Advertise
உணவுக்காகவும் மருத்துவத்துக்காகவும் பயிர் செய்யப்படுகின்ற பயனுள்ள மூலிகையாகவும் உணவு பொருளாகவும் கோவை விளங்குகின்றது. காய்ச்சலைப் போக்கும் தன்மை கோவைக்கு உண்டு. தாய்ப்பால் பற்றாத போது இளந் தாய்மார்களுக்கு பால் சுரக்கச் செய்வது, கோவையின் வேர் வாந்தியை நிறுத்தும் வல்லமை வாய்ந்தது.

கோவை இலைச்சாறு கடும் வலியைத் தணிக்கக் கூடியது. கோழையைக் கரைத்து வெளியேற்றும் வல்லமை உடையது. கோவை இலை தோல் நோய்களுக்கு மேற்பூச்சு மருந்தாகிறது. தோலில் உண்டாகும் அரிப்பு, கொப்புளங்கள், வேர்க்குரு, வெடிப்புகள் விலகிப்போக உன்னதமான மருந்தாக கோவை இலை உபயோகப்படுகின்றது.

கோவை வேர் கிழங்குபோல திரண்டு இருக்கும். கிழங்கு “புரோட்டோ சோவா” என்னும் நோய்தரும் ஒட்டுண்ணிகளை ஒழிக்கக் கூடிய உன்னதமான மருந்தாகிறது. கோவையின் பழங்கள், இலைகள், வேர்கள் அனைத்தும் சர்க்கரை நோயைத் தணிக்கும் தன்மையுடையது. கோவையின் சமூலம் நாடித்துடிப்பு குறைந்த போதும் வலிப்பு ஏற்படும் போதும், ஈரல் நோயுற்ற போதும் மருந்தாகப் பயன்படுகின்றது.

கோவை இலைச் சாற்றை விஷக் கடிகளுக்குப் பூசலாம் என்றும், கோவை இலை உஷ்ணத்தையும், வியர்வையையும் உண்டாக்குந் தன்மையுடையது என்றும், இலைத் தீநீர் நீரடைப்பு, ஆறாப்புணக்கள், சொறி, சிரங்கு, இருமல் இவற்றைப் போக்கும் என்றும் சித்த மருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கோவையின் இலையைச் சுரணித்து சாப்பிடுவதால் உடம்பின் சூடு தணியும் என்றும், நீரடைப்பு, கரப்பான், இருமல் இவைகள் குணமாகும் என்றும், இலைச்சாற்றை வெண்ணெய்யோடு குழைத்துப் பூச சிரங்கு, ரணம் இவைகள் விரைவில் ஆறும் என்றும், கோவையின் கிழங்கு நீரிழிவு, கோழை, குட்டம், இரைப்பு, நாப்புண் இவைகளும் குணமாகும் எனவும் தெரிவிக்கின்றன.

* கோவை இலைகள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் அற்புத மருந்தாகிறது. சர்க்கரை நோய் அல்லாதவர்க்கு சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

* தோல் வியாதிகளான தொழுநோய், சோரியாசிஸ், ஸ்கேபிஸ் எனப்படும் நமைச்சல், அரிப்பு, நீர்வடிதல் போன்ற கடுமையான நாட்பட்ட நோய்களுக்கு உள்மருந்தாகவும் வெளிப்பூச்சு மருந்தாகவும் கோவை இலைப் பயன் தருகிறது.

* கோவை இலை மற்றும் காய் நாக்குப் புண்கள், பேதி, மஞ்சள்காமாலை போன்ற நோய்களையும் குணப்படுத்த வல்லது கோவையின் பூக்கள் மஞ்சள் காமாலை நோய்க்கு மகத்தான மருந்தாகிறது.

* கோவை நுரையீரல் கோளாறுகளையும் சுவாசப் பாதைச் சளியையும் போக்கப் பயன்படுத்துகின்றனர்.

* இலை, பழங்கள், காய்கள் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் பயன்படுத்தப் படுகின்றது.

* கோவை இலைச்சாறு பத்துமில்லி எடுத்து சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து உள்ளுக்கு காலை மாலை என இரண்டு வேளையும் சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் தணியும், கண்கள் குளிர்ச்சி பெறும். ஆறாப் பெரும் புண்கள், சொறி சிரங்குகள் விரைவில் ஆறும். உடலின் வெட்டைச்சூடு, நீரடைப்பு, நீர்பிரிதலில் எரிச்சல், ஈரல் வீக்கம், மஞ்சள் காமாலை ஆகியனவும் குணமாகும்.

