நரம்பு மண்டல ரகசியங்கள் - தெரிந்துகொள்வோம்

By Unknown → ஞாயிறு, 21 டிசம்பர், 2014
Advertise

மனிதனின் நரம்பு மண்டலமே உடல் செய்யும் அனைத்து செயல்களுக்கும் அடிப்படையாக உள்ளது. மூச்சு விடுவது முதல் தசைகளின் அசைவுகளை கட்டுப்படுத்துவது, சூடு, குளிர் உணர்வது வரை அனைத்துக்கும் நரம்பு மண்டலமே காரணமாகின்றது. நரம்பு மண்டலம் கீழ்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது... தன்னிச்சையாக இயங்கும் நரம்பு பிரிவு: இருதயம், ரத்த அழுத்தம், செரிமானம், உடல் சூட்டினை சீராய் வைத்தல் இவற்றிற்குப் பொறுப்பாகின்றது.

மோட்டார் நரம்பு பிரிவு:

அசைவுகளையும், செயல்களையும் மூளையிலிருந்து தண்டுவடம் மூலமும் உடல் தசைகளுக்கு கொண்டு சென்று இயங்க வைக்கின்றது.

சென்சரி (உணர்ச்சி) நரம்பு பிரிவு:

தோல், தசைகளிலிருந்து தண்டுவடத்திற்கும், மூளைக்கும் எடுத்துச்செல்வது. இது அங்கு ஆராயப்பட்டு வலி, எரிச்சல், இதம் போன்ற உணர்ச்சிகளை மனிதன் உணரச் செய்கின்றது. நரம்பு மண்டலமே அனைத்திற்கும் காரண மாவதால் நரம்பு வலியும் அல்லது நரம்பு பாதிப்பும் மனிதனின் வாழ்வினை வெகுவாக பாதித்து விடுகின்றது.

நரம்பு வலியின் அறிகுறி என்ன?

நரம்பு பாதிக்கப்படும் பொழுது பலவித அறிகுறிகள் தெரியும். பாதிப்பு மூளையிலா, தண்டுவடத்திலா அல்லது பரவியுள்ள புற நரம்புகளிலா என்பதனைப் பொறுத்து அறிகுறிகள் இருக்கும். தன்னிச்சை இயக்க நரம்பு பாதிக்கப்படும் பொழுது...

* நெஞ்சு வலியினை உணர முடியாது

* அதிக வியர்வை அல்லது குறைந்த வியர்வை இருக்கும்.

* வறண்ட கண், வாய் காணப்படும்.

* மலச்சிக்கல் ஏற்படும்.

* சிறுநீரக பை சரிவர இயங்காது.

* உடல் உறவில் பிரச்சனை இருக்கும்.

மோட்டார் நரம்பு இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும் பொழுது.

* உடல் சோர்வு ஏற்படும்.

* தசை தேய்மானம் காணப்படும்.

* தசை துடிப்பு இருக்கும்.

* பக்கவாதம் ஏற்படும்.

சென்சரி அதாவது உணர்ச்சி நரம்பு பாதிப்பு ஏற்படும் பொழுது..

* வலி இருக்கும்.

* மதமதப்பு இருக்கும்.

* குறுகுறுப்பு, குத்தல் இருக்கும்.

* எரிச்சல் இருக்கும்.

* குளிர், சூடு தாங்காமை இருக்கும். சிலருக்கு இரண்டு மூன்று தொந்தரவுகள் கூட அறிகுறிகளாகத் தெரியலாம். பொதுவாக 100 வகையான நரம்பு பாதிப்புகள் உள்ளன. வயது கூடும் பொழுது புற நரம்பு பாதிப்பு கூடும். நாலில் ஒரு சர்க்கரை நோயாளிக்கு இப்பாதிப்பு எளிதில் ஏற்படும். புற்றுநோய் பாதிப்பு நரம்புகளை பாதிக்கலாம்.

