Browsing "Older Posts"

Browsing Category "ஐபோன்"

ஆப்பிள் ஐபோன் 6, சாம்சங் கேலக்ஸி S6 மற்றும் HTC One M9+ ஆகிய விலையுர்ந்த ஸ்மார்ட் போன்களுக்கு போட்டியாக, ’LG G4’ என்னும் புதிய ஸ்மார்ட் போன் 51,000 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் எல்ஜி நிறுவனம், LG G4 ஸ்மார்ட் போனை வெளியிடப்போவதாக அறிவித்திருந்தது. ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து ஆன்லைன் மூலம் ஸ்மார்ட்போன் வாங்க முன்பதிவு தொடங்கிய நிலையில் நேற்று எல்ஜி இந்தியாவின் விளம்பரத் தூதரான, அமிதாப் பச்சன் மும்பையில், LG G4 ஐ அறிமுகப்படுத்தினார்.

LG G4 சிறப்பம்சங்கள் : 
1. லெதர் மூலம் வடிவமைக்கப்பட்ட பின்புற பேனல் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேனல் ஆறு நிறங்களில் கிடைக்கும்.

2. 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாலகாம் ஸ்னாப்டிராகன் (Qualcomm Snapdragon) 808 64-பிட் ஹெக்சா கோர் பிராசஸர் மற்றும் 3GB RAM வசதி.  

3. 16 MP ப்ரைமரி கேமரா, 8 MP முன்புற கேமரா, குறைந்த வெளிச்சத்திலும் துள்ளியமான புகைப்படங்களை எடுக்க உதவும் f1.8 லென்ஸ்.

4. 32 GB சேமிப்பு வசதி மற்றும் microSD கார்ட்.

5. இரட்டை சிம் கார்ட் வசதி.

எல்.ஜி நிறுவனம் எச்.டி.எஃப்.சி வங்கியுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு, இந்த புதிய ஸ்மார்ட் போனை தவணை முறையில் வழங்கவும் முடிவு செய்துள்ளது.

மொபைல் விற்பனை சந்தையில் லாபத்தை அதிகரிக்கவும், ஐபோன் போன்ற முன்னனி ஸ்மார்ட்போன்களுக்கு கடுமையான போட்டியாக விளங்கவும் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளதாக எல்.ஜி நிறுவனம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐபோனுக்கு போட்டியாக ’LG G4’ அறிமுகம்

By Unknown → செவ்வாய், 23 ஜூன், 2015