மோன்கள் தான் காரணம். வழக்கமாக 28 நாட்களுக்கு ஒரு முறை பீரியட்ஸ் ஏற்பட்டு மூன்று முதல் 5 நாட் கள் வரை உதிரப்போக்கு இருக்கும். இந்தக் காலகட்டத்தில் பீரியட்ஸ் துவங்குவதற்கு முன்பு பெண்ணின் உடலில் சில அறிகுறிகள் தோன்றும். ஒருவிதமான டென்ஷன், கோபம் வருதல், மார்பகங் கள் கொஞ்சம் வீங்கி வலி போன்றவை ஏற்படலாம். சில நேரங்களில் பீரியட்ஸ் லேட் ஆகி தாமதமான உதிரப்போக்கு, வழக்கத்தை விட குறைவாகப் போதல், அதிக உதிரப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதில் அதிக உதிரப்போக்கு முக்கியமான ஒன்று. கருப்பையில் ஏதாவது பைபர் கட்டி கள் அல்லது வேறு கட்டிகள் இருக்கும் பட்சத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்படலாம். ஹார்மோன் அளவு மாறுபாடு, கருப்பையின் உட்புறச் சுவர் தடிமன் ஆவது போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கலாம். இதெல்லாம் சரியாக இருந்தும் கூட சிலருக்கு அதிக உதிரப் போக்கு மற்றும் கட்டியாக உதிரம் போதல் போன்ற தொல்லைகள் இருக்கும்.உதிரப்போக்கு அதிகம் போதல், கட்டியாக உதிரம் வெளிப்படும் போது அதிக வலியிருந்தால் சாதாரணமாக எண்ணி விடக்கூடாது. உடனடியாக கர்ப்பவியல் நிபுணர்களை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும். ஸ்கேன் மற்றும் கருப்பைக்கான பரிசோதனைகள் மூலம் சரியான காரணத்தை கண்டறிய வேண்டியதும் அவசியம். கருப்பைக் கட்டிகளை கண்டுகொள்ளாமல் விடும்போது அவை கேன்சர் கட்டிகளாக மாறும் அபாயம் உள்ளது. எனவே உங்களின் அதிக உதிரப் போக்கு கேன்சருக்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்கிறார் டாக்டர் சசிக்குமார். *** மனரீதியான ஆறுதல்: இளம் வயது முதல் மெனோபாஸ் வரை பெண்களின் பீரியட்ஸ் நேரத்தில் அவர்களது பிரச்னைகளை உடன் இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பீரி யட்சுக்கு முன்பு வரும் டென்ஷனை கணவர்கள் புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கலாம். உடல் சோர்வு, இடுப்பு வலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழக்க மான வேலைகளில் இருந்து முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் சிறிது ஓய்வு தேவை. பீரியட்ஸ் நேரத்தில் வலி, எரிச்சல், வாந்தி உள்ளிட்ட பிரச்னைகள் உள்ள பெண்கள் சரியாக சாப்பிட மாட்டார்கள். இந்த நேரத்தில் உடன் இருப்பவர்கள் அவர்களை சத்தான உணவை சாப்பிட செய்வது அவசியம். ஒவ்வொரு பீரியட்ஸ் நேரத்திலும் சுகாதாரமான நாப்கின் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் நாப்கினை மாற்றுவது அவசியம். நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது கல் உப்பு சேர்த்து அடிக்கடி பிறப்புறுப்புகளை கழுவலாம். இதன் மூலம் அரிப்பு மற்றும் நோய்த் தொற்று உருவாவதை தடுக்க முடியும். **** பாட்டி வைத்தியம் 1. அசோக மரப்பட்டை 3 கிராம் அளவுக்கு எடுத்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும். இதனை தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் மாத விலக்கின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும். * 2. அருகம்புல்லை அரைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும். * 3. அன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். * 4. ஆலமர இலைகளை பொடி செய்து வெண்ணெய்யில் குழைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னையில் இருந்து விடுதலை கிடைக்கும். * 5. இத்திப் பிஞ்சை சீரகம் சேர்த்து வேக வைத்து சாப்பிடுவதன் மூலம் அதிக ரத்தப்போக்கு குறையும். * 6. ஈச்சுரமூலி இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் தீரும். * 7 எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு காலத்தில் உண்டாகும் தொந்தரவுகள் குறையும். * 8. கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். இவற்றை பொடியாக அரைத்து வைத் துக் கொள்ளவும். இதில் 5 கிராம் அளவுக்கு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை குடிப்பதன் மூலம் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும். அதிக ரத்தப் போக்கும் கட்டுப்படும். * 9. கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு உடனே வெளிப்படும். * 10. செம்பருத்திப் பூக்களை அரைத்து அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு ஒழுங்காகும். * 11. செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும். * 12. சோம்பு, மாவிலங்கப்பட்டை, மிளகு மூன்றையும் சம அளவுக்குக் காய்ச்சி 100 மில்லி அளவுக்குக் குடித்தால் மாதவிலக்கு பிரச்னைகள் சரியா கும். *** ரெசிபி எனர்ஜி உருண்டை: நிலக்கடலை, பொட்டுக்கடலை, பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை தேவையான அளவு எடுத்து உலர்த்தி சுத்தம் செய்து கொள்ளவும். இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும். தேவையான சர்க்கரையை தனியாக பொடியாக்கி கொள்ளவும். அரைத்தவற்றை ஒன்றாக கலந்து தேன், சிறிதளவு தண்ணீர் சேர்த்து உருண்டையாக பிடித்துக் கொள்ளலாம். இந்த எனர்ஜி உருண்டையை சாப்பிடுவதன் மூலம் புரதம் மற்றும் இரும்புச் சத்து உடலுக்குக் கிடைக்கும். உதிரப் போக்கும் கட்டுப்படுத்தப்படும். ** பேரீச்சை பால்: பாலை சுண்டக்காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். இதில் சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்க்கவும். பேரீச்சம் பழத்தை சிறு சிறு துண்டு களாக நறுக்கி பாலில் சேர்க்கவும். இதமான சூட்டில் இந்த பாலை குடிக்கலாம். பனங்கற்கண்டு உடல் சூட்டை குறைக்கிறது. பேரீச்சம் பழத்தில் இருந்து உட லுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கிறது. பாலில் இருந்து கால்சியம் கிடைக்கிறது. இது மூன்றும் உடல் இழந்த சத்தை திரும்பப் பெற உதவும். **** கொள்ளு கூட்டு: மணம் வரும் வரை கொள்ளுவை வறுத்து எடுக்கவும். இத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து கூட்டு போல வேக வைத்து எடுக்கவும். இதில் உப்பு சேர்த்து சீரகம், மிளகாய், கருவேப்பிலை தாளித்து கூட்டுடன் சேர்த்து கடைந்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட லாம். கொள்ளு பருப்பில் இருந்து இரும்புச் சத்து கிடைக்கிறது. *** டயட் பீரியட்ஸ் நேரத்தில் உடல் இழக்கும் சக்தியை திரும்பப் பெற என்ன சாப்பிடலாம் என்று சொல்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. ‘பீரியட்ஸ் நேரத்தில் ரத் தப்போக்கு ஏற்படுவதால் உண்டாகும் இழப்பை ஈடு செய்ய இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் சூட்டை தணித் துக் கொள்ள குளிர்ச்சியான ஆகாரங்களை எடுத்துக் கொள்வது அவசியம். இதற்காக இளநீர், வெண்ணெய், வெந்தயம், வெள்ளரி உள்ளிட்டவற்றை உணவில் சேர்க்கலாம். அதிக எண்ணெய், மசாலா மற்றும் அசைவ உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. கீரை மற்றும் பழச்சாறுகள் உடல் இழந்த சக்தியை மீட்டுத் தரும். இந்த நேரத்தில் பெண்களின் எடை குறையும். இதைத் தவிர்க்க புரதம் உள்ள பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பது அவசியம். சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்ப்பதன் மூலம் பீரியட்ஸ் நேரத்தில் வரும் வயிற்று வலி குறையும். நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளும் அவசியம் என்கிறார் சங்கீதா.
http://azhkadalkalangiyam.blogspot.in/