விபத்துக்கள், சில மருந்துகள் போன்றவை கூட நரம்புகளை பாதிக்கலாம். சத்து குறைபாடு, தொற்றுநோய் போன்றவைகளும் நரம்பு பாதிப்பினை ஏற்படுத்தலாம். அதிக நபர்களுக்கு இதனை முழுமையாக சரி செய்ய முடிகின்றது. சின்ன அறிகுறி இருந்தாலும், உடனடி பெறும் மருத்துவ ஆலோசனை நல்ல நிவாரணம் அளிக்கும். அடிப்படை காரணம் அறிந்து சிகிச்சை செய்யவேண்டும்.

* சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவினை சரி செய்யவேண்டும்.

* சத்து குறைபாடுகளை சரி செய்யவேண்டும்.

* பாதிப்பு தரும் மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி நீக்குதல் வேண்டும்.

* அடிபட்ட இடத்தில் தகுந்த சிகிச்சை தர வேண்டும்

* மற்ற பாதிப்புகளுக்கு உரிய மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் சிலருக்கு திடீரென கால், கை சற்று சோர்வாய் இருப்பது போன்று இருக்கும். நரம்பு முறையாய் வேலை செய்யாததால் ஏற்படும் பாதிப்பு இது. அதிக கவலை, டென்ஷன் இருப்பவர்களுக்கு அதிகமாக இவ்வகை பாதிப்பு ஏற்படுகின்றது.

அடிபட்ட பிறகு, முதுகுவலி, கழுத்துவலி இருக்கும்போது இத்தகு பாதிப்பு ஏற்படுகின்றது. அதிக சோர்வு, அதிக வேலை செய்து ஓய்ந்துப் போகுதல் போன்றவை இத்தகு பிரச்சினைகளை உருவாக்கும். இதற்கு உடற்பயிற்சியும், பிஸியோதெரபி எனப்படும் குறிப்பிட்ட பயிற்சியும் நல்ல பலனை அளிக்கும்.

சில சமயம் மனநல நிபுணர் ஆலோசனையும் தேவையே. (அதிகம் பாதிப்பினை பற்றியே நினைக்காது இருப்பதும் முன்னேற்றத்தினைத் தரும்) சிலருக்கு வளைந்த விரல்கள் இருக்கலாம். மணிகட்டு சுழன்று கை கீழ் நோக்கி பிரண்டு இருக்கலாம். அவரவர் உடலுக்கு ஒரு வரைப்படம் உண்டு. சில காரணங்களால் மூளை இந்த மடிந்த விரல்களையும், பிசகிய கையினையும் சரியான வரைபடமாக எடுத்துக் கொள்கின்றது.

மூளையை மீண்டும் சரியான வரைபடத்திற்கு மாற்றுவதே பயிற்சி ஆகின்றது அல்லது தொடர்ந்து அப்படியே இருந்தால் பாதிக்கப்பட்ட பகுதி நலிந்து செயலிழக்கின்றது.

* அடிக்கடி உட்கார்ந்து, எழுந்து, நடந்து பயிற்சி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

* மருத்துவ ஆலோசனை மிக அவசியம். திடீரென ஒருவர் உடல் உதறி அப்படியே நினைவற்று விழுந்து விடுவார். சற்று கூடுதல் நேரம் அவ்வாறே இருப்பார். பிறகு எழுந்து விடுவார். இதன் காரணம், நரம்பின் இயக்கம் சிறிதுநேரம் முறையற இயங்காததால் ஏற்படும் பாதிப்பு ஆகின்றது. மருத்துவ சிகிச்சையில் இன்று இப்பாதிப்பிற்கு நவீன மருந்துகள் உள்ளன.

* சோபாவிலோ, படுக்கையிலோ ஓய்வில் இருக்கும் பொழுது பலருக்கு இது ஏற்படுவதுண்டு.

* நீண்ட நேர பாதிப்பு இருந்தாலோ

* தலை, கை, கால்கள் முறையற்று நடுங்குதல் இருந்தாலோ.

