Browsing "Older Posts"

Browsing Category "சித்த மருத்துவம்"

படர்தாமரைபடர்தாமரைக்கான சில எளிய கை வைத்தியங்கள்

உங்கள் சருமத்தில் அழற்சி போன்று வட்ட வடிவில் சிவப்பாக ஏதேனும் இருந்தால், அது தான் படர்தாமரை. இந்த படர்தாமரையானது பூஞ்சையினால் ஏற்படக்கூடியது. மேலும் இந்த படர்தாமரை சருமம், நகம், தலை, உள்ளங்கை அல்லது பாதங்களில் தான் அதிகம் ஏற்படும். இந்த நிலை முற்றினால், அது கடுமையான அரிப்புகளை ஏற்படுத்தும்.

மேலும் படர்தாமரை பரவக்கூடிய ஒன்று. அதிலும் சருமத்துடன் தொடர்பு கொண்டாலோ அல்லது அவர்கள் பயன்படுத்திய துணியை பயன்படுத்தினாலோ, இது பரவும். இது சருமத்தில் ஏற்படும் மற்ற பிரச்சனைகளைப் போன்றது அல்ல. எனவே படர்தாமரை உங்களுக்கு இருந்தால், அதனைப் போக்க உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதற்காக பல க்ரீம்கள், ஆயின்மெண்ட் போன்றவை கடைகளில் விற்கப்படுகிறது. இருப்பினும் இயற்கை மருத்துவத்தைப் போல் எதுவும் பலன் தருவதில்லை.

முக்கியமாக இந்த பிரச்சனை பெரியோர்களை விட குழந்தைகளுக்கு தான் அதிகம் ஏற்படும். எனவே குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

பூண்டு
பூண்டுகளில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களினால், இதன் நன்மைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அதிலும் படர்தாமரையை நீக்க, பூண்டு பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு பூண்டை அரைத்து சாறு எடுத்து, அதனை படர்தாமரை உள்ள இடங்களில் தடவி வர வேண்டும்.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயிலும் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. இதனைக் கொண்டு பல பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். அதிலும் படர்தாமரை இருந்தால், அவ்விடத்தில் தேங்காய் எண்ணெயை தொடர்ந்து தடவி வர, படர்தாமரை நீங்குவதோடு, அது பரவுவதும் தடுக்கப்படும்.

ஆப்பிள் சீடர் வினிகர் apple cider vinegar
ஆப்பிள் சீடர் வினிகரில் பூஞ்சை காளான் எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ளது. இதனால் இவற்றைக் கொண்டு படர்தாமரைக்கு விரைவில் நிவாரணம் காணலாம்.

சூடம்/கற்பூரம்
படர்தாமரைக்கு நல்ல தீர்வை கற்பூரமும் வழங்கும். ஏனெனில் கற்பூரத்திலும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ளது.

கடுகு எண்ணெய்
கடுகு அல்லது அதன் எண்ணெயை தினமும் படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வந்தால், படர்தாமரை மறையும்.

உப்பு மற்றும் வினிகர்
உப்பை வினிகருடன் சேர்த்து கலந்து, படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வந்தால், நாளடைவில் படர்தாமரை மறைவதைக் காணலாம்.

ஆலிவ் எண்ணெய்
ஆவில் எண்ணெயை படர்தாமரையின் மீது தடவி வர, விரைவில் அது போய்விடும்.

மஞ்சள் தூள்
மஞ்சள் தூளின் மகிமையினால், பக்டீரியாக்கள் மட்டுமின்றி, பூஞ்சையின் தாக்குதல்களையும் தடுக்கலாம். அதிலும் இதனை படர்தாமரை உள்ள இடத்தில் தினமும் தடவி வந்தால், படர்தாமரை நீங்கும்.

பப்பாளி
பப்பாளியில் உள்ள பூஞ்சை காளான் எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பக்டீரியல் தன்மை, சரும பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தரும். அதிலும் பச்சை பப்பாளியை பசைபோல் அரைத்து, சருமத்தில் தடவி வர வேண்டும்.

படர்தாமரை

தோலில் ஏற்படும் தொற்று நோய்களில் முதன்மையானது “படர்தாமரை” எனப்படும் ஒரு வகையான தேமல் ஆகும். இது உச்சந்தலை, முகம், பிறப்பு உறுப்புகள் ஆகிய இடங்களில் படர்ந்து பரவும் தன்மையுடைய தொற்று நோயாகும்.

இத்தகைய தேமல் பரவிய இடங்களில் தோல் நிறமாற்றம் அடைந்து அடர் கருப்பு நிறமாகி விடும். தீராத அரிக்கும் தன்மை உடைய இதனை சொறிந்து விட்டால் அதிலிருந்து வெளியாகும் நீர்மத்தினால் இது மேலும் உடலின் மற்ற பாகங்களில் பரவிடும். பெரும்பாலும் உடல் சுத்தம் மற்றும் உடைச் சுத்தம் இல்லாதவர்களுக்கே இத்தகைய தொற்று உண்டாகிறது.

தற்போதைய நவீன மருத்துவம் இந்த பிரச்சினைக்கு நல்ல பல தீர்வுகளை அளிக்கிறது. இருப்பினும் இந்த நோய்க் கிருமிகள் உடலின் உள்ளுறையும் தன்மையுடவை என்பதால் தொடர் சிகிச்சையினால் மட்டுமே முழுமையான தீர்வு கிடைக்கும். இது செலவு பிடிக்கக் கூடியது.

படர்தாமரை பிரச்சினைக்கு தேரையர் அருளிய தீர்வு ஒன்றினை பார்ப்போம். தேரையர் வாகடம் என்னும் நூலில் இருந்து இந்தக் குறிப்பு எடுக்கப்பட்டது.

கொன்றைக் கொழுந்து தகரைவிதை குழலா வரைவேர் குளவிந்தம்
மனறத் துளசி திரிபலையும் மற்று மிலுப்பைப் புண்ணாக்கும்
ஒன்றக் கூட்டிப் பழமோரில் ஊறி யெடுத்தெலு மிச்சம்சாற்றில்
நன்றா யரைத்துப் பூசியிட நாடா படர்தா மரைதானே.– தேரையர்.