பீரியட் பிரச்னைக்கு

By Unknown →
எந்த வயதிலும் இளமை காக்கும் தலை மை (Hair Dye)
இளநரை
இளநரை என்பது பித்தம் சம்பந்தப்பட்ட விஷயம். பித்தப் பிரகிருதிகளுக்கு இளம் வயதிலேயே தலை நரைத்துவிடும். ஆனால் அதற்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. உணவில் கறிவேப்பிலையை நிறைய சேர்க்க வேண்டும்.
பசுவெண்ணெய்க்கு இளநரையை மாற்றும் தன்மை இருக்கின்றது. தினமும் பசு வெண்ணையைச் சிறிது சாப்பிட்டு வரவேண்டும். வெண்ணெயுடன் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். இதே வெண்ணையைத் தலை, கால்களில் அழுத்தித் தேய்க்க வேண்டும். தலைமுடியின் வளர்ச்சிக்கும் கருமைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து.
நெல்லிக்காயை வெட்டி கொட்டை நீக்கி நிழலில் காயவைக்கவும். உலர்ந்த பிறகு தேங்காய் எண்ணெயில் வறுக்க வேண்டும். காய் நன்றாக கருகும்வரை வறுத்தால், எண்ணெய் நன்றாக கருநிறமாகிவிடும். இந்த எண்ணெய் தலைக்கு நல்லது. இளநரையைத் தடுக்கும். பித்தம் சமனமாகும். உலர்ந்த நெல்லிக்காயைத் தண்ணீரில் ஓரிரவு ஊறப்போட்டு அந்தத் தண்ணீரைத் தலையில் தேய்க்கலாம். இளநரைக்கு நல்லது.
***
தலைக்குச் சாயம் (Hair Dye)
சுத்தமான தேங்காய் எண்ணெயில் உலர்ந்த நெல்லிக்காய்த் துண்டுகள், நசுக்கிய கடுக்காய் விதைகள், செம்பருத்திப் பூக்கள், கரிசலாங்கண்ணி, நீலிஅவரை, பிச்சி இலை, தான்றிக் காய், லோகபஸ்மம் (ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும்) இவற்றைக் காய்ச்சி அந்த எண்ணெயை வடிகட்டித் தலைக்குப் பயன்படுத்தலாம்.
கடுக்காய் விதையை நசுக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து அதன் சத்து முழுவதும் எண்ணெயில் இறங்கும்வரை காய்ச்சி இந்த எண்ணெய்யை தினசரி உபயோகிக்கலாம். இது பீஹ்மீ போலப் பயன்படும். கடுக்காய் காய்ச்சிய நீரை தலை கழுவ பயன்படுத்தலாம். மருதாணி இலையை நன்கு அரைத்து அதைத் தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி அந்த எண்ணெயையும் பயன்படுத்தலாம்.
இது நரைமுடிக்கான சாயம்போல் பயன்படும். சிலமணி நேரம் கழித்துக் கழுவினால் முடி கருமையாகக் காட்சியளிக்கும். செம்பருத்திப் பூக்களை நிழலிலும் வெயிலிலுமாகக் காயவைத்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சினால் சிவப்பு நிற எண்ணெய் கிடைக்கும். இதனை நரையை மறைக்கும் சாயமாகத் தடவிக்கொள்ளலாம்.
மிகவும் எளிமையான ஒரு வழி அதிக கட்டியான தேயிலை நீரினால் தலையைக் கழுவுவதுதான். வாரத்தில் இரண்டுமுறை இவ்வாறு செய்தால் முடி கருஞ்சிவப்பாக மாறிவிடும்.
***
ஷாம்பூ (Shampoo)
அண்மைக்காலத்தில் வேதிப்பொருளால் உருவான ஷாம்பூகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இப்போது ஆயுர்வேத ஷாம்பூகள் அதிகமாக வருகின்றன. சோறுவடித்தெடுத்தபின் கிடைக்ளகும் கஞ்சிநீர் ஒரு நல்ல ஷாம்பூவாகும்.
அதைச் சீயக்காய்ப் பொடி அல்லது கடலைமாவுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம். குழந்தையின் தலையில் தேய்க்க, கஞ்சியும் கடலைமாவும் சிறந்தது. தலைக்கோ உடம்பிற்கோ எரிச்சல் தராது. தாளி இலையை அரைத்தால் முட்டைக்கரு போன்று வழவழா என்று வரும். இதுவும் ஒரு நல்ல ஷாம்பூ.
இதனைச் சீயக்காய்ப் பொடியுடன் கலந்து உபயோகித்தால் முடியில் அதிகமான எண்ணெய்ப் பிசுக்கு அகன்று நல்ல சக்தியை அளிக்கும். சீயக்காய் 2 பங்கு, சிறுபயறு 1 பங்கு, வெந்தயம் லு பங்கு எடுத்துப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
தேவைப்படும்போது 1 தேக்கரண்டி பொடியைக் கஞ்சியுடன் சேர்த்து தாளி இலைச்சாறு கலந்து அல்லது முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்துப் பயன்படுத்தினால் ஷாம்பூவைப் பயன்படுத்துகின்ற பலன் கிடைக்கும்.
***
வழுக்கை (Baldness)
வழுக்கைக்கு மருந்து கிடையாது என்று சொல்லுவார்கள். ஒரு விதத்தில் அது உண்மையே. ஆனால் சில மருந்துகள் ஒரு சிலருக்கு நல்ல பலனைத் தந்துள்ளது. எலுமிச்சம்பழ விதைகளை நல்ல மிளகுடன் அரைத்து தண்ணீருடன் சேர்த்துப் பசைபோல் ஆக்குங்கள். இதனை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை ஒரு சில வாரங்களுக்குத் தேய்த்துவாருங்கள்.
அந்த இடத்தில் ஊருவதுபோல் தோன்றும். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து மயிர் வளருவதை ஊக்கப்படுத்தும். ஆலமர விழுது, தாமரை வேர்கள் இரண்டையும் சேர்த்துப் பொடியாக்க வேண்டும். இந்த பொடியில் சமஅளவு சுமார் 200 கிராம் எடுத்து 400 கிராம் தேங்காய் எண்ணெயில் பொடி கருமை நிறம் அடைவதுவரை காய்ச்ச வேண்டும்.
இந்த எண்ணெயை வழுக்கை உள்ள இடங்களில் தினசரி ஒன்றிரண்டு தடவை மசாஜ் செய்துவந்தால் முடிவளரும். ராஜவைத்தியம் ஒன்றும் இருக்கிறது. ஆனைத் தந்தத்தைப் பொடித்துத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சியும் பயன்படுத்தலாம்.
ஆனைத் தந்தத்தைப் பஸ்மம் செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்துப் புரட்டுவதும் உண்டு. இதற்கு ஹஸ்திதந்த மஷி என்று பெயர்.
அதிமதுரத்தைப் பொடித்து குங்குமப்பூ சேர்த்து பாலில் கலந்து பசைபோல் ஆக்கவும். இதைத் தூங்கப் போகும்போது வழுக்கை உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். முடி முளைத்துவிடும். இது முடி உதிர்தலையும் தவிர்க்கும்.
பொடுகை நீக்கும். நவீனமருத்துவத்தில் ஹைட்ரோ கார்ட்டிஸனான் மற்றும் ஸ்டீராய்டு ஊசிகள் தரப்படுகின்றன. அதிமதுரச் செடியில் கார்டிஸோனின் குணம் இருப்பதால் இவ்விளைவு ஏற்படுகிறதோ என்னவோ. ஊமத்தை விதைகள், அதிமதுரம், குங்குமப்பூ, பாலாடை இவற்றைத் தேங்காயெண்ணெயில் காய்ச்சி கருகும் வரைப் பயன்படுத்தவேண்டும். இந்தத் தைலமும் வழுக்கைப் பகுதிகளில் முடிவளரச் செய்கிறது. தத்தூர என்ற ஊமத்தை விஷத்தன்மை கொண்டது.
எனவே விரல் நுனிகளால் எண்ணெயைத் தொட்டுத் தடவிய பிறகு கைகளை நன்றாகக் கழுவிவிட வேண்டும். குழந்தைகளுக்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்த வேண்டாம். த்ரிபலா க்ஷ£ரம் என்ற மருந்துண்டு. அதாவது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றை வாணலியில் போட்டு வறுத்து, நல்ல கருநிறம் அடைந்தவுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்க்கலாம்.
***
முடி உதிர்தல் (Hair loss)
