Advertise

கருப்பு கண் பீன்ஸ் விதை பேருக்கு ஏற்றார் போல வெள்ளை நிறத்தில் சிறிய கண் போன்ற கருப்பு நிற புள்ளியை பெற்றுள்ளது. பொதுவாக பீன்ஸை சமையலுக்கு பயன்படுத்துவோம் அதிலும் கருப்பு நிற புள்ளிகளைக் கொண்ட பீன்ஸ் கூடுதலான ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. வெள்ளை நிற அவரை விதை உடலுக்கு ஆரோக்கிய பலன்களை தரக்கூடிய நார்சத்து, புரதம், இரும்பு சத்துகளை பெற்றுள்ளது.

வெள்ளை நிற அவரை விதையை 1/2 கப் எடுத்து சமைக்கும் போது 5.6 கிராம் நார்சத்து கிடைக்கும் அதுவே தகரடப்பாக்களில் அடைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்ட 1/2 கப் அவரையை எடுத்துக்கொண்டால் 4 கிராம் நார்சத்து மட்டுமே கிடைக்கும். இந்த அவரை மற்ற அவரையிலிருந்து வேறுபடக்கூடியது. ஃபைபர், ஊட்டச்சத்துகளை வெள்ளை நிற பீன்ஸ் பெற்றுள்ளதால் செரிமான அமைப்பை சீராக இயக்குகிறது. மேலும் மலசிக்கல், எரிச்சலூட்டும் குடல் நோய்தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது..

ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய நார்சத்துகளை பெற்றுள்ளதால் கொழுப்பு அளவுகளை கட்டுபடுத்தி ரத்தஓட்டத்தின் போது உறிஞ்சப்படும் கொழுப்பு அளவுகளை தடுத்து இதயநோய் உருவாவதற்கான ஆபத்தை குறைத்து இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது. உலர்த்தி சமைத்த 1/2 கப் வெள்ளை நிற பீன்ஸில் 239 மில்லிகிராம் பொட்டாசியம் பெற்றுள்ளது. அதேபோல பதப்படுத்தப்பட்ட அவரையில் 206 மில்லிகிராம் பொட்டாசியம் பெற்றுள்ளது.

பொட்டாசியம் ரத்த அழுத்த அளவுகளை கட்டுபடுத்தி இதயநோய் ஆபத்தை குறைக்கிறது மேலும் தசைகள், எலும்புகளுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குகிறது. இது குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்த கலோரியை கொண்டுள்ளது. எடைகட்டுபாட்டிற்கு சிறந்த உணவு மட்டுமல்லாமல் இதயநோய், நீரிழிவுநோய், மனஅழுத்தம் மேலும் பல ஆரோக்கிய நலன்களை பெற்றுள்ளது.

இறைச்சி வகைகள் சாப்பிட விருப்பாதவர்களுக்கு சிறந்த மாற்று உணவாக இருக்கிறது அவரை விதைகள். தசைகள், தோல், முடி மற்றும் நகங்கள், உட்பட உடலின் பல பாகங்களுக்கு தேவையான புரதசத்துகளை வழங்குகிறது. உடலுக்கு ஆற்றலை வழங்குவதற்கு தேவையான புரதசத்துகளை கொண்டுள்ளது. உலர்த்தி சமைத்த 1/2 கப் வெள்ளை நிற அவரை விதையில் 6.7 கிராம் புரதமும், மற்றும் பாதுகாக்கப்பட்ட 1/2 கப் விதையில் 5.7 கிராம் புரதசத்துகளும் உள்ளது.

உலர்த்தி சமைத்த 1/2 கப் வெள்ளை நிற அவரை விதையில் 1.2 மில்லி கிராம் இரும்புசத்துக்களும், மற்றும் பாதுகாக்கப்பட்ட 1/2 கப் விதையில் 2.2 கிராம் இரும்புசத்துகளும் கொணடுள்ளது. போதுமான அளவு விதைகளை உணவில் சேர்த்துக்கொண்டால் சோர்வு பலவீனம், ரத்தசோகை ஆகியவற்றை தடுக்கிறது. இரும்புசத்துகள் உடல் முழுவதிற்கும் தேவையான ஆக்ஸிஜனை எடுத்துச்சென்று செல்கள், தசைகளுக்கு தேவையான விநியோகத்தை வழங்குகிறது. வாரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு அவரை விதைகளை பயன்படுத்தி சமையல் செய்யுங்கள். உடலுக்கு தேவையான இரும்பு சத்து, நார்சத்து, புரதசத்துகள், குறைந்த கொழுப்பு மற்றும் கலோரிகளையும் கொண்டுள்ளது கருப்பு கண் பீன்ஸ்.

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " இதயத்தைப் பாதுகாக்கும் கருப்பு கண் பீன்ஸ் "

Your Comment Has Been Published!