கொன்றைக் கொழுந்து, தகரவிதை, ஆவாரைவேர், மஞ்சள், துளசி, கடுக்காய், தான்றிக்காய், நெல்லி முள்ளி, இலுப்பைப் பிண்ணாக்கு, ஆகியவற்றை சம அளவில் எடுத்து தூளாக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் இவற்றை பழைய மோரில் ஊறவைத்து எடுத்து,எலுமிச்சைச் சாற்றுவிட்டு நன்கு அரைத்துப் படர்தாமரை இருக்கும் பகுதிகளில் பூசிவர குணமாகும் என்கிறார்.

மேலே சொன்ன மூலிகைகள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. விலையும் மிக மலிவுதான். தேவை உள்ளவர்கள் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று இயற்கையான இந்த மருந்தினை நாம் வீட்டிலேயே தயாரித்து பலன் பெறலாம்.

படர்தாமரை

By Unknown → வெள்ளி, 26 ஜூன், 2015
தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதை யில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது.மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது.

சித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது.

கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இத்தேன் மருந்துடன் சேர்த்து உண்ணும் அனுபானத்திற்குச் சிறந்ததாக விளங்குகிறது.

மருந்துகளைத்தேன் கலந்து கொடுப்பதால் ஜீரணப் பாதையில் வெகு சீக்கிரமாக மருந்து உறிஞ்சப்பட்டு விடும். இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல் புரியும். மருத்தின் வீரியம் குறையாமல் மருந்தால் வயிறு, குடல்களுக்கு ஏற்படும் பின் விளைவுகளை தேன் தடுத்து நிறுத்தும். தேன் சேர்த்து தயாரித்த மருந்துகள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். மருந்தின் வீரியமும் கெடுவதில்லை. இந்திய மருத்துவ முறைகளில் தேன் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

சிறியவர் முதல் பெரியவர்வரை பொருந்தும் உணவும், மருந்தும்தேன்தான்.. தேனில் எளிமையாக ஜீரணமாகும் சர்க்கரை சத்துக்கள் இருப்பதால் கடும் உழைப்பாளிகள் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுவோர் இடையிடையே தேன் கலந்த பானம் பருகலாம். தேனில் உள்ள சர்க்கரைச் சத்து வாயிலும், குடலிலும் வெகு சீக்கிரத்தில் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் உழைப்பின் களைப்பு நீங்கும்.

தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களைச் சீராக விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் படைத்தது. அதனால் இதய நோய் இதயத்தில் நுழையபயப்படும்.

எகிப்து நாட்டில் கண் நோய், தோல் நோய் மருத்துவத்தில் தேனைப் பயன்படுத்துகிறார்கள். ரஷ்ய நாட்டின் நாட்டுப்புற மருத்துவத்தில் தேன் முக்கிய இடம் வகிக்கிறது. தேனுடன் பிற உணவுப் பொருட்கள் தானியங்களை ஊற வைத்து உண்ணும் பழக்கம் ரஷ்ய நாட்டில் இன்னும் வழக்கத்தில் உள்ளது.

தேனுடன், இஞ்சி, விதை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும் ஊறவைத்து நம் நாட்டில் உட்கொள்வார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மல பந்தம் நீங்கி, ஜீரணப்பாதை சீராகும்.

அரை டம்ளர் முதல் ஒரு சிறிய டம்ளர் அளவு (50 மி.லி முதல் 100 மி.லி.வரை) ஆறிய வெந்நீரில் அல்லது அதே அளவு கொதித்து ஆறிய பாலில் ஒரு டீஸ்பூன் முதல் மூன்று டீஸ்பூன்வரை தேன் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்துங்கள். குழந்தை முதல் வயதானோர்வரை தேனை உட்கொள் ளலாம். நோய் எதிர்ப்புத் தன்மை பெருகி உடல் ஆரோக்கியம் கிட்டும். படுக்கும் முன் தேன் அருந்தினால் நல்ல உறக்கத்தை நல்கும்.

இரத்த சோகையை அகற்ற:

நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும். தினசரி 100 கிராம் அளவிற்கு மேல் தேன் உட் கொள்ளக்கூடாது. காலை 30 கிராம், மதியம் 40 கிராம், இரவு 30 கிராம் அளவாகப்பிரித்து உட்கொள்ள வேண்டும். ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும். மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு. 100 கிராம் தேனில் சுமார் 355 உடற்சூடு தரும் கலோரிகள் உள்ளன.

தேனை வயிற்றின் நண்பன் என்று குறிப்பிடலாம். ஒன்று முதல் மூன்று டீஸ்பூன் தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வருவதால் வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும். இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும். மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன்.

தேனீ சேகரிக்கும் தேனில் சிறிதளவு மகரந்தமும் கலந்திருக்கும். பூக்களுக்குத் தக்கவாறு நாடு, காலத்திற்கு ஏற்றவாறும் தேனின் ருசி, மனம், குணம், தடிமன் வேறு படும். குடகு பகுதியில் கிட்டும் ஒரு வகைத் தேன் வெள்ளி நிறத்தில் ஜீனி (சர்க்கரை) கரைத்தது போல் இருக்கும்.

தேன் கூட்டை பிரித்து கையால் பிழித்தெடுக்கும் தேனில் புழு, பூச்சி, தூசி கலந்து இருக்கும். தேன் கூட்டிலிருந்து நேரடியாக ஒழுகும்போது சேகரிக்கப்படும் தேன் சுத்தமான முதல் தரமானது.

சேகரிக்கப்பட்ட தேன் இனிப்பு சுவையுடன் தெளிவாக இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். நாளடைவில் மங்கிய நிறத்திற்கு மாறி விடும். சுமார் மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை தேனை வைத்திருந்து சாப்பிடலாம். பழைய தேனும் உட்கொள்ள உகந்த நிலையடைகிறது. நாள் பட வைத்திருந்தும் தேனை பயன்படுத்தலாம். நாள்பட்ட சுத்தமான தேனில் படிகம் ஏற்படும். இதனை நாட்டுப்புற மக்கள் விளைந்த தேன் என்பர். விளைந்த தேனையும் உட்கொள்ளலாம்.