* வாய் விட்டு திடீரென அதிக மூச்சு விடுவது போன்று கண்டிப்பாய் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். பொதுவில் பலமின்மை என்பதனை அதிக சோர்வுடன் இருந்தாலும் வழக்கில் கூறுவர். பலமின்மை என்பது சோர்வுடன் இருந்தாலும், ஒரு சாதாரண பொருளை (பால் டம்ளர்) தூக்க முடியாமல் இருப்பதோ, நகர்த்த முடியாமல் இருப்பதோ ஆகும். (உ-ம்) ஒருவரது வலது கால் பலமிழந்து இருக்கின்றது என்றால் அவரது வலது பக்க தண்டு வடமோ அல்லது இடது பக்க மூளையோ பாதிப்படைந்து இருக்கக்கூடும். இதனை செயல்பாட்டு பலவீனம் என்று கூறுவர்.

தலையில் அடிபட்டால்

சாதாரணமாக தலையில் இடித்துக் கொள்வதில் இருந்து, ரோட்டில் ஏற்படும் விபத்து வரை என பல காரணங்களால் தலையில் அடிபடக் கூடும். மண்டையில் சற்று அமுங்கினால் போல் இருந்தாலோ, மண்டை ஓட்டில் லேசாக விரிசல் தெரிந்தாலோ பாதிப்பு அதிகம் என்றே கொள்ள வேண்டும். இந்த பாதிப்பு ஏற்பட்டவர்...

* நினைவின்றி விழுந்தாலோ

* சற்று சாதாரணமாக எழுந்து விட்டு பின் நினைவின்றி விழுந்தாலோ

* கண் கருவிழிகள் இருபுறமும் சமமாக அசையாமல் விட்டாலோ, கருவிழி விரிந்தாற் போல் தெரிந்தாலோ

* கை, கால் அசைவுகள் மிகவும் குறைந்தாலோ, அசைவின்றி இருந்தாலோ இவருக்கு மிக அவசர சிகிச்சை தேவை என்பதனை உணருங்கள். சிலர் அடிபட்ட சில மணி நேரங்கள், சில நாட்கள், சில வாரங்கள் கூட கழித்து மயங்கி விழுவர். இவர்களுக்கு,

* தலைவலி

* குழம்பிய பேச்சு

* வாந்தி

* மூக்கிலும், காதிலும் இருந்து ரத்தக் கசிவோ அல்லது திரவ கசிவோ இருக்கும்.

ஆகவே தலையில் அடிபட்டு ஒன்றுமில்லை என்றாலும், மருத்துவர்கள் சில வாரங்கள் வரை அவரை கண்காணிப்பில் இருக்கச் சொல்வர். மண்டையில் அடிபட்டு ரத்தப்போக்கு சற்று அதிகமாக தெரிந்தால் மிகவும் அதிர்ச்சி கொள்ள வேண்டாம். முகம், தலை இவற்றுக்கு ரத்த ஓட்டம் அதிகம் என்பதால், சிறு காயம் கூட அதிக ரத்தப்போக்கினைத் தரும்.

இருப்பினும், காயம் சிறியதா, பெரியதா என்பதை மருத்துவரே முடிவு செய்யவேண்டும். இம்மாதிரி அடிபடும் ஒருவருக்கு சுத்தமான கட்டை விரல் கொண்டு லேசாக அந்த இடத்தை அழுத்த, சிறிய காயங்கள் கட்டுப்படும். மருத்துவமனை செல்லும்வரை சுத்தமான பேண்டேஜ் துணி கொண்டு, காயம்பட்ட இடத்தில் லேசான அழுத்தம் கொடுக்கலாம்.

காயம் அடைந்தவரை உட்கார வைத்து, அவர் தலையையும், தோள்பட்டையையும் நாம் பின்னால் பிடித்துக் கொள்ளவேண்டும். மருத்துவர் மூலம் நரம்பு பிரச்சினைகளை அறிந்து அதற்கு ஏற்ற சிகிச்சைகள் பெறுங்கள். நலம் பெற்று வாழுங்கள்.

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " நரம்பு மண்டல ரகசியங்கள் - தெரிந்துகொள்வோம் "

Your Comment Has Been Published!