மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனத்தின் புதிய இயங்குதளமான ‘விண்டோஸ் 10’ (Windows 10) ஜூலை 29 அன்று வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்ட்டிருக்கிறது.
கடந்த 2012ஆம் ஆண்டில் விண்டோஸ் - 8 இயங்குதளத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அப்போது அடுத்த 20 ஆண்டுகளுக்கு அந்த இயங்குதளம் பயன்பாட்டில் இருக்கும் என்று மைக்ரோசாஃப்ட் கூறியது. ஆனால் விண்டோஸ் - 8 இயங்குதளம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத காரணத்தால் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில், விண்டோஸ் - 10 இன் சோதனைப் பதிப்பு (Beta Version) வெளியிடப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இப்பதிப்பின் குறைகளை பயனரிடமிருந்து பெற்று முழுமையான பதிப்பாக தற்போது இது வெளியிடப்படுகிறது. விண்டோஸ் 7, விண்டோஸ் 8. அல்லது விண்டோஸ் போன் 8.1 மென்பொருளை பயன்படுத்துவோர், விண்டோஸ் 10 இயங்குதளத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கி அப்டேட் செய்து ஒரு வருடம் வரை இலவசமாக பயன்படுத்தலாம் என்று மைக்ரோசாப்ட் கூறியுள்ளது.
அந்த மென்பொருள், டெஸ்க்டாப் கணினிகள், திறன்பேசிகள், மடிகணினிகள் மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன் கன்சோல் (X Box Console) ஆகியவற்றில் இயங்கும் வகையில் ஒருங்கிணைந்த இயங்குதளமாக உருவாக்கப்பட்டுள்ளது.
No Comment to " விண்டோஸ் 10 அடுத்த மாதம் "
Your Comment Has Been Published!