கருஞ்சீரகம்

By Unknown → வெள்ளி, 26 ஜூன், 2015
Advertise

சமகாலத்தில் எல்லோரையும் மிரட்டும் வியாதியாக இருப்பது புற்றுநோய். அதிலும் உள்ளுறுப்புகளில் வரும் புற்றுநோயானது எவ்வித அறிகுறியையும் காட்டாமல் இரகசியமாய் வளர்ந்து மற்ற உறுப்புகளையும் முடக்கும் போதுதான் தெரியவரும். ஆனால் அப்போது அதை குணப்படுத்த முடியாத அளவு நிலைமை கைமீறி போய் இருக்கும்.

குறிப்பாக கணைய புற்றுநோய் (Pancreatic cancer)அத்தனை எளிதில் அறிகுறியும் தென்படாமல், வந்தபின் குணப்படுத்த மிகவும் கடினமான வியாதி. சர்க்கரை நோயுடன் கர்ப்ப காலங்களில் புகைக்கும் பழக்கம் கொண்ட பெண்களுக்கு பிற்காலத்தில் இந்த புற்றுநோய் வரும் வாய்ப்பு உண்டு. அதோடு நம்மில் பலர் புகைப்பழக்கத்தால் தாமே இந்த கணைய புற்றுநோயை வரவழைத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட மருத்துவத்திற்கு சவாலான கணைய புற்றுநோயை கட்டுப்படுத்த கருஞ்சீரகம் பெரும் பங்கு வகிக்கிறது.

உடலுக்கு தேவையான பிராணசக்தி குறையும் போது உடலுக்குள் உறைந்திருக்கும் புற்றுநோய் கலங்கள் பல்கி பெருகி வளர்ச்சி அடைகின்றன. கருஞ்சீரகம் உடலுக்கு தேவையான பிராண சக்தி, எதிர்ப்பு சக்தியை பெருக்குவதுடன், இயற்கை நச்சுயிரிப் பெருக்கத் தடுப்புப் பொருளாகவும் (natural interferon), எலும்பு மஜ்ஜை உற்பத்தி சீராக இயங்க வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவை சமன் செய்யவும் பேருதவி புரிகிறது.

மேலும் இதில் உடலுக்கு தேவையான பலவித அமிலங்களான மிரிஸ்டிக் அமிலம், பாமிற்றிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், ஒலீயிக் அமிலம், லினோலியிக் அமிலம், ஒமேகா-6 ஃபேட்டி அமிலம், ஃபோலிக் அமிலம் போன்றவற்றை உள்ளடக்கியது. மற்றும் புரதம், கல்சியம், இரும்புச்சத்து, காப்பர், ஜிங்க், பாஸ்பரஸ், விட்டமின்கள் B1, விட்டமின்கள் B2, விட்டமின்கள் B3 போன்ற சத்துக்களை உள்ளடக்கிய அறிய மூலிகையே இந்த கருஞ்சீரகம்.

மருத்துவகுணங்கள்

*தோல் நோயை குறைப்பதில் கருஞ்சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

*பசியைத் தூண்டவும் கருஞ்சீரகம் பயன்படுகிறது. ஜீரணத்தை சீர்படுத்தும்.

*வயிற்றுப் போக்கை குணப்படுத்தும்.

*கருஞ்சீரகம் புழுக்கொல்லியாக செயல்படும். வாந்தியைத் தடுக்கும். இதய வலியை குறைக்கும்.

*சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.

*கருஞ்சீரகத்தை நீர் விட்டு அரைத்து, நல்லெண்ணையில் குழைத்து கரப்பான், சிரங்கு ஆகியவற்றில் பூசி வர குணம் தெரியும்.

*கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து பிரசவித்த பின் ஏற்படும் வலிக்குப்பூசிட வலி மாறும்.

*கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மேல் பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும்.

*கருஞ்சீரகத்தை வறுத்து காடி விட்டு அரைத்து சொறி, தேமல் மேல் பூசி வர தேமல், சொறி மறையும்.

கருஞ்சீரக பூ*கருஞ்சீரகப்பொடி, மல்லிப்பொடி இரண்டையும் பாலில் கலந்து சாப்பிட அஜீரணம் மாறும்.

*கருஞ்சீரகப் பொடியை தயிரில் கலந்து சாப்பிட அஜீரணம் மற்றும் வாயு உற்பத்தி மாறும்.

*கருஞ்சீரகத்தை எருமைப்பால் விட்டு அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு மாறும்.

*கருஞ்சீரகத்தை வெற்றிலை சாறு விட்டு அரைத்து காது, கன்னப் பகுதியில் ஏற்படும் வீக்கம் மேல் பற்று போட வீக்கம் மறையும்.

*கருஞ்சீரகத்தை vinegarல் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்

*கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.

*கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீர்பை கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும்.

*கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது

* கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி நல்எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.

* இது தலைமுடிக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியது. கருஞ்சீரகத்தை 4 டீஸ்பூன் எடுத்துக்கொண்டு லேசாக வறுக்கவும். 250 மி.லிட்டர் நல்லெண்ணெயைக் காய்ச்சி அதில் போட்டு வேக விடவும். (எண்ணெய் புகை வரம்படி காயக்கூடாது). பின் ஆறியதும், இந்த எண்ணெயை வடிகட்டி வைத்துக் கொண்டு தலையில் தேய்த்து வரலாம்.

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " கருஞ்சீரகம் "

Your Comment Has Been Published!