தேனில் உள்ள சர்க்கரை சத்து, வைட்டமின் சத்து, உலோக சத்து உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. அபூர்வமாக சிலருக்கு தேனில் கலந்துள்ள மகரந்தமும், மெழுகும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். தேனில் சிறிதளவு தேன் மெழுகும் கலந்திருக்கும், தேன் மெழுகு உடலுக்கு நன்மை செய்ய வல்லது. தேன் மெழுகு உடலை மெருகேற்றும் தன்மையை பெற்றது. ஆயுளை நீட்டிக்கும் அறிய குணம் தேன் மெழுகிற்கு உண்டு.

தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையான பானத்தை முனிவர்கள் முதல் தேவர்கள் வரை விரும்பி அருந்தி வந்தனர் என ரிக் வேதத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. ரோமானியர்கள் மூல்லும் என்ற பானத்தையும், ரஷ்யர்கள் லிப்பிடெஸ் என்ற பானத்தையும், கிளாரி பிராகெட் என்ற சுவையான பானத்தை பிரிட்டிசாரும் உபயோகித்து வந்தனர். இவர்கள் உட்கொண்ட பானங்கள் அனைத்தும் தேன் கலந்து செய்யப்பட்டவை என்பதனை மேல் நாட்டு வரலாறு எடுத்துரைக்கிறது.

தென் ஆப்பிரிக்காவிலும், கிழக்கு ஆப்பிரிக்கா நாட்டிலும் வாழும் சிதேசி இனப்பிரிவினர்கள் தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட பீர், ஒயின், மதுபான வகைகளை உற்சாகமாக உட்கொள்கிறார்கள்.

டெமோகிரிபியஸ் என்ற கிரேக்க தத்துவ ஞானி, நீண்ட நாள் உயிர் வாழ்ந்த ரகசியத்தை வெளியிட்டபோது அனைவரும் திகைப்படைந்தனர். நான் தினமும் வெந்நீரில் தேனை ஊற்றி அதில் எழும் ஆவியை முகர்ந்து வருகிறேன். இதனால் என்னை நோய் தாக்கத்திலிருந்து காத்துக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.

கீழ் ஆப்பிரிக்காவில் வாழும் வாசாமியா இனத்தவர்கள் தங்கள் சாதிப் பெண்கள் பிரசவித்த பின் தீட்டு நன்கு கழியும்வரை வெந்நீரில் தேன் கலந்து உணவாக அளித்து வருகிறார்கள். இதனால் பிரசவத்தில் ஏற்பட்ட அசதி நீங்குகிறது.

முருகப் பெருமானின் பழனிமலை சன்னிதானத்தில் கிடைக்கும் பஞ்சாமிர் தத்தின் சுவையை நாடெங்கும் பரப்பியது இந்த தேன்தான். இங்கு வருடந்தோரும் வரும் பக்தர்கள் வீடு செல்லும்போது படைத்த பஞ்சாமிர்தம் இல்லாமல் செல்வதில்லை. இதனை தன் குடும்பத்தாருடன் உண்டு. சுற்றத்தாருக்கும் வழங்கி உடல் நலத்தை காப்பாற்றி வருகிறார்கள். உடல் நலமும் கிட்டுகிறது. பஞ்சாமிர்தத்தில் சேரும் பலாப்பழம் எய்ட்ஸ் நோயை எதிர்க்க உடலுக்கு பலன் தருவதாக லண்டனில் கண்டுபிடித் திருக்கிறார்கள்.

தேனில் கலப்படத்தை அறிய சில வழிகள் உள்ளன:

சிறிதளவு தேனில் தீக்குச்சியை சில வினாடிகள் ஊறவிடுங்கள். மீண்டும் ஊறிய தீக்குச்சியை எடுத்து துடைத்து விட்டு தீப் பெட்டியில் பற்ற வைக்க வேண்டும். குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரைக் கலப்படம் இல்லை என்பதை அறிய வேண்டும். மை உறிஞ்சும் காகிதத்தில் அல்லது செய்தி வெளியாகும் நாளிதழில் சிறிதளவு தேனை ஊற்றி, சில நிமிடங்கள் வைத்திருங்கள். காகிதத்தின் கீழே தேன் ஊறி இருக்கக் கூடாது. செய்தித்தாளில் தேன் ஊற்றிய இடத்தில் ஊறாவிடில் நல்லதேன். ஒரு கண்ணாடி டம்ளரில் முழுவதும் நீர் பரப்பி அதில் ஒரு தேக் கரண்டி தேனை மேலாக விடுங்கள். தேன் நீரில் கரையாமல் அடியில் சென்று தங்க வேண்டும். நீரில் கரையாவிடில் அது அசல் தேனாகும்.


தேன் மருத்துவம்

By Unknown → செவ்வாய், 21 ஏப்ரல், 2015

* மிளகை நெய்யில் வறுத்து கொள்ளவும், அதை ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும். அதில் வெல்லப்பாகை சேர்த்து உருண்டை தயாரித்து கொள்ளவும். அந்த உருண்டையை தினமும் சாப்பிட்டு வர சளி, இருமல் ஒழியும். குரல் கர கரப்பு நீங்கும்.

* ஒரு வயதுக்கு அதிகமான குழந்தைக்கு வெற்றிலை சாற்றில் சிறிது தேன் சேர்த்து தந்தால் ஜலதோசம் ஓடிவிடும். சுக்கு, திப்பிலி, மிளகு எல்லா வற்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொண்டு அதனுடன் அதே அளவு பெருங்காயத்தை எடுத்து பொரித்து பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு தினம் சிறிது சாப்பிட்டுவர வாயுத்தொல்லை, அஜீரணம் ஒழியும்.