முடி உதிர்வதைத் தடுப்பதற்கு யஷ்டிமதுலேபம் என்ற மருந்து பயன்படுகிறது. அதிமதுரம் கடையில் கிடைக்கும். இதை மென்மையான தூளாக்கிக்கொள்ளவும். ஒரு பீங்கான் தட்டில் 100 கிராம் அளவு போட்டு தினமும் 100 மிலி பால் ஊற்றி வெயிலில் வைக்கவும். முதல்நாள் ஊற்றிய பால் காய்ந்த பிறகே மறுநாள் பால் ஊற்ற வேண்டும்.
ஈரமிருந்தால் மீண்டும் ஒருநாள் காய வைத்தபிறகு பால் விடவேண்டும். காலை வேளைகளில்தான் பால் ஊற்றவேண்டும். இரவில் பால் ஊற்றி காயாதிருந்தால் துர்வாடை வரும். இவ்விதம் ஏழு தடவை பால் ஊற்றிக் காய்ந்த தூளை அரை லிட்டர் நீலிபிருங்காமலக தைலத்தில் குழப்பி வைத்துக்கொண்டு தினமும் மயிர்க்கால்களில் தடவித் தேய்த்துவர கேசம் உதிர்தல் நிற்கும். கேசம் நீண்டு கறுத்து வளரும். மயிர்க்கால் வெடிப்பு, பொடுகு இவை நீங்கும்.
**
பிருங்காமல தைலம்
நல்லெண்ணெய் 1 லிட்டர்
கரிசலாங்கண்ணிச் சாறு 1 லிட்டர்
நெல்லிக்காய்ச் சாறு 1 லிட்டர்
பசுவின்பால் 4 லிட்டர்
அதிமதுரத்தூள் 60 கிராம்
கரிசலாங்கண்ணியைக் கையாந்தலை (கரியாகும் தலை) என்றும் கூறுவர். இதைக் கொண்டுவந்து அதிலுள்ள இதர புல் பூண்டுகளை அகற்ற தண்ணீ'ரில் நன்கு அலசி அலம்பி இடித்துச் சாறு பிழிந்துகொள்ளவும். பச்சை நெல்லிக்காய் கிடைக்கும் காலத்தில் அதையும் அலம்பி இடித்துச் சாறு பிழிந்துகொள்ளவும்.
பச்சை நெல்லிக்காய் கிடைக்காத காலத்தில் நல்ல நெல்லிமுள்ளியை வாங்கி விதை அகற்றிய பின் 250 கிராம் எடுத்துப் பெருந்தூளாக இடித்து 1லு லிட்டர் வென்னீரில் முதல் நாளிரவு ஊறவைத்து மறுநாள் நன்கு கசக்கிப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். அல்லது 1 கிலோ நெல்லி முள்ளியை (விதையுடனுள்ளது) 4 லிட்டர் தண்ணீரிலிட்டு 1 லிட்டர் மிகுதியாக கஷாயமாக்கிக்கொள்ளவும்.
அதிமதுரத்தை நன்கு இடித்து மெல்லிய தூளாக்கிக்கொண்டு பசுவின் பாலில் 4 மணிநேரம் வைத்து அம்மியிலிட்டு மிருதுவான கல்கமாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
நல்லெண்ணெய்யை இரும்புக் கடாயிலிட்டு நன்கு சூடேறும்வரை காய்ச்சி ஆறவைத்துக்கொள்ளவும். பிறகு அதில் அதிமதுரக் கல்க்கத்தையும் சாறுகளையும் பாலையும் கிரமமாகப் போட்டுத் திரவாம்சம் சுண்டும்வரை அடி பிடிக்காமலும் கருகாமலும் கவனத்துடன் பிரட்டி விட்டுக்கொண்டு கல்க்கத்திலுள்ள ஈரம் (ஜலாம்சம்) அகன்று கல்க்கம் மொற மொற என்றானதும் இறக்கி வடிகட்டிக்கொள்ளவும்.
கண், காது, மூக்கு முதலிய புலன்களை இயக்கும் நரம்புகளுக்குப் பலமும் குளிர்ச்சியும் அளிக்கக்கூடிய அப்யங்கத் தைலம், தினமும் தலைக்குத் தேய்த்து ஸ்நானம் செய்யச் சிறந்த ஸ்நான தைலம். அதிக மூளை வேலையுள்ளவர்கள் இதனால் அப்யங்கம் செய்து மூளைக் கொதிப்பு, ரத்தக் கொதிப்பு முதலிய நோய்களிலிருந்தும் பாதுகாப்பு பெறலாம். கேசங்கள் அடர்த்தியாகவும் அழகாகவும் கருமையுடனும் வளரும். மயிர் உதிர்தல், பொடுகு இவைகளைப் போக்கும்.
***
பேன் (Tics)
சில வீடுகளில் பெண் குழந்தைகளின் தலையில் உள்ள பேனை ஒழிப்பதற்குத் தாயார் படாத பாடுபடுவாள். பேனைக் கொல்ல ஏதாவது மருந்திருக்கிறதா என்று கேட்பாள். தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துத் தடவினால் பேன் அகலும்.
வெந்தயத்தை அரைத்து தேய்த்துக் குளித்தாலும் கற்பூரம் கலந்த நீரில் குளித்தாலும் பேன் மாறும். கேரளாவில் சில இடங்களில் மூக்குப் பொடியைத் தலையில் தேய்த்து விடுவார்கள். இரண்டு மணி நேரம் சென்ற பின் தலைக்குச் சீயக்காய் தேய்த்துக் குளித்து விடுவார்கள். பேன் அகன்றுவிடும். வெங்காயத்தை அரைத்து எலுமிச்சம் பழச்சாறு கலந்து மயிர்க்கால்களில் அழுத்தித் தடவி ஒரு மணிநேரம் கழிந்தபிறகு குளிப்பாட்டினால் பேன் இருந்த இடம் தெரியாமலே ஓடிவிடும்.
எந்தத் தீவிரமான மணமும் பூச்சிகளை விரட்டிவிடும். அதனால்தானோ என்னமோ பெண்கள் தலைக்குப் பூக்கள் சூடிக்கொள்கிறார்கள். இந்தப் பூக்கள் தலையில் இருக்கும்போது பேன் தொந்தரவு வருவதில்லை. சீதாப்பழ விதைகளை நசுக்கித் தலையில் தேய்த்துக்கொண்டால் பேன் வராது. சீதாப்பழ கஷாயம், ஊமத்தைஇலை கஷாயம் பயன்படுத்தலாம். கடலைமாவும் சேர்த்துக் குளிக்கலாம்.
***
பொடுகு (Dandruff)
இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறப் போடவும். காலையில் அந்த வெந்தயத்தை அரைத்துத் தலையில் தேய்த்து அரைமணிநேரம் வைக்கவும். பின் சீயக்காய்த் தேய்த்துக் கழுவிவிடவும். கடைசியாகத் தண்ணீர்விட்டுக் கழுவும்போது எலுமிச்சம்பழச் சாற்றைச் சேர்க்கவும்.
வாரத்திற்கு இரண்டு முறைப் பச்சைப்பயிற்று மாவைத் தயிரில் கலந்து தலைக்குக் குளித்துவிடவும். பொடுகு மறைந்துவிடும். பொடுகு மேற்கொண்டு வராமலிருக்க ஊமத்தையிலையால் காய்ச்சப்பட்ட துர்தூர பத்ராதித் தைலத்தைப் பயன்படுத்தவும். கேரளத்தில் சில பெண்கள் தேங்காய்ப்பாலைத் தலையில் தேய்த்துக் குளிக்கிறார்கள். இதனால் முடி நன்றாக வளருகிறது.
எலுமிச்சம்பழத்தை உலரவைத்துப் பொடியாக்கிக்கொள்ளவும். ஆலமரத்தின் விழுதையும் இதுபோல் பொடியாக்கிக்கொள்ளவும். இந்தப் பொடிகளை சம அளவு தேங்காய் எண்ணெயில் காய்ச்சவேண்டும். இந்த எண்ணெயை வடிகட்டி தலைக்கு உபயோகிக்கலாம்.
அருகம்புல், கடுக்காய், கரிசலாங்கண்ணி, மருதாணி, அதிமதுரம், கறிவேப்பிலை போன்றவற்றை தேங்காயெண்ணெயில் காய்ச்சினால் அது நல்லதொரு முடிவளரும் தைலம் ஆகும். வேப்பிலைப் பொடியைத் தலைக்குத் தேய்த்தும் குளிக்கலாம்.
***
தேவையற்ற முடியை அகற்றுவது (Removing unwanted hairs)
பழைய காலத்தில் வயதான பெண்கள் தேவையற்ற முடியை உடம்பிலிருந்து அகற்றுவதற்குச் சாம்பலையும் சர்க்கரையையும் பயன்படுத்துவார்களாம். என் பாட்டி சொன்ன விஷயம் இது. சர்க்கரையைக் காய்ச்சி அந்தப் பாகில் சாம்பலைக் கலப்பார்கள்.
இதனை முடியுள்ள பகுதியில் தடவி முடியைப் பிய்த்து எடுப்பார்கள். காஷ்மீரில் பெண்கள் வேறொரு வகையில் முடியை அகற்றுவார்கள். சாம்பலை களிமண் அல்லது உளுந்தமாவுடன் கலந்து கக்கம் மற்றும் மறைவிடங்களில் உள்ள முடியை அகற்றுவார்கள். இவ்வாறு எடுத்தபின் அந்த இடத்தில் முடி முளைக்காது என்கிறார்கள்.
குழந்தைகளுக்கு உள்ள மெல்லிய மயிர்களை எடுக்கவேண்டுமென்றால் கோதுமை மாவை உபயோகிக்கலாம். கோதுமை மாவைப் பிசைந்து அழுத்தமாகத் தேய்த்தால் மெல்லிய மயிர்கள் வந்துவிடும். மஞ்சளை அரைத்துத் தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால் அது மயிர்களை அகற்றும் என்று சொல்கிறார்கள்.
ஆனால் நடைமுறையில் பலன் கிடைப்பதில்லை. Waxing மற்றும் Electrolysis சில நேரங்களில் நன்றாகப் பயன்படுகிறது.