* கோவைக் காயை வாயிலிட்டு மென்று தின்பதால் வாய்ப்புண் விரைவில் ஆறும். நாக்கு அச்சரம் அகலும், பற்களில் இருந்து ரத்தம் கசிதல், சீழ்பிடித்தல், பல் கூச்சம், பல் ஆட்டம் ஆகியனவும் குணமாகும். கோவைக்காய் ஓர் அற்புதமான “ஆன்டிபயாடிக்” என்று சொல்லப்படும் நோய்ப் போக்கி ஆகும்.

* சில கோவை இலைகளை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து ஆறவைத்து நாட்பட்ட ஆறாத புண்கள், நச்சு நீர்வடிந்து நமைச்சலுடன் நாற்றம் வீசும் புண்கள் ஆகியனவும் ஆறும் விதத்தில் அவற்றைக் கழுவி வர விரைவில் ஆறிவிடும்.

* கோவை இலையை மைய அரைத்து அதனோடு வெண்ணெய் சேர்த்துக் குழைத்து புண்கள், அடிபட்ட காயங்கள், தோல் நோய்கள் ஆகியவற்றின்மேல் பூச விரைவில் ஆறிவிடும்.

* கோவை இலையைக் கொதிக்க வைத்து ஆறவைத்த நீரில் வேளைக்கு 35 கிராம் வரைக் கொடுப்பதாலோ அல்லது கோவை இலைகளை நிழலில் காய வைத்து பொடித்து சூரணமாக வெகுகடி அளவு அன்றாடம் அந்தி சந்தி சாப்பிட்டு வா உடல் உஷ்ணம் நீங்குவதோடு புண்கள் ஆறும், நீரடைப்பு போகும். கோவை இலையை எண்ணெய்யில் இட்டு தைலபதமாகக் காய்ச்சி வைத்துக் கொண்டு படை, சொறி, சிரங்கு ஆகிய தோல் நோய்களுக்குப் பூசிவர விரைவில் குணமாகும்.

* கோவை இலையைச் சாறு எடுத்து உடலில் பூசிவிடுவதால் வியர்வை உண்டாகி, வெளிப்பட்டு தோலின் நச்சுக்கள் போல் தோடு உடலும் குளிர்ச்சி பெறும்.

* கோவைக் கிழங்கை காய வைத்து சூரணித்து வெருகடி அளவு இருவேளை சாப்பிட்டு வர நீரிழிவு, படை, சொறி, சிரங்கு, மூட்டு வலிகள், இரைப்பு, கோழை ஆகியன குணமாகும். கோவைக்காயில் உள்ள சத்துப்பொருட்கள் 100 கிராம் கோவைக் காயில் பின்வரும் சத்துக்கள் பொதிந்துள்ளன என ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன.

“அஸ்கார்பிக் ஆசிட்” என்று சொல்லப்பெறும் விட்டமின் ‘சி’ சத்து 1.4 மி.கி. கால்சியம் எனப்படும் சுண்ணாம்புச் சத்து 40 மி.கி., கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச் சத்து 3.1 மி.கி. எனர்ஜி என்னும் ஊட்டச்சத்து 75 கே.ஜே., கொழுப்புச்சத்து 0.1 கிராம், ஃபெரஸ் என்று சொல்லப்படும் இரும்புச்சத்து 1.4 மி.கி., ஃபைபர் எனப்பெறும் நார்ச்சத்து 1.6 கிராம், நியாசின் எனப்படும் ஊட்டச்சத்து 0.7 மி.கிராம், பொட்டாசியம் உப்பு 30 மி.கிராம், புரோட்டின் எனப்படும் புரதச்சத்து 1.2 கிராம், ரிபோஃப்ளேவின் எனப்படும் ஊட்டச்சத்து 0.08 மி.கிராம், தயாமின் என்கிற ஊட்டச்சத்து 0.07 மி.கிராம், நீர்ச்சத்து 93.5 கிராம் அளவும் கோவைக்காயில் அடங்கியுள்ளன.
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " உடல் நலத்தை பாதுகாக்கும் கோவைக்காயின் மருத்துவ குணங்கள் "

Your Comment Has Been Published!