* இடுப்பு வலி தொடர்ந்து பெண்களுக்கு இருந்தால் உளுந்தை வறுத்து பொடி செய்து சர்க்கரை கலந்து தினம் மூன்று நெய் கரண்டி அளவு சாப்பிட்டால் போதும்

* துளசி, வெற்றிலை, ஆடாதொடை, கண்டங்கத்திரி, சிற்றரத்தை, தூதுவேளை ஆகி யவற்றின் சாற்றை கசாயமாக்கி கொடுத்தால் கபத்தினால் ஏற்படும் நோய்கள் தீரும்.

* லவங்கம், ஓமம் இரண்டையும் பொடிசெய்து அத்துடன் சிறிதளவு கற்பூரத்தையும் சேர்த்து சொத்தையுள்ள பல், வீக்கமுள்ள ஈறுகளின் மீது சில சிட்டிகை எடுத்து அப்பி, பின்னர் பத்து நிமிடம் கழித்து வாயை கொப்பளித்துவிட வேண்டும்.

* வசம்பை சுட்டு சாம்பலாக்கி தினந்தோறும் வேளைக்கு ஒரு அரிசி எடையுடன், சிறிது தேன் சேர்த்து மூன்று வேளை தந்தால் கக்குவான் இருமல் சட்டென்று நிற்கும்.

எளிய சித்த மருத்துவம்

By Unknown → திங்கள், 30 மார்ச், 2015
'அமீபியாஸிஸ் என்டமீபா ஹிஸ்டலிட்டிகா’ என்ற குடல்வாழ் தொற்றுக் கிருமியால், வயிற்றுப்போக்குடன் ரத்தம் கலந்து வெளியேறுவதை, 'கழிச்சல்’ அல்லது 'ரத்த சீதபேதி’ என்கிறோம்.

காரணங்கள்:
சுகாதாரமற்ற சூழலில் வசித்தல், மனிதக் கழிவுகள் உணவுப் பொருட்களில் கலத்தல், பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய கிருமித் தொற்றுள்ள பொருட்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றால், கழிச்சல் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:
வயிற்று வலியுடன் மலம் கழித்தல், நாளன்றுக்கு 3 முதல் 8 முறை மலம் கழித்தல், மலத்துடன் சளி மற்றும் ரத்தம் கலந்து வெளிப்படுதல், சோர்வு, ஆசன வாய்ப் பகுதியில் வலி ஏற்படும். நோய் தீவிரமான நிலையில் ரத்தத்துடன் நீர் நீராக 10 முதல் 20 முறை கழிதல், காய்ச்சல், வாந்தி போன்றவையும் ஏற்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
* அவரை இலைச் சாற்றுடன் கற்கண்டு சேர்த்துக் கிளறி கொட்டைப்பாக்கு அளவு உண்ணலாம்.

* லவங்கைப் பட்டை, சுக்கு, ஏலரிசி சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் கால் ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.

* கீழாநெல்லியின் இலைக் கொழுந்தை அரைத்து கொட்டைப் பாக்களவு மோரில் கலந்து உண்ணலாம்.

* கால் டம்ளர் கொள்ளு இலைச்சாறுடன், காசுக் கட்டி இரண்டு கிராம் சேர்த்து அருந்தலாம்.

* கோரைக் கிழங்கையும், இஞ்சியையும் தேன்விட்டு அரைத்து, சுண்டைக்காய் அளவு சாப்பிடலாம்.

* அசோகப்பூவின் பொடி கால் ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.

* அத்திப் பிஞ்சு, வேலம் பிஞ்சு, மாம்பட்டை கைப்பிடி அளவு எடுத்து, வாழைப்பூச் சாறு இரண்டு டம்ளர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்

* காட்டத்திப்பூ, வில்வ வேர், யானைத் திப்பிலி, இவற்றைப் பொடித்து, கால் ஸ்பூன் மோரில் கலந்து உண்ணலாம்.

* அதிவியம், கடுக்காய்ப்பூ, சிறுநாகப்பூ, போஸ்தக்காய் - இவற்றை அரைக் கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி அரை டம்ளராக வற்ற வைத்து அருந்தலாம்.

* இலந்தை இலையை அரைத்து, சர்க்கரை கலந்து சுண்டைக்காய் அளவு உண்ணலாம்.

* விளாம் பிசினைப் பொடித்து, அதில் கால்ஸ்பூன் தேன் கலந்து உண்ணலாம்.

* வில்வப் பிஞ்சை அரைத்து, கால் ஸ்பூன் எடுத்துத் தயிரில் கலந்து உண்ணலாம்.

* மாம்பருப்பைப் பொன்னிறமாக வறுத்துப் பொடித்து, கால் ஸ்பூன் எடுத்து மோரில் உண்ணலாம்.

* மாதுளம் பிஞ்சு, ஏலக்காய், கசகசா, குங்கிலியத்தூள் சம அளவு எடுத்து பொடித்து கால் ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.

* புளியம்பட்டைத் தூள் ஒரு பங்கு சீரகம், 3 பங்கு சேர்த்து சம அளவு பனங் கற்கண்டு சேர்த்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.

* வெண்டைக் காய்ப் பிஞ்சு 100 கிராம் எடுத்து வெட்டி ஒரு டம்ளர் நீர் சேர்த்து, அரை டம்ளராக வற்ற வைத்து, சர்க்கரை கலந்து உண்ணலாம்.

* பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம்.

உணவு சேர்க்க வேண்டியவை:
அன்னாசிப் பழம், பப்பாளி, பீட்ரூட். கேரட், பூண்டு, தர்பூசணி விதை, எலுமிச்சை, ஆரஞ்சு, மோர், தயிர்

தவிர்க்க வேண்டியவை:
காபி, மது பானங்கள், மாவுப் பொருட்கள், காரமான உணவுகள், சுகாதாரமற்ற அனைத்து உணவுகள்.