தலை மை

By Unknown →
புற்று நோய் - ஒற்றை மூலிகை வைத்தியம்
மனித குலத்தின் முதல் மருந்து மூலிகைகள். இன்று உலகம்முழுவதும் பல்வேறு நவீன மருத்துவ முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் எல்லா மருத்துவத்திற்கும் அடிப்படை மூலிகை மருத்துவம் தான்.
பல்லாண்டு காலமாக அட்டப்பாடியில் ஆதிவாசிகள் ஒற்றை மூலிகை வைத்தியம் செய்து வருகிறார்கள். மேற்கு தொடர்ச்சி மலையில் நீலகிரி, வெள்ளிங்கிரி, மல்லீசுவரன், ஆட்டுமுடி, சஞ்சீவினி ஆகிய மலைகளின் நடுவே அட்டப்பாடியும், சைலன் வேலி தேசிய பூங்காவும் அமைந்துள்ளது. இங்குள்ள பவானி, சிறுவாணி ஆற்றுபடுகைகளிலும், மலைகளிலும் பல அறிய மூலிகைகள் உள்ளன. இந்த மூலிகைகளை பாரம்பரிய வைத்திய மந்திரங்கள் மூலம் ஆதிவாசிகள் கண்டறிகின்றனர்.

மல்லன்(சிவன்) மல்லி (பார்வாதி) இவர்கள் தான் ஒற்றை மூலிகை வைத்தியத்தின் முதல் தலைமுறை. இவர்கள் இறைவனாக போற்றபட்டவர்கள். இவர்களிடம் இருந்து சீங்கப்பாட்டன் மருத்துவம் கற்றுக்கொண்டார். சீங்கப்பாட்டன் சஞ்சீவினி முனிவர் என்றும் அழைக்கப்பட்டவர். சீங்கப்பாட்டனுக்கு பின்னர் வந்த பல தலைமுறையினரின் பெயர்கள் அறிய கிடைக்கவில்லை.
சீங்கப்பாட்டன் பரம்பரையில் அறியப்பட்டவர்கள் வெள்ளப்பாட்டன் முதலான தலை முறையினர் மட்டுமே. கக்கி மூப்பன், பட்டி மூப்பன், சின்ன கக்கி மூப்பன், இவரது மனைவி வள்ளியம்மாள் தொடங்கி தற்போது வள்ளியம்மாளின் மகன் ரவீந்திரன் என்கிற சீங்கப்பாட்டன் வரை ஒற்றைமூலிகை வைத்தியம் செய்கிறார்கள்.
ஒற்றை மூலிகை வைத்தியம் இன்று பிரபலமாக பேசப்படுவதற்கு காரணம் வைத்தியர் வள்ளியம்மாள். இந்தியாவின் பிரபலங்களுக்கு இவர் அளித்த புற்று நோய் வைத்தியம் தான் இவரை உலகறியச் செய்தது. வள்ளியம்மாளின் வைத்தியமுறையை பாராட்டி இவருக்கு பாரம்பரிய வைத்தியரத்னா விருதை அரசு வழங்கியது.
தற்போது வள்ளியம்மாள் நினைவாக வள்ளியம்மாள் குருகுலம் என்ற மருத்துவ மனையை கட்டியுள்ளனர். மல்லீசுவரன் மலைமுகடின் தரிசனம் கிடைக்கும் வகையில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையை மட்டுமே தெய்வமாக வணங்கி இங்கிருந்து மருந்து கொடுக்கப்படுகிறது.
பலர் வியாபாரத்துக்காக நகரப்பகுதிகளில் ஒற்றை மூலிகை வைத்தியம் செய்கின்றனர். இதனால் ஆதிவாசிகளின் பாரம்பரிய வைத்தியத்திற்கே உள்ள பக்குவம் போய்விடும் எனவே தான் அடர்ந்த வனமானாலும் மல்லீசுவரன் மலையிலேயே மருத்துமனை அமைத்துள்ளனர்.
பல்வேறு வகை புற்றுநோய், வாத நோய்கள், சர்க்கரை, தோல்நோய்கள், ரத்த அழுத்தம், ஆசுத்துமா உட்பட அனைத்து விதமான நோய்களுக்கும் ஒற்றை மூலிகையில் தீர்வு உள்ளது. வள்ளியம்மாள் ரவீந்திரன் ஆகியோரின் வைத்தியத்தில் ரத்த புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் குணமாடைந்துள்ளனர்.
வள்ளியம்மாள் ஒற்றை மூலிகை வைத்தியம் குறித்து தமிழ், மலையாளம், ஆங்கில பத்திரிக்கைகளில் சிறப்பு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

புற்று நோய்

By Unknown → புதன், 22 அக்டோபர், 2014
மறந்துபோன தீபாவளி மருந்து........!!!!
தீபாவளி மருந்து செய்வது எப்படி?
என் சிறுவயதில் என் பாட்டி தீபாவளி அன்று பலகாரங்கள் செய்யும் போதே கூடவே தீபாவளி மருந்து என்று ஒன்றை செய்தது நினைவில் வருகிறது. இந்த பாரம்பரிய மருந்து இன்று பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதை பற்றி கேள்விப்பட்டிருக்க கூட வாய்ப்பு இல்லை...... உடலுக்கு மிகவும் சிறந்த இந்த மருந்தை இன்று நினைது பார்க்கும் போது, தமிழர்களின் உன்னதமான சித்தமருத்துவம் எவ்வளவு சிறந்தது என்று வியப்பை தருகிறது......
தீபாவளி அன்று காலையில் எண்ணை தேய்த்துக் குளித்துவிட்டு பலகாரங்களை தின்பதால் தொண்டை கட்டு வரும். அதில்லாமல் வயிற்றில் அஜீரணம் ஏற்படும். மேலும் பட்டாசு புகையினாலும் சிலருக்கு சளி பிடிக்கும். இதனைத் தவிர்க்கத்தான் தீபாவளி மருந்து அல்லது லேகியம் தயாரிக்கப்படுகிறது. இந்த லேகியத்தை குளித்து விட்டு வந்து ஒரு உருண்டை வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த லேகியம் ரெடி பண்ண நேரமில்லாதவ்ர்கள் ஓமம், சுக்கு, வெல்லம் தலா ஒரு கரண்டி எடுத்து பொடி செய்து தேன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஆளுக்கு ஒன்று சாப்பிட தீபாவளி லேகியம் சாப்பிட்ட பலன் கிடைக்கும்.
தேவையானவை:
தணியா : 4 கப்
இஞ்சி : 200 கிராம்
ஓமம் : 100 கிராம்
சுக்கு, மிளகு, திப்பிலி : தலா 10 கிராம்
வெல்லம் 100 கிராம்: (துருவிக் கொள்ளவும்)
பொடித்த ஏலக்காய் 5 கிராம்: (விருப்பப்பட்டால்)
நெய் : 1/4 கப்
செய்முறை:
* தணியாவையும், சீரகத்தையும் நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
* இளசாக இருக்கும் இஞ்சியாகப் பார்த்து வாங்கவும். இஞ்சியை நன்கு சுத்தம் செய்து தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* மிக்சியில் அல்லது அம்மியில் இஞ்சியை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
* ஊற வைத்த தணியாவையும், சீரகத்தையும் இஞ்சியுடன் சேர்த்து அரைக்கவும்.
* கலவை நன்றாக அரைந்து விழுதாக ஆனதும் அதில் வெல்லத்தை பொடி செய்து கலக்கவும்.
* அடுப்பில் கடாயை வைத்து விழுதை அதில் போட்டு நன்கு கிளறவும்.
* பின்னர் அதில் நெய்யை விட்டு கிளறிக் கொண்டே இருங்கள். லேகியம் பதத்திற்கு வந்ததும் இறக்கி உலர்ந்த பாத்திரத்தில் பத்திரப்படுத்துங்கள்.
* இதனை அனைவரும் சாப்பிடலாம். பலகாரங்களால் வயிற்றுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை இந்த லேகியமே சரி செய்து விடும்.

