Browsing "Older Posts"

Browsing Category "அண்ட்ராய்டு"

ஆப்பிள் ஐபோன் 6, சாம்சங் கேலக்ஸி S6 மற்றும் HTC One M9+ ஆகிய விலையுர்ந்த ஸ்மார்ட் போன்களுக்கு போட்டியாக, ’LG G4’ என்னும் புதிய ஸ்மார்ட் போன் 51,000 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் எல்ஜி நிறுவனம், LG G4 ஸ்மார்ட் போனை வெளியிடப்போவதாக அறிவித்திருந்தது. ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து ஆன்லைன் மூலம் ஸ்மார்ட்போன் வாங்க முன்பதிவு தொடங்கிய நிலையில் நேற்று எல்ஜி இந்தியாவின் விளம்பரத் தூதரான, அமிதாப் பச்சன் மும்பையில், LG G4 ஐ அறிமுகப்படுத்தினார்.

LG G4 சிறப்பம்சங்கள் : 
1. லெதர் மூலம் வடிவமைக்கப்பட்ட பின்புற பேனல் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேனல் ஆறு நிறங்களில் கிடைக்கும்.

2. 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாலகாம் ஸ்னாப்டிராகன் (Qualcomm Snapdragon) 808 64-பிட் ஹெக்சா கோர் பிராசஸர் மற்றும் 3GB RAM வசதி.  

3. 16 MP ப்ரைமரி கேமரா, 8 MP முன்புற கேமரா, குறைந்த வெளிச்சத்திலும் துள்ளியமான புகைப்படங்களை எடுக்க உதவும் f1.8 லென்ஸ்.

4. 32 GB சேமிப்பு வசதி மற்றும் microSD கார்ட்.

5. இரட்டை சிம் கார்ட் வசதி.

எல்.ஜி நிறுவனம் எச்.டி.எஃப்.சி வங்கியுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு, இந்த புதிய ஸ்மார்ட் போனை தவணை முறையில் வழங்கவும் முடிவு செய்துள்ளது.

மொபைல் விற்பனை சந்தையில் லாபத்தை அதிகரிக்கவும், ஐபோன் போன்ற முன்னனி ஸ்மார்ட்போன்களுக்கு கடுமையான போட்டியாக விளங்கவும் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளதாக எல்.ஜி நிறுவனம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐபோனுக்கு போட்டியாக ’LG G4’ அறிமுகம்

By Unknown → செவ்வாய், 23 ஜூன், 2015

இந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸ்,  அதன் புதிய கேன்வாஸ் தொடர் ஸ்மார்ட்போனான கேன்வாஸ் சில்வர் 5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த புதிய ஸ்மார்ட்போனை, உலகின் மெலிதான மற்றும் லேசான 4G சாதனம் என்று மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.  

'மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் சில்வர் 5' ஸ்மார்ட்போன் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய பத்து அம்சங்கள்

1.ஆண்டிராய்ட் லாலிபாப் ஒ.எஸ். (Android Lollipop)

2.  4G இணைப்பு வசதி

3. 4.8 இன்ச் Amoled திரை (touchscreen).

4. 97 கிராம் எடை

5. 5.1 mm தடிமன் (Thickness)

6.  5 MP முன்புற கேமரா, 8 MP பின்புற கேமரா

7. 2GB RAM வசதி உள்ளது

8. 2000 mAh திறன் கொண்ட பேட்டரி

9. 64-பிட் குவால்காம் ஸ்னாப் டிராகன் (Qualcomm Snap dragon ) 401 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது

10. கருப்பு நிறம் சாம்பல் ஃப்ரேம் மற்றும் வெள்ளை நிறம் கோல்டன் ஃப்ரேம் என இரு ரகங்களில் கிடைக்கிறது.  

