போன்சாய்

By Unknown → வெள்ளி, 21 பிப்ரவரி, 2014
Advertise
புகைப்படம்: போன்சாய் தாவர உலகின் புதுக்கவிதைகள்!

சீனாவிலிருந்து ஜப்பான் சென்று இன்று உலகம் முழுவதும் கலக்கிக் கொண்டிருக்கும் ‘போன்சாய் வளர்ப்பு’ இடமில்லா நகர மக்களிடையே மிக பிரபலம். இன்று வணிக ரீதியாக நூறு ரூபாயிலிருந்து சில லட்சங்கள் வரை வருமானம் தரும் தொழிலாக மாறி வருகிறது. ஜப்பானிய மொழியில் ‘போன்’ என்றால் ‘ஆழமற்ற தட்டுகள்’ என்றும், ‘சாய்’ என்றால் ‘செடிகள்’ என்றும் பொருள்படும். போன்சாய் வளர்ப்பது பற்றி போதுமான விவரங்களைப்
பகிர்கிறார் தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட்.

போன்சாய் வளர்ப்புக்கு என்னென்ன தேவை?

செடி வெட்டும் கத்திரி, அலுமினியம் மற்றும் தாமிரக் கம்பிகள், கம்பி வெட்டும் குறடு, மண் அள்ளும் கரண்டி, பல்வேறு வடிவம் மற்றும் அளவுகளில் ஆழமில்லாத பூந்தொட்டிகள்.

போன்சாய் மர வகைகள்

விதை கொண்டு செடிகள் உருவாக்க பல ஆண்டுகள் ஆகும். ஆனால், பாழடைந்த கட்டிடங்களின் மேலும், பாறை வெடிப்புகளிலும் ஆற்றோரங்களில் கல்குழிகளுக்குள்ளும் வளரும் செடிகள் பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும் வளர்ச்சி குன்றி, குள்ளமாகவும் முதிர்ந்தும் காணப்படும். இது போன்ற செடிகளை வேருடன் கொணர்ந்து போன்சாய் செடிகளாக மாற்றி விடலாம். நாற்றுப் பண்ணைகளில் நீண்ட நாட்கள் விற்பனையாகாமல் இருக்கும் செடிகள் வளர்ச்சி குன்றியும் முதிர்ந்தும் காணப்படும். இது போன்ற செடிகளைச் சேகரித்தும் போன்சாய் கலைக்குப் பயன்
படுத்தலாம்.

போன்சாய்க்கு ஏற்ற மரங்கள்

பொதுவாக நம் நாட்டு மரங்களே பராமரிப்புக்கும் காலநிலைக்கும் எளிதாகவும் ஏற்றதாகவும் இருக்கும். ஆல், அரசு, புங்கன், பைகஸ் பென்சமினா, வேம்பு, இலுப்பை, வாகை, பைன், ஜூனிபர் ஆகிய மரங்களும், மாதுளை, பீச், மேப்பிள், க்ராப் ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழ மரங்களும், காகிதப்பூ, அடீனம், குல்மோகர் போன்ற மலர் மரங்களும், சில கள்ளி வகைகளும் போன்சாய்க்கு ஏற்றவை.

வளர்க்கும் பாணி (Style)

ஒரு மரக்கன்றை தொட்டியில் வளர்த்து விட்டாலே அது போன்சாய் ஆகிவிடாது. போன்சாய் வளர்ப்பில் முக்கியமானது அதற்கெனவே உருவாக்கப்பட்ட பாணிகள். இயற்கையில் வளரும் மரங்களில் எத்தனை வடிவம், அமைப்பு உண்டோ அத்தனையும் இதிலும் உண்டு. பிரபலமான சில இதோ...
முறையான நேர்போக்கு, முறையற்ற நேர்போக்கு, சாய்வான போக்கு, அருவிப்போக்கு ஆகிய முக்கிய பாணிகளோடு, பாதி அருவிப்போக்கு, பாறைகளை வைத்து உருவாக்குதல், காடுகள் போன்று உருவாக்குதல் என நிறைய உண்டு.

முறையான நேர்போக்கு (Formal upright) 

இதில் மரத்தின் நடுத்தண்டு நேராகவும், அடி பெருத்தும், நுனி சிறுத்தும் இருக்கும். கிளைகள் ஒரே அளவில், எல்லா பக்கங்களிலும்
சமமாக இருக்கும்.

முறையற்ற நேர்போக்கு (Informal upright)

ஒரு சில மரங்கள் இயற்கையாகவோ, காற்று, வெளிச்சத்தைத் தேடியோ, வலது புறமாகவோ, இடதுபுறமாகவோ சற்று வளைந்து பின் நேராக வளரும். இதுவே முறையற்ற நேர்போக்கு பாணி.