தீபாவளி மருந்து.......

By Unknown →

பப்பாளி ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. அஜீரணம் நீங்கும். பப்பாளி பால் புரதத்தையே செரிக்கும் ஆற்றல் உடையது. கடைகளில் விற்கும் செரிமான மாத்திரைகள் இப்பாலிலிருந்துதான் தயாரிக்கிறார்கள். பப்பாளியை இரவு சாப்பிட்டுப் படுத்தால் மலச்சிக்கல் நீங்கும். சில துண்டு பப்பாளிப் பழத்தில் ஒரு நாள் தேவையைவிட இரண்டு மடங்கு வைட்டமின் சி இருக்கிறது. விட்டமின் ஏ யும் இருக்கிறது. கல்லீரல் வீக்கம் நீங்கும். நீரழிவு நோய் வந்தால் பப்பாளியையும், நாவற்பழத்தையும் காலை ஒன்றும் மாலை ஒன்றுமாகச் சில நாட்கள் உண்டால் நீரழிவு நோய் குணமாகும். நரம்புத் தளர்ச்சி, நரம்பு வலி ஆகியவை பப்பாளியினால் நன்கு குணமாகும். குழந்தை பெற்ற தாய்மார்கள் இதனை உண்டால் தடையின்றி பால் சுரக்கும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பப்பாளியை உண்டால் கர்ப்பம் கலையும் அபாயம் உண்டு.

பப்பாளிப்பழ மருத்துவம்

By Unknown → ஞாயிறு, 19 அக்டோபர், 2014


பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடைய ஆப்ரிகாட் பழங்கள் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன. இதில் அடங்கியுள்ள ஏராளமான தாதுப்பொருட்கள் ஆஸ்துமா, மார்புச்சளி, காசநோய் மற்றும் இரத்த சோகையைக் குணப்படுத்த வல்லவை. 

இதில் அடங்கியுள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை நீக்குகிறது. இதில் உள்ள விட்டமின் ஏ முகப்பருவினை நீக்குவதிலும், தோல் தொடர்பான தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.

பழங்களிலுள்ள வானிலிக் அமிலங்கள் மற்றும் ரூப்பின் என்ற நறுமண எண்ணெய் கை, கால் வலியை நீக்குகிறது. இதில் இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின்கள் அதிகம் உள்ளதால் ரத்த உற்பத்திக்கு ஏற்றது. இதில் உள்ள கரோட்டினாய்டுகள் எல்.டி.எல். என்னும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதய நோயை தடுக்கின்றது.

ஆப்ரிகாட் பழங்கள் உடலுக்கு எவ்வளவு நல்லதோ, அதே அளவு சருமத்திற்கும் சிறந்தது. அதிலும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் ஏ என்னும் சத்து அதிகமாக உள்ளது. எனவே சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும். மேலும் இதில் இயற்கையான எண்ணெய் உள்ளது.

அதாவது இதனை சாப்பிட்டால், சருமத்தை பாதுக்காக்கும் வகையில் ஒரு படலத்தை உருவாக்கும். ஆகவே 2 ஆப்ரிக்காட் பழங்களை மசித்துக் கொண்டு, அதில் சிறிது தயிர் ஊற்றி, கலந்து, பின் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமெனில் இதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்தும் தடவலாம்.

ஆப்ரிகாட் பழத்தில் உள்ள நன்மைகள்

By Unknown →

நறுமணப் பொருளான மிளகு இயற்கை வைத்தியத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நம்வீட்டில் சமைக்கப்படும் அனைத்துப் பொருட்களிலும் ஒரு சிட்டிகை மிளகு சேர்த்துக் கொண்டால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும் என்கின்றனர் நிபுணர்கள். மிளகில் மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்சத்து ஆகியவை அடங்கியுள்ளது. 

கருப்பு மிளகு நோய் அலர்ஜி, எதிர்ப்பு சக்தியை கொடுப்பதில் மிகச்சிறந்தது. இது சுவாசக் கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது. இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வர எளிதில் குணமாகும். நோய்தொற்று பூச்சி போன்றவைகளினால் ஏற்படும் விஷக்கடி போன்றவற்றை தடுக்க மிளகு பயன்படுகிறது.

மேலும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் சளிக்கு டானிக்குகள் தயாரிக்கும் போது அதனுடன் மிளகு சேர்ப்பது உண்டு. தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்காது. வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று.

மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவைகளை நீக்குகிறது. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது.

மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம். மேலும் இரத்த சோகை, ஆண்மைக் குறைவு, தசை விகாரங்கள், இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.

மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது. காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சனைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாச பிரச்சனைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து. மேலும் பல் வலி, பல் சிதைவு போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.

முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் மிளகு மருத்துவத்தை தான் பயன்படுத்தி வந்தனர். மிளகு சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. லண்டன் ஆராய்ச்சி ஒன்றின் படி மிளகு வெண்புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது.

நிறமிகளை அழிக்க ஊதா ஒளி சிகிச்சை முறையை பயன்படுத்துகிறது. புற ஊதா கதிர்கள் காரணமாக தோலில் ஏற்படும் புற்றுநோயை போக்க மிளகு சிறந்த மருந்து. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்தலாம். உடலின் ஒட்டு மொத்த நலனிற்கும் மிளகு நல்லது.

ஆனால் அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும். ஆக்சிஜனேற்றியாக செயல்படும் மிளகு புற்றுநோய், இதயநோய், கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனையை எதிர்த்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மிளகின் மருத்துவ குணங்கள்

By Unknown →

காய்கறி வகைகளில் ஒன்றான பூசணியை தொடர்ந்து சமைத்துச் சாப்பிட்டால், நரம்பு தொடர்பான நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண், மேகவெட்டை, பிரமேக நோய் போன்றவை உள்ளவர்களுக்கு அவற்றின் தீவிரம் குறையும். 

பூசணி, உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீக்கும். எப்போதும் உடல் வலி இருப்பவர்கள், பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல் வலி நீங்கும். மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும்போது தினசரி பூசணி சேர்த்து சமைத்த உணவைக் கொடுத்தால் நல்ல பலன் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

மருத்துவத்தில் பூசணிக்காயின் சதைப் பகுதி, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைச்சுற்றலை நீக்கவும் பயன்படுகிறது. மருத்துவம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுகிறது.

வெண் பூசணிக்காயின் சாறு 30 மில்லி அளவு எடுத்து, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதயத்துக்குப் பலம் கொடுக்கும். ரத்தம் சுத்தப்படும். பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லி அளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச் சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும்.

உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் அதை நிறுத்திவிடும். ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப் புழுக்கள் வெளியேறவும், சிறுநீரக நோய்கள், ரத்தம் சுத்தப்படும்.

பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லி அளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச் சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் அதை நிறுத்திவிடும்.

பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்

By Unknown →


வால்நட் எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து இதயநோய்களை தடுக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சிஇன்மையும் ஒரு காரணமாகும். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

‘வால்நட்' எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது.

இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம்.

இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும். உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம். அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பை தடுக்கும் வால்நட்

By Unknown →

1. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும்.

சர்க்கரை வியாதிக்கு முருங்கை கீரை கண் கண்ட மருந்து பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும்.

குறிஞ்சாக் கீரையும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாகும்.

2. மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்து விடும். மூல நோயும் குணமாகும். மாத விடாய் அதிகமாக போவதும் நின்று விடும். கொசுக்களை விரட்ட மாம்பூக்களைப் பொடி செய்து, சாம்பிராணி போல புகைபோட்டால் கொசுக்கள் ஓடி விடும்.

3. இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துக் இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம்.

4. கொத்துமல்லி தழையை அரைத்து சர்க்கரை போட்டு பால் சேர்த்து தினம் 100 கிராம் சாப்பிட மன நோய் நீங்கும். மல்லி நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளிச்சிடும். தாகத்தைத் தணிக்கும். பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவை கட்டுப்படும். இதன் விதை எண்ணெய் சுளுக்கு நீக்கியாகப் பயன்படும்.

5. பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப்பிட்டாலும் வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் குறையும். இதனை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதைத் தேய்த்தால் வாத வலி போகும். பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப் பிழிந்து சுளுக்குக்குத் தடவ, சுளுக்கு விட்டுப் போகும்.

6. சிரங்கு தொல்லையா?
சிரங்கு : 100மி.லி., தேங்காய் எண்ணெய்யில் 5 வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவ நல்ல குணம் கிடைக்கும்.

7. தினமும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம் செய்து, பச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். பித்தமும் நீங்கும்.

8. இரவின் பூவன் பழத்தை செங்குத்து வாக்கில் இரண்டாகப் பிளந்து, அதில் சீரகத்தை வைத்து மூடி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூலவியாதி முச்சு காட்டாது.

9. சீரகத்தை நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலை பாரம், பித்த மயக்கம் நீங்கும்.

10. வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து பசுமோர் கலந்து அருந்திவர வயிற்று வலி தீரும்.

பாட்டி வைத்தியம்

By Unknown →
அனாதியாய்- அகண்ட பரிபூரணமாய்- வெளியாய்- காற்றாய்- நெருப்பாய்- இருட்டாய்- சுத்த சூன்யமாய்- நிறையாய்- உருவ மாய்- அருவமாய்- ஆக்குபவனாய்- காப்பவனாய்- அளிப்பவ னாய்- ஏகாந்தப் பரம்பொருளாய் வீற்றிருக்கும் இறைவனே!
எம்மையும் மானுடனாய்ப் படைத்து ஜீவன் முக்தி பெற வாய்ப்பளித்தவனே! உனக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள். நீ படைத்த எண்பத்து நான்கு லட்சம் உயிரினங்களில் மானுடப் பிறப்பே மிக உன்னதமானது என்பதை எமக்கு உணர்த்தியுள்ளீர். மோட்சத்திற்குரிய மனிதப் பிறப்பை அருளியுள்ளீர்.
புல்லாய்ப் பிறந்து புவியில் உழன்று மறுபிறவி கண்டோம். ஆடாய், மாடாய், மரமாய், குரங்காய் பல பிறவிகளில் பரிணாமம் கண்டு, கடைசியாய் மனிதனாய்ப் பிறந்து சிவத்துவமிக்க இந்த ஜீவனை உன்னுள் கலந்திட, உணர்வு கலங்கி உருகி வேண்டுகிறோம் இறைவா!
தன்னையறியும் கலையே உன்னை அறியும் நிலை என்பதை உணர்ந்து, உன்னுள் கலந்த சித்தர்களையும் சித்தருள் கலந்த தாவர வர்க்கங் களையும் எம்முள் கலந்து மோட்சம் பெற முனைகிறோம் இறைவா!
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மாபெரும் தெய்வசக்தி உறங்கிக் கொண்டிருப்பதை பல்லாயிரம் சித்தர் பெருமக்கள் வாயிலாக உணர்த்தி வரும் வள்ளலே! உறங்கும் மகா சக்தியை எழுப்பும் வல்லமையை எமக்குத் தந்தருள் பரம்பொருளே!
உன் அருள் பெற்ற திரிலிங்க மூலிகையாம் தான்றிக்காயை மருந்தாய்ப் பாவித்து, ஆணவம், மாயை, கன்மம் என்னும் முக்குணங்களை நீக்கி, உடல்சாரும் எப்பிணியும் போக்கி ஜீவன் முக்தி பெற உம் அருளாசி வேண்டும் ஏகாந்த நாதனே!
பதஞ்சலி வகுத்த யோக நியதிகளான இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய அனைத்தும் எமக்கு நல்கி, உன்னுள் கலக்கும் உன்னத முக்தியை எமக்குத் தா ஐயா!
இக்கலியுகத்தில் கபட வேடம் பூண்டு, மூச்சைப் பிடிக்கவும் இழுக்கவும் அடக்கவும் சொல்லிக் கொடுத்து தீட்சையளிக்கும் கம்ப்யூட்டர் ஞானிகள், சிவன் சொத்தைக் காசாக்கிப் பாவம் தேடி அடுத்த பிறப்புக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றனர். பன்னிரண்டு ஆண்டுகள் குருவழி நடந்தால்தான் தீட்சை கிடைக்கும் என்பதை சித்தர்கள் அருளியுள்ளனர். ஆனால் இன்றோ மூன்று மணி நேரம் கண்ட தைப் பிதற்றி நம்ப வைத்து, காசைப் பறித்து தீட்சை தரும் காவிகள் ஏராளம். அவர்களை எம் எண்ணில் காட்டாத உனக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள்.
சித்தர்கள் சொன்னபடி, பன்னிரண்டு ஆண்டுகள் நீ அருளிய தான்றிக்காயை கற்ப மருந்தாய்ப் பாவித்து, நோய் நீங்கி சுத்த தேகம் பெற்று, உன்னையே நினைத்து யோக வாசல் நுழைந்து ஞானம் பெற முயல்வோம் இறைவா!
பிறவிப் பெருங்கடல் நீந்தி, உன் அடி சேர தான்றிக்காயைச் சரணடைந்து உடல்நலம் பெற முனைகிறோம் பரம்பொருளே!
மலச்சிக்கல் நீங்க...
தான்றிக்காய், கடுக்காய் வகைக்கு 100 கிராம்- ரோஜாப்பூ, ஆவாரம்பூ, நிலாவரை, வாய்விளங்கம் வகைக்கு 50 கிராம்- இவற்றை ஒன்றாக்கித் தூள் செய்துகொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு பொடியை இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வெந்நீர் அருந்தினால் மலம் சிக்கலின்றிக் கழியும்.
உடல் இரும்பைப்போல் உறுதியாக...
தான்றிக்காய், தேற்றான் கொட்டை வகைக்கு 100 கிராம்- ஜாதிக்காய், சாலாமிசிரி வகைக்கு 50 கிராம்- சுக்கு, மிளகு, திப்பிலி வகைக்கு 25 கிராம்- சாரப் பருப்பு 150 கிராம்- இவற்றை ஒன்றாய்க் கலந்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு காலை- மாலை இருவேளை யும் சாப்பிட்டு சூடான பால் அருந்திவர, இளைத்த உடல் பருக்கும். முப்பிணிகளும் விலகும். உடல் உஷ்ணம் நீங்கும். வெள்ளை வெட்டை நீங்கும். உடல் இரும்பைப்போல் உறுதியாகும். இதயம் பலப்படும். ரத்த அழுத்தம் சீரான நிலைக்கு வரும்.
பல்வலி குணமாக...
தான்றிக்காயைச் சுட்டு மேல்தோலைப் பொடித்து, அதன் எடைக்குச் சமமாய் சர்க் கரை கலந்து தினசரி காலையில் வெந்நீருடன் சாப்பிட்டு வர பல்வலி, ஈறுநோய்கள் போன்றவை குணமாகும்.
அம்மை நோய் குணமாக...
தான்றிக்காய் தோலைச் சேகரித்து சூரணம் செய்துகொள்ளவும். இதில் அரை ஸ்பூன் பொடியைத் தேனில் கலந்து தினசரி சாப்பிட்டு வர அம்மை நோய்கள் தீரும்.
கண்பார்வை தெளிவடைய...
தான்றிக்காய் தோலை கால் கிலோ அளவில் தூள் செய்து கொள்ளவும். பொன்னாங்கண்ணிக் கீரையை இடித்துப் பிழிந்த சாறு அரை லிட்டர் எடுத்து தான்றிக்காய் பொடியுடன் கலந்து, நன்கு பிசைந்து வெயிலில் காயவைத்து உலர்த்தவும். இதில் இரண்டு கிராம் வீதம் காலை- இரவு இருவேளையும் உணவுக்குப் பின் சாப்பிட்டுவர, கண்பார்வை கூர்மை யாகும். கிட்டப்பார்வை, எட்டப்பார்வை போன்ற கோளாறுகள் சரியாகும்.
இரைப்பு, ஆஸ்துமா குணமாக...
தான்றிக்காய் தோல், திப்பிலி, அதிமதுரம் ஆகிய வற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துத் தூள் செய்து கொள்ளவும். இதில் பத்து கிராம் அளவு எடுத்து, அரை லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து, நான்கில் ஒரு பாகமாய் சுண்டச் செய்து கசாயத்தை வடிகட்டி, காலை- மாலை இருவேளையும் 100 மி.லி. அளவில் சாப்பிட்டு வர எப்பேர்ப்பட்ட ஆஸ்துமாவும் குணமாகும். மூச்சிரைப்பு, மூச்சுத்திணறல், படபடப்பு போன்ற குறைபாடுகள் எளிதில் குணமாகும்.
ஆறாத புண் ஆற...
தான்றிக்காயை உடைத்தால் அதற்குள் பருப்பிருக்கும். சர்க்கரை நோயால் உண்டாகும் புண்ணைக்கூட குணப்படுத்தும் வல்லமை இதற்கு உண்டு. பின்வரும் தைலம் சித்தர்களின் அருளாசி கொண்டு மானுட மேன்மைக்காக மறைக்காமல் சொல்லப்படுவதாகும். சற்று சிரமம் பார்க்காமல் இத்தைலத்தைச் செய்து வீட்டில் பத்திரப்படுத்துங்கள்.
தான்றிக்காய் தோல் 50 கிராம்- புளியங் கொட்டைத் தோல், சீயக்காய், மஞ்சள் ஆகியவை வகைக்கு 20 கிராம்- இவையனைத்தையும் ஒன்றாகக் கலந்து இளநீர் விட்டு அரைத்து வைக்கவும். பின்னர் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை அடுப்பிலேற்றி சிறுதீயாய் எரிக்கவும். எண்ணெய் நன்கு சூடானதும் அரைத்த விழுதை கொஞ்சங் கொஞ்சமாய் சேர்க்கவும். எண்ணெய் பொரிந்து அடங்கிய பின் அடுப்பிலிருந்து இறக்கி, ஆற வைத்து வடிகட்டிப் பத்திரப்படுத்தவும்.
இந்த மருந்து ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நன்மருந்து. வாய்ப்புண், மூக்குப்புண், லேசாய் தடவிட உடனே குணமாகும். சேற்றுப் புண், வெட்டுக்காயங்கள் விரைவில் ஆறிவிடும். சர்க்கரை வியாதியில் உண்டாகும் புண்ணால் கை, கால்கள் வெட்டி எறியப்படுவதை இன்று சாதாரணமாய்க் காண்கிறோம். இந்த மருந்தைச் செய்து வீட்டில் பத்திரப்படுத்துங்கள். ஆறாத புண்ணா...? சித்தர்களை மனதில் நினைத்துப் பூசி வாருங்கள். புண் இருந்த இடம் தெரியாமல் மறையும்.
மூலநோய்கள் தீர...
தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய், நாயுருவி இலை, துத்தி இலை, அம்மான் பச்சரிசி, பிரண்டை, பொடுதலை, அத்தி, ஆவாரம்பூ ஆகிய வற்றை வகைக்கு 100 கிராம் அளவு எடுத்து உலர்த்தி, ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் காலை- மாலை இருவேளை யும் உணவுக்குப்பின் ஒரு ஸ்பூன் (5 கிராம்) அளவு 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். இதனால் உள்மூலம், வெளிமூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ஆசன அரிப்பு, கடுப்பு, ஆசன வெடிப்பு, பௌத்திரக் கட்டி போன்ற மூலம் சார்ந்த அனைத்து நோய்களும் தீரும்.
ரத்தசோகை விலக...
சமீபத்திய மருத்துவ அறிக்கைப்படி, இந்திய மருத்துவர்களில் சுமார் 60 சதவிகித மருத்துவர் கள் ரத்தசோகை நோயினால் பாதிக்கப்பட் டுள்ளனர். மருத்துவர்கள் கதியே இப்படியென் றால் மக்களின் கதியைச் சொல்லவா வேண்டும்? நம் நாட்டுப் பணக்கார வர்க்கத்தினர் சுமார் 70 சதவிகித அளவில் ரத்தசோகைக்கு உட்பட்டவர்கள்தான். ரத்தசோகை மெல்லக் கொல்லும் கொடிய வியாதி. கோடிக்கணக்கில் பணம் கொட்டிக் கிடந்தாலும் ரத்தமின்றி நாடி தளர்ந்தால் என்ன செய்வது? ரத்தம் பெருக மருந்தொன்று சித்தர் ஆசியுடன் சொல்லுகின் றேன். சற்றே குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
தான்றிக்காய், நெல்லிக்காய் வகைக்கு 100 கிராம்; கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, குப்பைமேனி வகைக்கு 50 கிராம்; சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் வகைக்கு 25 கிராம்; அன்னபேதிச் செந்தூரம் 10 கிராம்- இவையனைத் தையும் ஒன்றாய் கலந்து தூள் செய்து பத்திரப் படுத்தவும். இதில் ஒரு ஸ்பூன் பொடியைத் தேனில் குழைத்து காலை- மாலை இருவேளை யும் சாப்பிட்டு வர ரத்தம் பெருகும். ரத்த சோகை விலகும். இம்மருந்தைச் சாப்பிட்டவுடன் 100 மி.லி. திராட்சைச் சாறு அருந்தினால் ரத்த சோகை பதினாறு நாட்களில் குணமாகும்.
குண்டலினி சக்தியை எழுப்ப...
பரம்பொருளை அறிந்து ஜீவன்முக்தி பெற சர்வவியாபியான பரமாத்மா நமக்கு ஆறு ஆதார சக்திகளை அளித்துள்ளார். அவை, மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்பனவாகும். மூலாதாரத்தில் உறங்கிக் கிடக்கும் குண்டலினி மகாசக்தியை யோக நியதிகளின்படி ஒவ்வொரு படியாய் நிறுத்தி தியானித்து, ஆக்ஞை எனப் படும் நெற்றிக்கண் திறந்தால் ஏழாவது சக்கரமான சகஸ்ரார நிலையை அடைந்தால், பரவெளி சொரூபன் நடமாடும் பிரபஞ்ச ரகசியத்தை நாமும் பெறலாம்.
சித்தர்களால் அடையாளம் காணப்பட்ட தான்றிக்காய் உடல்- மனம்- ஆன்மா ஆகியவற்றை தூய்மை செய்து மூலாதாரத்தைப் பலப்படுத்துகிறது. தான்றிக்காயை ஏதேனும் ஒருவகையில் பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, இறையருள் பெற்று ஜீவன்முக்தி பெறலாம். திரிலிங்க மூர்த்தியாம் தான்றிக்காயைச் சரணடைவோம்.

