Browsing "Older Posts"

Browsing Category "வாழைப்பழம்"
பொட்டாசியமும் ‘பி’ விட்டமின்களும் செக்ஸ் ஹார்மோனை தயாரிக்கத் தேவை.எனவே வாழைப்பழம் ஒரு ஆண்மையை பெருக்கும் முக்கியமான பழமாக கருதப்படுகிறது.வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது. வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும்.

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூளை வலிமை (Brain Power): வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.

ஆண்மையைப் பெருக்கும் வாழைப்பழம்.!

By Unknown → வியாழன், 16 ஏப்ரல், 2015

வாழைப்பழத்தில் என்ன ஸ்பெஷல் நியூட்ரிஷியன் அம்பிகா சேகர் விளக்குகிறார்... ‘‘நிறைய சத்துகளையும் உள்ளடக்கிய பழ வகைகளில் வாழைப்பழம் முக்கியமானது. தமிழ்ப் பண்பாடு சொல்லும் முக்கனிகளில் ஒன்று. எல்லா பருவங்களிலும் சாப்பிடுவதற்கு ஏற்றது. வாழைப்பழத்தில் வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன.

வளரும் குழந்தைகளுக்கு இச்சத்துகள் அவசியம். வாழைப்பழம் வளர்சிதை மாற்றம் குறையாமல் பார்த்துக் கொள்வதோடு, ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். விளையாட்டுத்துறையில் இருப்பவர்கள், ஃபிட்னஸ் பிரியர்கள் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. எனர்ஜி லெவலை எப்போதும் சரியாக வைத்திருக்கும் குணம் வாழைக்கு உண்டு.

செவ்வாழையில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் பெண்களுக்கு நல்லது. இதய நோயாளிகளும் வாழைப்பழத்தை அளவாக சாப்பிடலாம். வாழையில் சர்க்கரை அதிகம் இருப்பதால் டயாபடீஸ் நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. மலைவாழையில் சர்க்கரை கொஞ்சம் குறைவாக இருக்கும். சிலருக்கு பச்சை வாழைப்பழம் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும்.

அவர்கள் அதே சுவையுடன் இருக்கும் பூவன் பழத்தைச் சாப்பிடலாம். இதனால் சளித் தொந்தரவுகள் நெருங்காது. குழந்தைகளுக்கு 8 மாதத்தில் இருந்து நன்கு மசித்த வாழைப்பழம் கொடுக்கலாம். கேரளாவில் வாழைப்பழத்தை நன்கு காயவைத்து, பொடி செய்து, பாலில் கலந்து, கிட்டத்தட்ட சத்து மாவு போல கலந்து குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். வயிற்றில் இருக்கும் நச்சுத்தன்மையைப் போக்கி, சுத்தம் செய்து விடுவதால் வயிற்றுப்புண் பிரச்னைகளும் நெருங்காது!’’

வாழைப்பழத்தில் என்ன ஸ்பெஷல்?

By Unknown → சனி, 6 டிசம்பர், 2014
பொதுவாக வாழைப் பழத்தை உண்பதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் பித்த சம்பந்தமான நோய்கள் குறைகிறது. “நெப்ரைடிஸ்” என்கிற சிறுநீரக நோய், மூட்டுவலி, உயர் இரத்த அழுத்தம், குடற்புண் ஆகியவற்றை குணப்படுத்தவல்லது. உடல்நலனுக்கு எப்பொழுதும் முழுவதுமாக பழுத்த பழங்களையே சாப்பிட வேண்டும். மூளையில் “செரோடினின்” உருவாக வாழைப்பழம் உதவுகிறது. மனதில் ஏற்படும் பயம், கவலை, வருத்தம் முதலியவற்றை நீக்க செரோடினின் பெரிதும் உதவுகிறது.

வாழைப்பழத்தை இதய நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். மூளைக்கு வலுவூட்டும். தினசரி இரவு உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்து ஓரிரண்டு வாழைப்பழம் உட்கொள்வதால் மலச்சிக்கல், பித்த நோய்கள், மனநோய், மூர்ச்சை மற்றும் பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளைப்போக்கு முதலியவை நீங்கும். இரத்த அழுத்தம் நிதானமாக இருக்கும். குடற்புண் வராமல் தடுக்கும்.

சத்துக்குறைவுள்ள குழந்தைகளுக்கு உடல் வலுப்பெறும். கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகை திணித்து திறந்த வெளியில் ஒரு இரவு வைத்து, அடுத்த நாள் காலையில் இந்த மிளகை சாப்பிட இருமல் நீங்கும். உட்கொண்ட உணவு உணவுக் குழாயில் சிக்கி வீக்கம் ஏற்பட்டு அவதியுறும் போது இப்பழம் சாப்பிட உணவுக் குழாயின் சிக்குண்ட பொருள் வயிற்றில் போய் சேர்ந்து விடும்.

மஞ்சளும், பச்சையுமான நிறங்களுள்ள வாழைப்பழம் எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் கிடைக்கக் கூடியது. இதில் பலவகைகள் அடங்கியுள்ளன. உலர்ந்த சருமத்திற்கு மிகுந்த ஈரப்பதத்தை அளிக்கக் கூடியது. எனவே சரும மாஸ்க்குகள், ஹேர் பேக்குகளாக உப யோகப்படுத்தப்படுகின்றன. இப்பழச்சதையினுள் வெண்ணெய் போல ஏறக்குறைய இருபது முதல் இருபத்தைந்து சதவீதம் எண்ணெய் சத்து உள்ளது.

