நாம் திராட்சையை சுவைப்பதுபோல உலக நாடுகளில் பிளாக்பெர்ரி விரும்பி சுவைக்கப்படுகிறது. தித்திப்பான சுவையுடைய பிளாக் பெர்ரி, உடலுக்கு அவசியமான பல்வேறு சத்துப் பொருட்களை கொண்டுள்ளன. அது பற்றி பார்ப்போம்...
ஐரோப்பாவை தாயகமாக கொண்டவை பிளாக்பெர்ரி கனிகள். புதர்கள்போல பிளாக்பெர்ரி செடிகள் வளரும். வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறங்களில் பூக்கள் பூக்கும். சிறு திராட்சைகள் ஒட்டியதுபோல பார்வைக்கு அழகான, இனிய சுவையான பிளாக் பெர்ரிகள் பழுக்கும். 3 முதல் 4 செ.மீ. நீளமுள்ள இந்த கனியில் 80 முதல் 100 அறை வடிவங்கள் காணப்படும்.
வட அமெரிக்கா மற்றும் சைபீரியா பகுதிகளில் பிளாக்பெர்ரி அதிகமாக விளைகின்றன. பிளாக்பெர்ரிகள் குறைந்த அளவில் கொழுப்புச் சத்து கொண்டு உள்ளன. 100 கிராம் பழத்தில் 43 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.
நீரில் கரையத்தக்க மற்றும் கரைக்க இயலாத நார்ச்சத்து இதில் கணிசமாக உள்ளது. 100 கிராம் பழத்தில் 5.3 கிராம் நார்ப்பொருள் உள்ளது குறிப்பிடத்தக்கது. பிளாக்பெர்ரியில் உள்ள நார்ப்பொருட்களில் ஒன்றான சைலிட்டால் என்ற சர்க்கரைக்கு மாற்றாக இனிப்பு சுவையை வழங்குகின்றன.
இது குடலில் மெதுவாக குளுக்கோசை கிரகிக்க உதவுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைக்கப்படுகிறது. பல்வேறு நோய் எதிர்ப்பு பொருட்கள் பிளாக்பெர்ரியில் உள்ளன.
அவற்றில் குறிப்பிடத்தக்கவை குவர்செடின், காலிக் அமிலம், சையனிடின், பெலாரகானிடின்ஸ், கேடசின்ஸ், காயெம்பிரால், சாலி சிலிக் அமிலம். இவை புற்றுநோய், நரம்புமண்டல நோய்கள், வயது முதிர்ச்சி, உடல் அழற்சி போன்றவற்றிற்கு எதிராக உடல் ஆரோக்கியத்தை காக்கும்.
100 கிராம் பழத்தில் 23 மில்லி கிராம் அளவு வைட்டமின்-சி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது சக்திவாய்ந்த இயற்கை நோய் எதிர்ப்பு பொருளாகவும், அத்தியாவசிய ஊட்டச்சத்தாகவும் விளங்குகிறது. கனிகளை அதிகமாக உண்டு வைட்டமின் சியை உடலில் சேர்த்துக் கொள்வது நோய்த் தொற்றில் இருந்து உடலைக் காக்கும்.
உடல் அழற்சியை தடுப்பதுடன், தீங்குவிளைவிக்கும் ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களை விரட்டி அகற்றும் பண்பு கொண்டது. இதர வைட்டமின்களான வைட்டமின்-ஏ, வைட்டமின்-இ மற்றும் வைட்டமின்-கே போன்ற அத்தியாவசிய சத்துப்பொருட்களுடன், ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்களும் உள்ளன.
பொட்டாசியம், மாங்கனிசு, மக்னீசியம், தாமிரம் போன்ற தாதுப்பொருட்களும் நிறைந்து காணப்படுகின்றன. தாமிரம் தாதுவானது எலும்பு வளர்ச்சிதை மாற்றத்திற்கும், ரத்தத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கும் பெரிதும் உதவுகிறது.

No Comment to " சத்துப் பட்டியல்:பிளாக் பெர்ரி "
Your Comment Has Been Published!