Tags:

தான்றிக்காயைச்

By Unknown → செவ்வாய், 14 அக்டோபர், 2014
கண்வலி குறைய
வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்.
கருவேலம் கொழுந்து இலையுடன் சீரகத்தை சோ்த்து அரைத்து வலியுள்ள கண்ணை மூடச்செய்து அதன்மேல் வைத்து பின்பு ஒரு வெற்றிலையை அதன்மேல் வைத்து சுத்தமான துணியால் கட்டிவிடவேண்டும். இரவில் கட்டி காலையில் அவிழ்த்து விடவேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்து வந்தால் கண்வலி குறையும்.
அருகம்புல் சமூலம், மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு 15 நாட்கள் வெயிலில் வைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்நோய்கள் குறையும்.
பன்னீரில் மரமஞ்சள், மஞ்சள் மற்றும் படிகாரம் ஆகியவற்றை கலந்து இரவு ஊற வைத்து காலையில் வடிகட்டி அந்த நீரை கொண்டு முகம், கண்கள் ஆகியவற்றை கழுவி வந்தால் கண்ணில் ஏற்படும் கட்டிகள் குறைந்து கண் சிவப்பு, கண் வலி ஆகியவை குறையும்.
புளியம்பூவை அரைத்து கண்ணை சுற்றி பற்று போட்டால் கண்வலி, கண்ணில் ஏற்படும் சிவப்பு குறையும்.
செண்பகப்பூ, அதிமதுரம், ஏலக்காய்,குங்குமப்பூ ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து கண் இமைகளின் மேலும், கீழும் பற்றுப்போட்டு ஒரு மணி நேரம் கழித்து குளிந்த நீரில் கழுவ கண் சிவப்பு குறையும்.