'கழிச்சல்’ அல்லது 'ரத்த சீதபேதி’ என்னும் வியாதி நீங்க சித்த மருத்துவம்

By Unknown → ஞாயிறு, 14 செப்டம்பர், 2014
இன்றைய இளைய தலைமுறையினரை அதிகமாக பாதித்திருக்கும் பிணி இது. எழுதினால் கை நடுங்கும். எதை எடுத்தாலும் ஒரு தடுமாற்றம், அடிக்கடி களைப்பு, சோர்வு, தூக்கமின்மை இவைகள் முக்கிய அறிகுறிகளாகும். நரம்புத் தளர்ச்சி ஏற்பட்ட பெண்கள் மிகவும் பாதிக்கப் படுகின்றார்கள். அடிக்கடி அழுவதும், சிரிப்பதும், பயித்தியம் போல் நடப்பதும் உண்டு.

எளிதில் சீரணமாகக் கூடிய உணவு வகைகள் காலை மாலை உணவுடன் இனிப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளுதல் நல்ல உடைகள், வாசனைப் பொருட்கள் கொள்ளுதல் பூந்தோட்டங்களில் கடற்கரையில் உலாவுவது என அவர்கள் மனோ நிலை எப்போதும் சந்தோஷ சூழலில் வைத்திருப்பது அவசியம்.
அன்பும், அரவணைப்பும் அவர்களுக்கு ஆறுதல் தரும்.

சித்த மருந்து..

அமுக்கிராக் கிழங்கு - ஐந்நூறு கிராம்.
மிளகு - இருபத்தி ஐந்து கிராம்.
சுக்கு - இருபத்தி ஐந்து கிராம்.
அதிமதுரம் - இருபத்தி ஐந்து கிராம்.
ஏல அரிசி - இருபத்தி ஐந்து கிராம்.
சாதிக்காய் - இருபத்தி ஐந்து கிராம்.
தேன் - ஒரு கிலோ.
பால் - அரை லிட்டர்.

அமுக்கிராக் கிழங்கை நன்றாக இடித்துக் கொள்ளவும்.ஒரு மண் சட்டியில் பாலை ஊற்றவும்.நல்ல ஒரு வெள்ளைத் துணியால் பானையின் வாயை கட்டி இடித்து வைத்துள்ள அமுக்கிராக் கிழங்குப் பொடியை துணியின் மேல் பரப்பி பானையின் மூடியால் பொடியை மூடி சுமார் முப்பது நிமிடங்கள்
சிறு நெருப்பில் அவித்து எடுத்துக் கொள்ளவும்.

இரண்டு மணி நேரம் நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து சலித்துக் கொள்ளவும்.

மற்ற மருந்துகளை தனித்தனியாக் இடித்து சலித்து மேற்கண்ட அளவில் எடுக்கவும்.

எல்லா பொடிகளையும் நன்கு கலக்கிக் கொள்ளவும்.

ஒரு கிலோ தேனை ஒரு சட்டியில் ஊற்றி [ சிறிய தணலில் ] மேற்கண்ட எல்லாப் பொடிகளையும் சிறிதுசிறிதாகக் கொட்டி நன்கு கிளறி கிண்டி வைக்கவும்

உண்ணும் முறை ; -

காலை உணவு உண்டு ஒரு தேக்கரண்டி அளவும் இரவு உணவிற்குப் பின்னர் ஒரு தேக்கரண்டி அளவும் உட்கொண்டு பால் அருந்தவும்.

நாற்பத்தெட்டு நாட்கள் உண்ண வேண்டும்.

பத்தியம் ; -

குளிர்ந்த பானங்கள், மீன், கருவாடு போன்ற அசைவ உணவுகளை அறவேத் தவிர்க்கவும்.

நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்

By Unknown → சனி, 6 செப்டம்பர், 2014
இன்றைய இளைய தலைமுறையினரை அதிகமாக பாதித்திருக்கும் பிணி இது. எழுதினால் கை நடுங்கும். எதை எடுத்தாலும் ஒரு தடுமாற்றம், அடிக்கடி களைப்பு, சோர்வு, தூக்கமின்மை இவைகள் முக்கிய அறிகுறிகளாகும். நரம்புத் தளர்ச்சி ஏற்பட்ட பெண்கள் மிகவும் பாதிக்கப் படுகின்றார்கள். அடிக்கடி அழுவதும், சிரிப்பதும், பயித்தியம் போல் நடப்பதும் உண்டு.
எளிதில் சீரணமாகக் கூடிய உணவு வகைகள் காலை மாலை உணவுடன் இனிப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளுதல் நல்ல உடைகள், வாசனைப் பொருட்கள் கொள்ளுதல் பூந்தோட்டங்களில் கடற்கரையில் உலாவுவது என அவர்கள் மனோ நிலை எப்போதும் சந்தோஷ சூழலில் வைத்திருப்பது அவசியம்.
அன்பும், அரவணைப்பும் அவர்களுக்கு ஆறுதல் தரும்.
சித்த மருந்து..
அமுக்கிராக் கிழங்கு - ஐந்நூறு கிராம்.
மிளகு - இருபத்தி ஐந்து கிராம்.
சுக்கு - இருபத்தி ஐந்து கிராம்.
அதிமதுரம் - இருபத்தி ஐந்து கிராம்.
ஏல அரிசி - இருபத்தி ஐந்து கிராம்.
சாதிக்காய் - இருபத்தி ஐந்து கிராம்.
தேன் - ஒரு கிலோ.
பால் - அரை லிட்டர்.
அமுக்கிராக் கிழங்கை நன்றாக இடித்துக் கொள்ளவும்.ஒரு மண் சட்டியில் பாலை ஊற்றவும்.நல்ல ஒரு வெள்ளைத் துணியால் பானையின் வாயை கட்டி இடித்து வைத்துள்ள அமுக்கிராக் கிழங்குப் பொடியை துணியின் மேல் பரப்பி பானையின் மூடியால் பொடியை மூடி சுமார் முப்பது நிமிடங்கள்
சிறு நெருப்பில் அவித்து எடுத்துக் கொள்ளவும்.
இரண்டு மணி நேரம் நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து சலித்துக் கொள்ளவும்.
மற்ற மருந்துகளை தனித்தனியாக் இடித்து சலித்து மேற்கண்ட அளவில் எடுக்கவும்.
எல்லா பொடிகளையும் நன்கு கலக்கிக் கொள்ளவும்.
ஒரு கிலோ தேனை ஒரு சட்டியில் ஊற்றி [ சிறிய தணலில் ] மேற்கண்ட எல்லாப் பொடிகளையும் சிறிதுசிறிதாகக் கொட்டி நன்கு கிளறி கிண்டி வைக்கவும்
உண்ணும் முறை ; -
காலை உணவு உண்டு ஒரு தேக்கரண்டி அளவும் இரவு உணவிற்குப் பின்னர் ஒரு தேக்கரண்டி அளவும் உட்கொண்டு பால் அருந்தவும்.
நாற்பத்தெட்டு நாட்கள் உண்ண வேண்டும்.
பத்தியம் ; -
குளிர்ந்த பானங்கள், மீன், கருவாடு போன்ற அசைவ உணவுகளை அறவேத் தவிர்க்கவும்.

நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்

By Unknown → வியாழன், 4 செப்டம்பர், 2014

ஆயகலைகள் எனப்படும் அறுபத்தி நாலு கலைகளில் பன்னிரெண்டாவதாய் "சகுன சாஸ்திரம்" குறிப்பிடப் படுகிறது. சகுன சாஸ்திரம் என்பது நம்முடைய சுற்றுச் சூழல், வானிலை, கோள்களின் அமைப்பு, பறவைகளின் ஒலி, விலங்குகளின் செயல்பாடுகள் போன்றவைகளை முன்னிறுத்தி சொல்லப் படுவது.

சகுனம் பார்க்கும் வழக்கம் பழந்தமிழகத்தில் நடைமுறையில் இருந்தற்கான சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. வெளியூர் பயணங்கள், சுப காரியங்களை துவக்குவது, தொழில் துவங்குவது, மருத்துவம் பார்ப்பது, போருக்கு கிளம்புவது என வாழ்வின் பல்வேறு செயல் பாடுகளில் சகுனம் பார்க்கும் வழக்கம் தொன்று தொட்டு இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

சித்த மருத்துவத்தைப் பொறுத்த வரை சகுன சாத்திரம் என்பது இருவகைப்படும் ஒன்று....

சித்த மருத்துவமும், சகுன சாத்திரமும்

By Unknown → புதன், 27 ஆகஸ்ட், 2014
சித்த மருத்துவம் --- இய‌ற்கை வைத்தியம்:-

வேப்பமர பிசினை தூளாக்கி பசும்பாலில் உட்கொள்ள கரப்பான் மற்றும் சரும நோய்கள் குணமாகும்.

பச்சை மஞ்சள் கிழங்கை அரைத்து கோலி குண்டு அளவு காலை - மாலை உட்கொள்ள குடல் பிணிகள் அகலும்.

கஸ்தூரி மஞ்சளை கருந்துளசி இலையுடன் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் வெந்நீரில் நீராட எவ்வித சரும நோயும் வராது.

வெற்றிலையுடன் சிறிது உப்பை மடித்து சாப்பிட்டால் வயிற்றில் ஏற்படும் குத்து வலி நீங்கும்.

கசப்பான மருந்தை உட்கொள்ளும்போது வெத்திலைக் காம்பை சுவைத்தால் நன்றாக இருக்கும். குமட்டல் வராது.

வெற்றிலை வேர், கண்டங்கத்திரிவேர், ஆடா தொடை மூன்றையும் சம அளவு எடுத்து கஷாயம் செய்து உட்கொண்டால் காசநோய் குறையும்.

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக்கி வெந்நீரில் கலந்து உட்கொள்ள அஜீரணம் காரணமாக ஏற்படும் வாந்தி நிற்கும். வாயுத் தொல்லைகள் அகலும்.

வேப்பம் கொட்டைகளிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்படும்போது உருவாகும் வேப்பம் புண்ணாக்கை பலவிதமான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம்.

வேப்பிலையும் மஞ்சளையும் சேர்த்து அரைத்து அம்மைப்புண்கள் மீது தடவ குணமடையும்.

வெற்றிலையும், மிளகும் அரைத்து பாக்களவு உட்கொண்டு பின் வெந்நீர் பருகினால் எல்லாவித விஷங்களும் முறியும்.

கருந்துளசி சாற்றை ஆட்டுப்பாலில் இரண்டு தேக்கரண்டி கலந்து காலை மாலை உட்கொண்டால் ஈரல் தொடர்பான குறைபாடுகள் அகலும்
— with Famousbeauty Care and 3 others.

- இய‌ற்கை வைத்தியம்:-

By Unknown → திங்கள், 28 ஏப்ரல், 2014
சித்த மருத்துவம் சில பயனுள்ள குறிப்புகள்

பரபரப்பு மிகுந்த அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். அன்பைப் பரிமாறும் இதயங்கள், அளவான சாப்பாடு, போதிய உடற்பயிற்சி அத்துடன் போதுமென்ற மனமும் கொண்டிருந்தாலே பெருமளவு நோய்கள் நம்மை அண்டாது பாதுகாக்க இயலும். அப்படியும் அவ்வப்போது ஏற்படும் சிறு உடல்நலக்குறைவுகளுக்கான தீர்வு வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே கிடைக்கிறது.

தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.

தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வந்தால் உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.

குடல்புண்

மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.

வாயுத் தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.

வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்

செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.

தேமல்

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

மூலம்

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.

தீப்புண்

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வந்தால் தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வறட்டு இருமல்

எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.



சித்த மருத்துவம் சில பயனுள்ள குறிப்புகள்

By Unknown → செவ்வாய், 15 ஏப்ரல், 2014
சித்த மருத்துவத்தில் பூவரசம் பூக்கள்

பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.

சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிடவேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது. மூட்டு வீக்கம் வயதான காலத்தில் மூட்டுப் பகுதியில் நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சமஅளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, மூட்டு வீக்கங்கள் மேல் பூசிவர வீக்கம் குணமடையும்



சித்த மருத்துவத்தில் பூவரசம் பூக்கள்

By Unknown →
சித்த மருத்துவம் சில பயனுள்ள குறிப்புகள்

பரபரப்பு மிகுந்த அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். அன்பைப் பரிமாறும் இதயங்கள், அளவான சாப்பாடு, போதிய உடற்பயிற்சி அத்துடன் போதுமென்ற மனமும் கொண்டிருந்தாலே பெருமளவு நோய்கள் நம்மை அண்டாது பாதுகாக்க இயலும். அப்படியும் அவ்வப்போது ஏற்படும் சிறு உடல்நலக்குறைவுகளுக்கான தீர்வு வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே கிடைக்கிறது.

தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.

தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வந்தால் உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.

குடல்புண்

மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.

வாயுத் தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.

வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்

செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.

தேமல்

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

மூலம்

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.

தீப்புண்

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வந்தால் தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வறட்டு இருமல்

எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.

சித்த மருத்துவம்

By Unknown →
பாரம்பரிய மருத்துவம் அல்லது மாற்று மருத்துவம் என்று அழைக்கப்படும் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா, இயற்கை மருத்துவம் ஆகியவற்றின் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இம்மருத்துவ முறைகள் ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டது என்றபோதும், இவற்றுக்குரிய பொதுவான சிறப்புகள் பல: பக்கவிளைவுகள் அற்றவை; நோயின் விளைவுகளை மட்டும் குணப்படுத்தாமல் நோயை வேரோடு போக்கி முழுமையாகக் குணப்படுத்துபவை; அன்றாட உணவுகள், மூலிகைகள் மூலமாகவும் எளிய உடற்பயிற்சிகள் வழியாகவும் பிரச்சினைகளைத் தீர்ப்பவை; உடலை மட்டுமோ உடலின் தனி உறுப்பை மட்டுமோ கவனத்தில் கொள்ளாமல், ஒவ்வோர் உறுப்பும் ஒட்டுமொத்த உடலின் பாகம் என்னும் முழுமை உணர்வைக் கொண்டவை; மனம்பற்றிய அறிதலையும் செய்து மருந்துகளைத் தேர்பவை; முக்கியமாக, மக்களுக்குப் பெரும் செலவுகளை ஏற்படுத்தாதவை.
விஷக்காய்ச்சல் அனுபவங்கள்
ஒருகாலத்தில் எங்கோ, யாரோ சொல்ல மாற்று மருத்துவத்தின் சிறப்புகளைக் கதைபோலக் கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், இப்போது சூழல் மாறி யிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக நுழைந்த பல நோய்களுக்கு மாற்று மருத்துவ சிகிச்சைகள் நல்ல பலன் கொடுத்திருக்கின்றன. குறிப்பாக, சிக்குன் குனியா காய்ச்சலைக் குணமாக்கவும் குணமான பின் பல நாட்கள் நீடித்த மூட்டுவலி, சோர்வு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும் இம்மருத்துவ சிகிச்சைகள் பெரிதும் உதவின. சமீப காலத்தில் தமிழகத்தை அச்சுறுத்திய டெங்கு காய்ச்ச லின் பரவலை விரைந்து கட்டுப்படுத்தியதிலும் இந்த மருத்துவ முறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்கு உள்ளது.
சித்த மருத்துவ முறையிலான பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு இலைச்சாறு, நிலவேம்புக் குடிநீர் ஆகியவை மிக எளிதாக இந்நோயைக் குணப்படுத்தவும் வராமல் தடுக்கவும் உதவின. திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, பல இடங்களில் முகாம் நடத்தி உரிய மருந்துகளை விநியோகித்தது மட்டுமல்லாமல், 24 மணி நேரமும் தொடர்புகொள்ள செல்பேசி எண்களை அளித்து, மக்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கியது. மருந்துகளைப் பரிந்துரைத்து வாங்கிக்கொள்ளவும் வழிகாட்டியது.
இம்மருத்துவத் துறைகள் தாங்கள் வழங்கும் மருந்துகளையோ மருந்துப் பெயர்களையோ மறைத்து வைக்கவில்லை. மக்கள் எளிதாகத் தாங்களே கையாளும் படி பெயர்களையும் தயாரிப்பு முறைகளையும் தெரிவித் தும் அவற்றைப் பெறும் இடங்களையும் முறைகளையும் அறிவித்தும் வெளிப்படைத்தன்மையால் மக்களை நெருங்கிச் சென்றன. நாமக்கல் மாவட்டத்தில் சிக்குன் குனியா வேகமாகப் பரவியபோது, ஹோமியோபதி மருத்துவர்களின் ஆலோசனைப்படி ‘ரஸ்டாக்ஸ்’ என்னும் மருந்தை முன்தடுப்பாகப் பலர் பயன்படுத்தித் தற்காத்துக் கொண்டனர். தாகம் என வருவோர் தாமே மொண்டு பருகிச் செல்ல வாய்த்த திருவிழாத் தண்ணீர்ப் பந்தல்போல மூலிகைக் குடிநீரும் இலைச்சாறுகளும் மக்களுக்குப் பயன்பட்டன. எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இவை கிடைக்கும்படி செய்து மக்களைக் காத்ததோடு, நற்பெயரையும் பெற்றது அரசு. இப்போதைய நிதி ஒதுக்கீட்டு அறிக்கையில், அரசும் இம்மருத்துவ முறைகளின் சிறப்பையும் அவை பயன்பட்ட விதத்தையும் விதந்து குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பரவலாக்க மேலும் பல நடவடிக்கைகளை அரசு எடுப்பது அவசியமாகிறது.
கல்லூரிகளின் நிலை
