Browsing "Older Posts"

Browsing Category "பீன்ஸ்"

கருப்பு கண் பீன்ஸ் விதை பேருக்கு ஏற்றார் போல வெள்ளை நிறத்தில் சிறிய கண் போன்ற கருப்பு நிற புள்ளியை பெற்றுள்ளது. பொதுவாக பீன்ஸை சமையலுக்கு பயன்படுத்துவோம் அதிலும் கருப்பு நிற புள்ளிகளைக் கொண்ட பீன்ஸ் கூடுதலான ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. வெள்ளை நிற அவரை விதை உடலுக்கு ஆரோக்கிய பலன்களை தரக்கூடிய நார்சத்து, புரதம், இரும்பு சத்துகளை பெற்றுள்ளது.

வெள்ளை நிற அவரை விதையை 1/2 கப் எடுத்து சமைக்கும் போது 5.6 கிராம் நார்சத்து கிடைக்கும் அதுவே தகரடப்பாக்களில் அடைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்ட 1/2 கப் அவரையை எடுத்துக்கொண்டால் 4 கிராம் நார்சத்து மட்டுமே கிடைக்கும். இந்த அவரை மற்ற அவரையிலிருந்து வேறுபடக்கூடியது. ஃபைபர், ஊட்டச்சத்துகளை வெள்ளை நிற பீன்ஸ் பெற்றுள்ளதால் செரிமான அமைப்பை சீராக இயக்குகிறது. மேலும் மலசிக்கல், எரிச்சலூட்டும் குடல் நோய்தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது..

ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய நார்சத்துகளை பெற்றுள்ளதால் கொழுப்பு அளவுகளை கட்டுபடுத்தி ரத்தஓட்டத்தின் போது உறிஞ்சப்படும் கொழுப்பு அளவுகளை தடுத்து இதயநோய் உருவாவதற்கான ஆபத்தை குறைத்து இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது. உலர்த்தி சமைத்த 1/2 கப் வெள்ளை நிற பீன்ஸில் 239 மில்லிகிராம் பொட்டாசியம் பெற்றுள்ளது. அதேபோல பதப்படுத்தப்பட்ட அவரையில் 206 மில்லிகிராம் பொட்டாசியம் பெற்றுள்ளது.

பொட்டாசியம் ரத்த அழுத்த அளவுகளை கட்டுபடுத்தி இதயநோய் ஆபத்தை குறைக்கிறது மேலும் தசைகள், எலும்புகளுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குகிறது. இது குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்த கலோரியை கொண்டுள்ளது. எடைகட்டுபாட்டிற்கு சிறந்த உணவு மட்டுமல்லாமல் இதயநோய், நீரிழிவுநோய், மனஅழுத்தம் மேலும் பல ஆரோக்கிய நலன்களை பெற்றுள்ளது.

இறைச்சி வகைகள் சாப்பிட விருப்பாதவர்களுக்கு சிறந்த மாற்று உணவாக இருக்கிறது அவரை விதைகள். தசைகள், தோல், முடி மற்றும் நகங்கள், உட்பட உடலின் பல பாகங்களுக்கு தேவையான புரதசத்துகளை வழங்குகிறது. உடலுக்கு ஆற்றலை வழங்குவதற்கு தேவையான புரதசத்துகளை கொண்டுள்ளது. உலர்த்தி சமைத்த 1/2 கப் வெள்ளை நிற அவரை விதையில் 6.7 கிராம் புரதமும், மற்றும் பாதுகாக்கப்பட்ட 1/2 கப் விதையில் 5.7 கிராம் புரதசத்துகளும் உள்ளது.