உடல் நலம் காப்பதில் சிறந்தது வாழைப்பழம்

By Unknown → புதன், 3 டிசம்பர், 2014

நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது. கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது.

நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும். இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.

குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும். மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள்.

இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது. கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.

பூவன் : இந்த பழத்தை கதலி என்றும் அழைப்பார்கள். மலச்சிக்கல், மூலநோயால் அவதிப்படுவோருக்கு இந்த பழம் மிகவும் நல்லது.

பேயன் பழம் : குடற்புண் தீர்க்கும். வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் தினம் ஒரு பேயன் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தாலே போதும்.

மலைவாழை : சோகையை நீக்கும். எளிதில் ஜீரணத்தை உண்டாக்கி மலச்சிக்கலைப் போக்குகிறது இந்த மலைவாழை.

ரஸ்தாலி : இதில் மருத்துவ குணங்கள் குறைவு. ஆனால் சுவை அதிகம். செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது.

பச்சைவாழை: வெப்பத்தைக் குறைக்கும். நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.

வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவதுடன், உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளிக்கொண்டு வரப் பயன்படுகிறது

தொடர்ந்து இருமல் இருந்து வந்தால் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் சரியாகும்.

காசநோய் உள்ளவர்கள் அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழிந்து, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு டம்ளர் இளநீர் ஆகியவை சேர்த்து தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வர அந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம். சின்னம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு தேனில் வாழைப்பழத்தைப் பிசைந்து தினமும் இரு வேளை வீதம் சாப்பிட வேண்டும்.

பசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுவர அஜீரணம் சரியாகும். தொடர்ந்து தினமும் 2-3 வேளை இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும். காய்ச்சல் வருவதுபோல் உணர்ந்தால் ஒரு வாழைப்பழத்தை உடனே சாப்பிடுங்கள்.

நோய்களை நீக்க வாழை பழத்தை எப்படிப் பயன்படுத்தலாம்?

By Unknown → புதன், 27 ஆகஸ்ட், 2014
அல்சரைப் போக்கும் பச்சை வாழைப்பழம்

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

அல்சரைப் போக்கும் பச்சை வாழைப்பழம்

By Unknown → வியாழன், 8 மே, 2014
எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது.

மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.
வயது ஆக ஆக எல்லோருக்கும் கண்பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை படிப்படியாக தெளிவடையும்.

வாழைப்பழம்

By Unknown → சனி, 12 ஏப்ரல், 2014
வாழைப்பழத்தில் என்ன ஸ்பெஷல்?

வாழைப்பழத்தில் என்ன ஸ்பெஷல் நியூட்ரிஷியன் அம்பிகா சேகர் விளக்குகிறார்... ‘‘நிறைய சத்துகளையும் உள்ளடக்கிய பழ வகைகளில் வாழைப்பழம் முக்கியமானது. தமிழ்ப் பண்பாடு சொல்லும் முக்கனிகளில் ஒன்று. எல்லா பருவங்களிலும் சாப்பிடுவதற்கு ஏற்றது. வாழைப்பழத்தில் வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன. 

வளரும் குழந்தைகளுக்கு இச்சத்துகள் அவசியம். வாழைப்பழம் வளர்சிதை மாற்றம் குறையாமல் பார்த்துக் கொள்வதோடு, ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். விளையாட்டுத்துறையில் இருப்பவர்கள், ஃபிட்னஸ் பிரியர்கள் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. எனர்ஜி லெவலை எப்போதும் சரியாக வைத்திருக்கும் குணம் வாழைக்கு உண்டு.

செவ்வாழையில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் பெண்களுக்கு நல்லது. இதய நோயாளிகளும் வாழைப்பழத்தை அளவாக சாப்பிடலாம். வாழையில் சர்க்கரை அதிகம் இருப்பதால் டயாபடீஸ் நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. மலைவாழையில் சர்க்கரை கொஞ்சம் குறைவாக இருக்கும். சிலருக்கு பச்சை வாழைப்பழம் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும்.

அவர்கள் அதே சுவையுடன் இருக்கும் பூவன் பழத்தைச் சாப்பிடலாம். இதனால் சளித் தொந்தரவுகள் நெருங்காது. குழந்தைகளுக்கு 8 மாதத்தில் இருந்து நன்கு மசித்த வாழைப்பழம் கொடுக்கலாம். கேரளாவில் வாழைப்பழத்தை நன்கு காயவைத்து, பொடி செய்து, பாலில் கலந்து, கிட்டத்தட்ட சத்து மாவு போல கலந்து குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். வயிற்றில் இருக்கும் நச்சுத்தன்மையைப் போக்கி, சுத்தம் செய்து விடுவதால் வயிற்றுப்புண் பிரச்னைகளும் நெருங்காது!’’

வாழைப்பழத்தில் என்ன ஸ்பெஷல்?

By Unknown → ஞாயிறு, 30 மார்ச், 2014