பாரம்பரிய மருத்துவத்தைப் பரம்பரை பரம்பரையாகச் செய்துவருவோரே கற்றுக்கொள்ள முடியும் அல்லது கற்றுக்கொடுக்க முடியும் என்றிருந்த சூழலை உடைத்தவை இம்மருத்துவக் கல்விக்கு என அரசு சார்பில் தொடங்கப்பட்ட கல்லூரிகள். இந்திய மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறையானது சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா- இயற்கை மருத்துவம் ஆகிய ஐந்து மருத்துவக் கல்லூரிகளை நிர்வகிக்கிறது. சித்த மருத்துவத்துக்கு சென்னை, பாளையங்கோட்டை ஆகிய இரண்டு இடங்களிலும் ஆயுர்வேதத்துக்கு கன்னியாகுமரி கோட்டாற்றிலும் ஹோமியோபதிக்கு மதுரை திருமங்கலத்திலும் யுனானி - இயற்கை மருத்துவத்துக்குச் சென்னையிலும் என ஆறு அரசுக் கல்லூரிகள் தமிழகத்தில் இருக்கின்றன. உள்கட்டமைப்புகளின் போதாமை காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாக இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய மருத்துவ ஆணையம் அங்கீகாரம் கொடுக்க மறுப்பதும் தமிழக அரசு போராடி அங்கீகாரம் பெறுவதுமாக இருந்த நிலையில், இப்போது ஓரளவு ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட்டுள்ளதுடன் தமிழக அரசு இக்கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.15 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தவிர, ஆராய்ச்சிப் பிரிவுகளை உருவாக்கவும் ரூ.12 கோடி நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் இவ்விதம் இக்கல்லூரி களுக்கும் ஆராய்ச்சிக்கும் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையும் பெருமிதமும் தோன்றும் அளவு உள்கட்டமைப்பு வசதிகள் அப்போதுதான் மேம்படும். பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகள், மருத்துவ முகாம்கள் நடைபெறவும் நிதி உதவி தேவை. அவற்றையும் கருத்தில் கொண்டு நிதி ஒதுக்கீட்டைத் தொடர வேண்டும்.
மாணவர் சேர்க்கையில் மாற்றம்
இம்மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான நடவடிக்கையிலும் பெருமளவு மாற்றம் தேவை. ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர் சேர்க்கை நடைபெற செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் ஆகிவிடுகின்றன. இந்தக் கல்வியாண்டில் அங்கீகாரப் பிரச்சினைகள் ஏதுமில்லாதபோதும் மாணவர் சேர்க்கைக் கெடுவான அக்டோபர் இறுதியில்தான் கலந்தாய்வு நடத்தப்பட்டு, போதிய அவகாசம்கூட இன்றி மாணவர் சேர்க்கை நடைபெற்றது. மறுகலந்தாய்வு நடத்தக் காலம் இன்மையால், ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப முடியவில்லை. மார்ச் மாதத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள் மே மாதத்தில் முடிவுகளைப் பெறுகின்றனர். இப்படிப்பில் சேர வேண்டுமானால், அதன் பின் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை.
ஐந்து படிப்புகளில், தாம் சேர விரும்பும் துறை கிடைக்குமா என்பதைத் தெரிந்துகொள்வதற்கு எந்த வழியும் இல்லை. கிடைக்கும் என்னும் உறுதியில்லாத நிலையில் வேறு ஏதாவது படிப்புகளில் சேர்ந்துவிடுகின்றனர். பின்னர், இப்படிப்பு கிடைக்குமானால், ஏற்கெனவே சேர்ந்த படிப்பிலிருந்து விலகி வருவதா வேண்டாமா என முடிவெடுக்கத் திணறுகின்றனர். ஏனென்றால், பிற படிப்புகளில் கிட்டத்தட்ட ஒரு பருவம் முடிந்து தேர்வு எழுதத் தயாராகும் நிலையில்தான் இப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. சேர்ந்த கல்லூரியிலிருந்து செலுத்திய கட்டணத்தை முழுமையாகத் திரும்பப் பெறவும் இயலுவதில்லை. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதிய பின், அடுத்த படிப்பில் சேர எட்டு மாதக் காத்திருப்பு மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. பொறியியல், ஆங்கில மருத்துவக் கல்வி ஆகியவற்றுக்கு நடைபெறுவதைப் போல ஜூலை மாதத்துக்குள் கலந்தாய்வை முடித்து மாணவர்கள் சேர்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
எங்கே பணி வாய்ப்புகள்?
மாற்று மருத்துவப் படிப்பை முடித்தோருக்கான அரசு வேலைவாய்ப்பும் மிகவும் குறைவு. வட்டத் தலைநகர அரசு மருத்துவமனைகளில் சித்தா அல்லது ஹோமியோபதி மருத்துவத் துறை மட்டும் செயல்படுகிறது. மாவட்டத் தலைநகர் என்றால் இவ்விரு துறைகளும் இருக்கின்றன. ஒரே மருத்துவர்தான். அவர்களும் வெளிநோயாளிகளைப் பார்ப்பதோடு சரி. ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் ஆகிய துறைகள் இன்னும் அரசு மருத்துவ மனைகளில் செயல்படவில்லை. அவற்றைக் கற்கும் மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பும் கிடையாது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் மாற்று மருத்துவத்துக்கான அனைத்துப் பிரிவுகளும் தொடங்கி மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளைப் பெற மருத்துவர்களையே நாட வேண்டியுள்ளது. அவசரத்துக்கு ஏதாவது மருந்து வாங்க வேண்டும் என்றால்கூட, மருந்துக் கடைகள் இல்லை. பெருநகரங்களில் எங்காவது ஒளிந்திருக்கும் மருந்துக் கடைகளைத் தேடிப் போக வேண்டும். கூட்டுறவு மருந்தகங்களில் மாற்று மருத்துவ மருந்துகளும் எளிதில் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
நமது பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் தக்கவைப்பதோடு நம் பருவநிலைகள், வாழ்நிலைகளைக் கணக்கில் கொண்டு சிகிச்சை முறைகளை உருவாக்கியுள்ள இம்மருத்துவ முறைகள் மக்களிடம் அரசுக்கு நற்பெயரை உருவாக்குவதிலும் முன்னிற்பவையாக இருக்கின்றன. ஆகவே, அரசு இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி, இம்மருத்துவ முறைகளையும் கல்வியையும் மேலெடுத்துச் செல்ல வேண்டும்!

பாரம்பரிய மருத்துவம்

By Unknown → சனி, 29 மார்ச், 2014