
இன்றைய கால கட்டத்தில் 7௦ சதவிகிதத்தினர் ஆண்மை குறைவால் பதிக்கபடுகின்றனர் என ஆய்வுகள் தெரிவிகின்றன. இதன் காரணமாக மனமுறிவு கூட நடப்பது வேதனையான விஷயம். போலி மருத்துவரை அணுகியும் ஆன்லைன் மருந்துகள் வாங்கியும் தங்கள் கை பணத்தை கரைத்து மனவுளச்சலுக்கு ஆளானோர் ஏராளம். இதற்கு தீர்வுதான் என்ன ? உங்கள் கேள்வி புரிகிறது. பதில் முதலில் உங்கள் வாழ்வியல் நடைமுறைகளை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். உடற் பயிற்சி, உணவு பழக்கம், இயற்கை மருத்துவம் இதுதான் உங்களுக்கு சரியான வழி.
ஆண்மைக் குறைவு நீங்க, தாதுப் பெருக்கம் அதிகமாக காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு அல்லது வில்வ இலைச் சாறு அருந்தி வரலாம்.
ஒரு கை நிறையப் பேரிச்சம் பழத்தை ஆட்டுப் பாலில் இரவு ஊற வைத்துக் காலையில் அதே பாலில் அரைத்து, சிறிது ஏலப்பொடி, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், இழந்த ஆண்மையைப் பெறலாம்.
மாலையில் சப்போட்டா பழத்துடன் தேன் கலந்து உண்டு வந்தால் ஆண்மைத் தன்மை அதிகமாகும்.
இரவில் பாதாம் பருப்பைத் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் உண்டு வரலாம். பிஸ்தாப் பருப்பு, முந்திரிப் பருப்புகளும் உண்டு வந்தால் ஆண்மைக் குறைவு நீங்கும்.
சமையலுணவில் முளைக் கீரை சேர்த்து உண்டு வரலாம். மாதுளம் பழச்சாறு காலையில் மட்டும் தொடர்ந்து 21 நாட்கள் அருந்தி வரலாம்.
ஒரிதழ்த் தாமரையும் உண்டு வரலாம். மகிழம்பூவுடன் தேனும் பசும்பாலும் கலந்து அருந்தி வரலாம்.
திப்பிலியை நெய் சேர்த்து உண்டு வரலாம். முளைகட்டிய, சுண்டக் கடலையைத் தேன் கலந்து தினம் உண்டு வரலாம். வெங்காயச் சாற்றுடன் தேன் கலந்து தினம் அருந்தி வந்தால் ஆண்மை அதிகமாகும்.
குறிப்பு :
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் மேற் கூறியவற்றை உண்ணும் போது சக்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் மருத்துவரை அணுகி எடுத்துக்கொளுவது நலம்.
- அளவுக்கு அதிகமாக எடுத்துகொள்வதும் பலனளிக்காது. அளவுடன் எடுத்து வளமுடன் வாழுங்கள்.
No Comment to " ஆண்மைக் குறைவு நீங்க எளிய வழிகள் "
Your Comment Has Been Published!