உலர்த்தி சமைத்த 1/2 கப் வெள்ளை நிற அவரை விதையில் 1.2 மில்லி கிராம் இரும்புசத்துக்களும், மற்றும் பாதுகாக்கப்பட்ட 1/2 கப் விதையில் 2.2 கிராம் இரும்புசத்துகளும் கொணடுள்ளது. போதுமான அளவு விதைகளை உணவில் சேர்த்துக்கொண்டால் சோர்வு பலவீனம், ரத்தசோகை ஆகியவற்றை தடுக்கிறது. இரும்புசத்துகள் உடல் முழுவதிற்கும் தேவையான ஆக்ஸிஜனை எடுத்துச்சென்று செல்கள், தசைகளுக்கு தேவையான விநியோகத்தை வழங்குகிறது. வாரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு அவரை விதைகளை பயன்படுத்தி சமையல் செய்யுங்கள். உடலுக்கு தேவையான இரும்பு சத்து, நார்சத்து, புரதசத்துகள், குறைந்த கொழுப்பு மற்றும் கலோரிகளையும் கொண்டுள்ளது கருப்பு கண் பீன்ஸ்.

இதயத்தைப் பாதுகாக்கும் கருப்பு கண் பீன்ஸ்

By Unknown → வியாழன், 25 ஜூன், 2015

சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிறந்த மருந்து பீன்ஸ் இந்த நோயால் அதிகம் மக்கள் அவதியுறுகிறார்கள் இதற்கு தீர்வாக பல சிகிச்சைகள் முன்வைக்கப் பட்டாலும் பிரச்சனை என்னவோ அப்படியேதான் இருக்கிறது அலோபதி மருந்துகள் லேஸர் சிகிச்சை ஆயுர்வேத மருந்துகள் மற்றும் இயற்கை முறையில் நெருஞ்சில் முள்,வாழைத்தண்டு என பல முறைகளில் முயற்சித்தாலும் பலன் என்பது குறைவு தான்.
சமிபத்தில் நெட்டில் உலாவும் பொழுது தற்செயலாக ஒரு ஆங்கில வலை மனையில் இந்த குறிப்பை கண்டேன் அதை நண்பர்களுக்கு பரிந்துரைத்தேன் அருமையான பலன் அப்புறம் நெட்டில் தேடினால் பல தமிழ் வலைபூக்களிலும் இது பகிரப் பட்டுள்ளது.
இது மிக மிக சாதாரணமாக நாம் நம் அன்றாட சமையலில் பயன் படுத்த கூடிய ஒரு காய் ஃப்ரென்ச் பீன்ஸ் இது சிறுநீரக கல் நோயை முற்றிலும் குணமாக்குகிறது இதை எப்படி பயன் படுத்துவது என கீழே படிக்கவும்.
கால் கிலோ பீன்ஸை வாங்கி அதன் பக்கவாட்டு நார் மற்றும் கொட்டைகளை நீக்கிவிட்டு பீன்ஸின் தோலை மட்டும் ஒன்று அல்லது ஒன்றேகால் லிட்டர் தண்ணீ ரில் மிதமான சூட்டில் ஒன்றறை மணி நேரம் வேகவைக்கவும். அந்த நீர் அரை லிட்டராக வற்றிய பின்பு அதை சிறிது ஆற வைத்து நன்கு வெந்த பீன்ஸ் மற்றும் நீரை மிக்ஸியில் இட்டு கூழ் போல் அரைத்து குடித்து விடவும்
முதல் தடவை குடிக்கும் பொழுது கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் போக போக அதுவா பழகிவிடும் அந்த மிக்ஸியில் அரைத்த பீன்ஸ் கூழை குடித்த பின் நீங்கள் தொடர்ச்சியாக 3 முதல் 4 லிட்டர் தண்ணீர்குடிக்கவேண்டும்.
இந்த 4 லிட்டர் நீர் கூழ் குடித்த அடுத்த 5 மணிநேரத்துக்குள் நீங்கள் அருந்திவிடவேண்டும் கல் உடைந்து கண்டிப்பாக நீரில் வெளியாகிவிடும் இந்த முறையை சரியாகும் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என பின்பற்றி வாருங்கள் குணம் ஆனபிறகு வாரம் ஒரு முறை குடித்தீர்கள் என்றால் ஆயுளுக்கும் வரவே வராது நீங்கள் எந்த குழப்பமும் இன்றி இதை பின் பற்றலாம் இதில் எந்த பக்கவிளைவுகளும் இல்லை எனக்கு தெரிந்து அதிகம் பேர் பலனடைந்துள்ளார்கள்.

சிறுநீரக கல் நீக்கும் பீன்ஸ்

By Unknown → செவ்வாய், 16 ஜூன், 2015