கண்வலி குறைய

By Unknown → வியாழன், 9 அக்டோபர், 2014
கருத்தரித்த பெண்களுக்கு
கொத்தமல்லி கீரையை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட வேண்டும்.
அவ்வாறு சாப்பிட்டால் விலை உயர்ந்த டானிக்கில் கிடைக்கும் சத்துகளை விட அதிக சத்துகளை இதிலிருந்து பெறலாம்.
கொத்தமல்லி கீரையை தொடர்ந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகி புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
இதனால் தாது விருத்தியாகி மகப்பேறுக்கு வழிவகுக்கும்.
கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் கொத்தமல்லி கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.
குழந்தையின் எலும்புகளும், பற்களும் உறுதியடைவதோடு தோல் சம்பந்தமான நோய்களும் தாக்காது.
இரண்டு தேக்கரண்டி சீரகத்தூளை மூன்று தேக்கரண்டி நெய்யில் குழைத்து வெற்றிலையின் பின்புறத்தின் மீது பூசி பின்பு வதக்கி 200 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்கவைத்து வயிற்றுவலி ஏற்படும் நேரத்தில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு வந்தால் கர்ப்பவதியின் வயிற்றுவலி குறையும்.
முருங்கை இலை, கொத்தமல்லி ஆகியவற்றை சோத்து வேகவைத்து அந்த நீரை குடித்து வந்தால் பேறு கால சமயங்களில் ஏற்படும் வலி குறையும்.
கருவுற்ற பெண்கள் இளநீரில் பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் சீறுநீர் ந‌ன்றாக‌ பிரியும்.
வெள்ளைப் பூண்டை எடுத்து நன்றாக தட்டி, மஞ்சள் துண்டை எடுத்து அதையும் நன்றாக தட்டி அத்துடன் கொத்தமல்லியையும் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி வற்ற வைத்து அடிக்கடி சிறுக சிறுக குடித்து வந்தால் கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை புரட்டல், ஆராட்டம், தாகம் ஆகியவை குறையும்.
ஆடாதோடை இலை, வேர் வகைக்கு அரைக் கைப்பிடி அளவு எடுத்து நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி கொடுத்து வந்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

கருத்தரித்த பெண்களுக்கு

By Unknown →
சளித்தொல்லையை போக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துளசி :-
துளசி ஒரு குத்துச்செடி. இதில் வெள்ளை துளசி மற்றும் கருந்துளசி என்ற இரு வகைகள் உண்டு. துளசியில் இருமலை குணப்படுத்தும் யூஜினல் மற்றும் சில வேதி பொருட்கள் உள்ளன. காற்றிலுள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை உள்ளிழுத்து அதிக பிராணவாயுவை வெளியிடுவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. இதன் இலை, காம்பு என முழுச்செடியும் மருந்தாக பயன்படுகிறது.
வெள்ளை துளசியில் இலை பச்சையாக இருக்கும். பூக்கள் கருநீல நிறம். இதற்கு நல்ல மணமும் சிறிது கார சுவையும் உண்டு. இதன் தாவரவியல் பெயர் ocimum sanctum linn. கருந்துளசியின் தாவரவியல் பெயர் ocimum sp. இது நந்தவனங்களிலும், கோயில் போன்ற சில இடங்களிலும்தான் காணப்படுகிறது. இதன் தண்டும் இலையும் கருநீல நிறமாக இருக்கும். இலைகள் கரும் பச்சையாக இருக்கும். காரத்தன்மை கூடுதலாக இருக்கும்.
துளசி செடியை நன்கு நறுக்கி சிறிது மிளகுடன் கலந்து கசாயம் போட்டு காலை, இரவு குடித்துவந்தால் குளிர்காய்ச்சல், கோழை, இருமல், தொண்டை வறட்சி நீங்குகிறது. பசுமையான இலையை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறப்போட்டு சில மணிநேரம் கழித்து அந்த தண்ணீரை குடித்துவர நாட்பட்ட வாயு, வயிற்று உப்பிசம் நீங்குகிறது. துளசி இலைச்சாறை 2-3 துளிகள் காதுக்குள் விட்டால் காதுவலி குறைகிறது.
துளசி இலைச்சாறு சக்தி மிக்க கிருமி நாசினியாகவும், ரத்தத்தை சுத்தம் செய்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. காற்றை சுத்தப்படுத்தி, சுவாசத்தை சீராக்கி சளித்தொல்லையை போக்கும். தினசரி 4 துளசி இலையை பறித்து சாப்பிட்டால் அதன்பலன் தெரியும். கிராமங்களில் இருப்பவர்கள் சளிப்பிடித்தாலோ, மூக்கு ஒழுகினாலோ துளசி இலையின் சாற்றை கொடுப்பார்கள்.
வீட்டில் ஒரு துளசி செடி வளர்த்து தினசரி அதன் இலையை உண்டு வந்தால் சளித்தொல்லையே வராது. காய்ச்சலுடன் கூடிய ஆஸ்துமா நோய்க்கு துளசியை வீரியப்படுத்தி ஹோமியோபதி மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. துளசி சாறு தொண்டை பகுதியிலுள்ள நோய் கிருமிகளை முற்றிலும் அழிக்கும். தோல் அரிப்பு, சொறி, சிரங்கு உள்ளவர்கள் இதன் சாற்றை பூசி வந்தால் விரைவில் குணம் தெரியும். படர்தாமரைக்கும் இச்சாற்றை பயன்படுத்தலாம். இதன் இலை மற்றும் குச்சிகளை கொண்டு புகை போட்டால் கொசுக்கள் வராது.
கருந்துளசி இன்னும் அதிக பலன் தருகிறது. வயிற்றில் குழந்தை இறந்து விட்டால் அதை உடனடியாக வெளியேற்றிவிட வேண்டும். இல்லையேல் தாயின் உயிருக்கு மோசம் ஏற்படும். இதற்கு கருந்துளசி நன்கு பயன்படுகிறது. ஒன்பது கருந்துளசி இலையை மென்று தின்று விட்டு ஒரு மூடி முற்றின தேங்காயை உடைத்து அதை மெதுவாக மென்று உண்டால் தேள் விஷம் முறியும்.
கருந்துளசி இலையை சுத்தம் செய்து சாறு பிளிந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அஜீரணம், வயிற்று போக்கு குணமாகும். ஜீரணக்கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி, ஆகியவற்றிற்கு துளசி சிறந்த மருந்தாகும். இரத்தத்திலுள்ள விஷத்தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கிறது. இப்படி துளசி நம் அன்றாட வாழ்க்கைக்கு அவசியம் தேவை. கருந்துளசி பெரும்பாலும் வீடுகள், தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. வெள்ளை துளசி தரிசு நிலங்கள், வயல் ஓரங்களில் தானாக வளரும். விதைகளை தூவியும் வளர்க்கலாம்.
ஆஸ்துமா, கேன்சர் அண்டாது
ஈஸ்னோபிலியாவும், ஆஸ்துமாவும் வெவ்வேறு காரணங்களால் வரும் நோய்கள் என்றாலும் இரண்டும் சகோதர நோய்கள் என அழைக்கப்படுகிறது. இப்போது இந்நோய்கள் அநேகரிடம் காணப்படுகிறது. இதற்கு துளசி பெரிய நிவாரணி. துளசி கசாயத்தில் மிளகு சேர்த்து குடித்தால் முற்றிலும் குணமாகும். தொடர்ந்து குடித்து வந்தால் இந்த இரு நோய்களும் அண்டாது.
தினமும் 20 துளசி இலையை உண்டு தண்ணீர் குடித்தால் ஆரம்பநிலையில் உள்ள புற்று நோய் குணமாகும்.இதேபோன்றுதினமும் காலை மாலை இருவேளை ஒரு கப் தயிருடன் 20 துளசி இலையை உண்டுவந்தால் கேன்சர் குணமாகும். தினமும் ஒரு துளசி இலை சாப்பிட்டால் புற்றுநோய் அண்டாது என்ற ஒரு பழமொழியே உண்டு.
உடல் சூட்டை குறைக்கும்
துளசி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டுக்கு எதிராக வேலை செய்யும். இதனால் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் என்ற தவறான கருத்து உள்ளது. துளசி குளிர்ச்சியை ஏற்படுத்தி தேவையற்ற வேட்கையை குறைக்குமே தவிர மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை.

சளித்தொல்லையை

By Unknown →