சாய்வான போக்கு (Slanting)

இதில் மரத்தின் நடுப்பகுதி நேராக இல்லாமல் வேரிலிருந்து இடப்புறமோ வலப்புறமோ சாய்ந்து காணப்படும். இயற்கையில் வளரும் மரங்கள், சூரிய ஒளியை நாடியோ, காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்கவோ, இப்படி சாய்வான போக்கைப் பெறும். செயற்கையாகவும் இப்படி உருவாக்கலாம்... சில காலம் கம்பிகள் வைத்து அடிப்பகுதியிலிருந்து 40-60 டிகிரி வலப்பக்கமோ, இடப்பக்கமோ சாய்த்து வளர்க்க வேண்டும்.

அருவிப்போக்கு (Cascade)

மலைப்பாங்கான பகுதிகளில் பாறையிலிருந்து கீழ் நோக்கி தொங்கி வளர்ந்திருக்கும் மரங்களைப் பார்த்திருப்போம். இந்த பாணி போன்சாயும் அதுபோலவே, தொட்டியிலிருந்து கீழ் நோக்கி வளர்ந்து அருவியாகத் தோற்றமளிக்கும். தொட்டியை உயரத்தில் வைத்து, செடியைக் கீழ்நோக்கி கம்பிகளின் உதவியுடன் வளைத்துச் சில காலம் பழக்கினால் இந்தப் போக்கைப் பெறலாம்.

என்ன செய்ய வேண்டும்?

1. சிறிய இலைகள் கொண்ட மரங்கள்
போன்சாய்க்கு ஏற்றவை.
2. நம் நாட்டு தாவரங்களைத் தேர்ந்தெடுத்தால் வளர்ப்பது எளிது.
3. நல்ல வடிகால் வசதி இருக்க வேண்டும்.
4. புதிதாக உருவாக்கும் போது வேர்கள்
நன்கு பிடிக்கும் வரை நிழலில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.
5. சூரிய ஒளி, காற்று, மழை நன்கு கிடைக்கும் இடத்தில் தொட்டியை வைக்க வேண்டும்.
6. மரத்தின் வளர்ச்சியைக் கவனத்தில் கொண்டு அதற்கேற்ற பாணியைத் தேர்ந்தெடுக்க
வேண்டும்.
7. தினமும் அளவாக நீர் ஊற்றுவது, தேவையான இடைவெளியில் உரமிடுவதும் நன்மை தரும்.
8. நோய் தாக்குதலிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
9. அலுமினிய கம்பி அல்லது தாமிர கம்பி ஏற்றது. கம்பியை தேவையான வடிவம் கிடைத்த பின் நீக்கி விட வேண்டும்.
10. கம்பி கட்டுதல், நுனி கத்தரித்தல் போன்றவற்றைக் குறிப்பிட்ட இடைவெளியில் செய்தால் அழகு கூடும்.

என்ன செய்யக் கூடாது?
1. பெரிய இலைகள் உள்ள மர வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
2. தொட்டியின் அடிப்பாகம் மண்ணில் படும்படியாக வைக்கக் கூடாது.
3. நிழலான பகுதியை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் கணுக்களுக்கு இடையே இடைவெளி அதிகரிக்கும். இடைவெளியைக் குறைக்க சைக்கோசெல் (Cycocel) என்ற மாசுள்ள, ஆனால், நாற்றுப் பண்ணைகளில் உபயோகிக்கும் ரசாயனப் பொருளை உபயோகிப்பவர்களும் உண்டு. இதையும் தவிர்க்கலாம்.
4. தேவைக்கு அதிகமாக நீர் ஊற்றக் கூடாது.
5. கோடையிலும் மழைக்காலத்திலும் உரமிடுதலைத் தவிர்க்க வேண்டும்.
6. துருப்பிடிக்குமென்பதால் இரும்புக்கம்பியை தவிர்க்க வேண்டும். குளிர்காலத்தில் கம்பி கட்டக் கூடாது.
7. சுற்றப்படும் கம்பி அதிக இறுக்கமாகவோ, அதிக தளர்வாகவோ இருத்தல் கூடாது.
8. அதிக காலம் கம்பி மரத்திலேயே இருக்கக்கூடாது. இருந்தால் அதன் தழும்பு கிளைகளில் நன்கு தெரியும்.போன்சாய் தாவர உலகின் புதுக்கவிதைகள்!

8. அதிக காலம் கம்பி மரத்திலேயே இருக்கக்கூடாது. இருந்தால் அதன் தழும்பு கிளைகளில் நன்கு தெரியும்.
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " போன்சாய் "

Your Comment Has Been Published!