வளரும் குழந்தைகளுக்கு இச்சத்துகள் அவசியம். வாழைப்பழம் வளர்சிதை மாற்றம் குறையாமல் பார்த்துக் கொள்வதோடு, ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். விளையாட்டுத்துறையில் இருப்பவர்கள், ஃபிட்னஸ் பிரியர்கள் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. எனர்ஜி லெவலை எப்போதும் சரியாக வைத்திருக்கும் குணம் வாழைக்கு உண்டு.
செவ்வாழையில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் பெண்களுக்கு நல்லது. இதய நோயாளிகளும் வாழைப்பழத்தை அளவாக சாப்பிடலாம். வாழையில் சர்க்கரை அதிகம் இருப்பதால் டயாபடீஸ் நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. மலைவாழையில் சர்க்கரை கொஞ்சம் குறைவாக இருக்கும். சிலருக்கு பச்சை வாழைப்பழம் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும்.
அவர்கள் அதே சுவையுடன் இருக்கும் பூவன் பழத்தைச் சாப்பிடலாம். இதனால் சளித் தொந்தரவுகள் நெருங்காது. குழந்தைகளுக்கு 8 மாதத்தில் இருந்து நன்கு மசித்த வாழைப்பழம் கொடுக்கலாம். கேரளாவில் வாழைப்பழத்தை நன்கு காயவைத்து, பொடி செய்து, பாலில் கலந்து, கிட்டத்தட்ட சத்து மாவு போல கலந்து குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். வயிற்றில் இருக்கும் நச்சுத்தன்மையைப் போக்கி, சுத்தம் செய்து விடுவதால் வயிற்றுப்புண் பிரச்னைகளும் நெருங்காது!’’

No Comment to " வாழைப்பழத்தில் என்ன ஸ்பெஷல்? "
Your Comment Has Been Published!