மற்ற மைக்ரோமேக்ஸ் தயாரிப்புகளை ஒப்பிடும் போது, இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை  சற்று அதிகமாகவே  உள்ளது. 17,999 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த ஸ்மார்ட்போன், மைக்ரோமேக்சின் தயாரிப்புகளின் மதிப்பை அதிகரிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் உலகின் சிறந்த மொபைல் உற்பத்தியாளர் பட்டியலில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

​’மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் சில்வர் 5’ அறிமுகம்

By Unknown →

சைனீஸ் மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஜியோனி தனது புதிய தயாரிப்பான ஜியோனி Elife E8-யை இந்த மாதம் அறிமுகம் செய்துள்ளது, இந்த மொபைலானது 6.0 அங்குல அமோ எல்இடி(AMOLED) அதிநவீன தொடுதிரையுடன் வெளியாக உள்ளது, ஜியோனி Elife E8-மொபைல் பல பிரமாதமான வசதிகளுடன் அறிவிக்கப் பட்டுள்ளது.
ஜியோனி இலைஃப் E8-ல் பட்ஜெட் ப்ராஸசர் தயாரிப்பில் தலை சிறந்து விளங்கும் மீடியாடெக் நிறுவனத்தின் Mediatek MT-6795 2GHZ ஆக்டா கோர் (octa-core) ப்ராஸசரரில் செயல்படுகிறது, வீடியோ ப்ராஸசராக பவர் வீஆர் G6200 (powerVR G-6200) பயன்படுத்தப் பட்டுள்ளது.
பயனாளர் மெமோரி 64ஜிபி, ராமின் அளவு 3ஜிபி, மெமோரி கார்டு விபரம் தெரியவில்லை, 24 மெகாபிக்ஸல் பின்பக்க கேமரா, 8 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைஷேசன், இரட்டை எல்.இ.டி ஃப்ளாஷ் லைட், ஹைஃபை ஆடியோ இன்னும் பல.
பேசும் நேரம் மற்றும் காத்திருப்பு நேரம் பற்றி தகவல் இல்லை இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தில் இயங்குவதாக குறிப்பிடபட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்:
ஆண்ட்ராய்டு 5.1
பயனாளர் மெமோரி 64ஜிபி
ராம் 3ஜிபி
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைஷேசன்
2GHZ ஆக்டா கோர் ப்ராஸசர்

திரை அமைப்பு6.0 அங்குலம் ( 1440 x 2560 புள்ளிகள்) நவீன தொடுதிரை 490 ppi
ரேம் நினைவகம்3 ஜிபி
உள் நினைவகம்64 ஜிபி
நினைவக அட்டைதகவல் இல்லை
ப்ராசஸர்மீடியாடெக் MT-6795 2 GHZ ஆக்டா கோர் ப்ராஸசர்வீடியோ ப்ராசஸர்: பவர் வீஆர் G-6200
இயங்குதளம்ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1
கேமராபின் கேமரா 24 மெகாபிக்ஸல் ( 5632 x 4224 ) முன் கேமரா 8 மெகாபிக்ஸல்,  ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைஷேசன், ஆட்டோ ஃபோகஸ் இரட்டை எல்.இ.டி ப்ளாஷ் ,
சென்ஸார்கள்ஆக்ஸிலரோமீட்டர், ப்ரோக்ஸிமிட், காம்பஸ்,
வசதிகள்2ஜி, 3ஜி, ப்ளூடூத் 4.1, வை ஃபை 802.11 பி/ஜி/என், வை ஃபை ஹாட்ஸ்பாட், வை ஃபை டைரெக்ட்,என்.எஃப்.சி, ஹைஃபை ஆடியோ, எஃப்.எம் ரேடியோ
பேட்டரி3500 மில்லிஆம்பியர்
பேசும் நேரம்மணி நேரம்
காத்திருப்பு நேரம்மணி நேரம்

ஜியோனி Elife E8 ஹைடெக் மொபைல்

By Unknown → செவ்வாய், 16 ஜூன், 2015