ஒற்றை தலைவலி வைத்தியம்

By Unknown → வெள்ளி, 26 ஜூன், 2015
Advertise

தலைவலியும், கா‌ய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்னு சொல்வாங்க. ஆனா தலைவலி வர்றதுக்கு பல காரணங்க‌ள் இருக்கு. அதிலும் இந்த ஒற்றை தலைவலி இருக்கே… அப்பப்பா அதை அனுபவிச்சு பார்த்தவங்களுக்குத்தான் தெரியும். இன்றைய அவசர உலகத்துல… வேலைப்பளு, மனஅழுத்தம் காரணமா வரக்கூடிய ஒற்றைத்தலைவலி பரவலா காணப்படுது.

இந்த ஒற்றைத்தலைவலி கம்ப்யூட்டரே கதினு கிடக்குறவங்களுக்கு மட்டுமில்ல… கடை வச்சிருக்கிற அண்ணாச்சிக்கும்கூட வரும். ஆமா… நான் வசிக்குற பகுதியில கடை வச்சிருக்குற நடுத்தர வயசுக்காரருக்கு ஒற்றை தலைவலி. ரெண்டு மூணு நாளா கடை பக்கம் போகும்போது அவர் தலையை குனிஞ்சுக்கிட்டே இருந்தாரு. சூரியனை அவரால பார்க்க முடியல, கண்ணுல இருந்து தண்ணி கொட்டிச்சி. சரி… வேற ஏதோ இருக்கும்னு நானும் என் வேலை அவசரத்துல போ‌ய்ட்டேன்.

ஒருநா‌ள் அவர் கடைக்கு வெளிப்புறமா தலையில கையை வச்சபடி நின்னாரு. அவரைச்சுத்தி நாலைஞ்சு பெரிய மனுஷங்க ஆளாளுக்கு ஏதோ சொல்லிட்டு இருந்தாங்க. நான் என்ன விஷயம்னு கேட்டேன், அப்போதான் அவருக்கு ஒற்றைத்தலைவலி வந்திருக்குற விஷயம் எனக்கு தெரியும். ஜலதோஷத்தால வரக்கூடிய தலைவலிக்கு நொச்சி இலையை வேது (ஆவி பிடித்தல்) பிடிச்சா சரியாயிரும் அந்த வைத்தியத்தை அந்த பெருசுங்க அவருக்கு சொல்லிட்டு இருந்தாங்க. நான் அதை எடுத்துச் சொல்லும்போது அந்த பெருசுங்க ஒருமாதிரி ஏளனமா பார்த்தாங்க.

கடைக்காரர் தனியா வந்ததும் அவரைக்கூப்பிட்டு விஷயத்தை சொன்னேன். அந்த மனுஷன் ஒற்றைத் தலைவலியால அவதிப்பட்டு வர்றதை என்னால பார்த்துட்டு சும்மா இருக்க முடியல. உடனடியா களத்துல இறங்குனேன். ஆரஞ்சுப்பழத்தோல் இருக்கான்னு கேட்டேன். பக்கத்து வீட்டுல இருந்திச்சி. அதை வாங்கி வந்து தோலை பிழிஞ்சி காதுல விட்டேன். தலைவலி எந்தப்பக்கம் இருக்கோ அதுக்கு எதிர்ப்புறம் உ‌ள்ள காதுல இந்த சாறை பிழியணும். சாறு ஊத்தின சில நிமிடங்க‌ள்ல அவருக்கு வலி கொஞ்சம் கொஞ்சமா விலகிப்போனது. அது தற்காலிகமான ட்ரீட்மெண்ட்தான்.

அடுத்து மூணு நா‌ள் ஒரு வைத்தியம் சொன்னேன். அதாவது, வெ‌ள்ளை எ‌ள்ளை எருமைப்பால் விட்டு அரைச்சு நெத்தியில பற்று போட்டு காலையில உதிக்குற சூரியனை பார்க்கச்சொன்னேன். கூடவே இன்னொரு வைத்தியமும் சொன்னேன். அதாவது, ஒரு டம்ளர் கேரட் சாறோட கால் டம்ளர் பசலைக்கீரைச்சாறு, கால் டம்ளர் பீட்ருட் சாறு சேர்த்து குடிக்கச்சொன்னேன். இப்போ ஒற்றை தலைவலி அவருக்கு இல்லை. அஞ்சு நா‌ள் செஞ்சார்…. வலி போயே போச்சு. ஆனா மனுஷன் என்ன சொன்னார்னா நீங்க சொன்னதை செஞ்சேன், ஆனா அது தானா சரியாகிட்டுனு சொன்னார். இந்த வைத்தியத்துக்கு நான் ஒரு பைசா வாங்கல. ஆனாக்கூட நம்ம வைத்தியத்தாலதான் சரியானதுனு அவர் சொல்ல முன்வராதது கொஞ்சம் வருத்தமே.

ஒற்றை தலைவலிக்கு இன்னொரு வைத்தியமும் சொல்றேன்… பூண்டையும், மிளகையும் தட்டிப்போட்டு நல்லெண்ணையில சேர்த்து கா‌ய்ச்சி ஆறின பிறகு தலையில தே‌ய்ச்சி குளிச்சாலும் நல்ல பலன் கிடைக்கும் எ‌ன்‌கிறா‌ர் ந‌ம்ம மூலிகை வைத்தியர் தமிழ்குமரன்

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " ஒற்றை தலைவலி வைத்தியம் "

Your Comment Has Been Published!