மன்னர்கள் விரும்பிய மாம்பழம்!
முகலாய மன்னர்களுக்கு மா மீது கொள்ளைப் பிரியமாம். ஒவ்வொரு முகலாய மன்னரும் தன் அரண்மனைத் தோட்டத்தில் நூற்றுக்கணக்கான மரங்களை நட்டு வைத்திருந்தனராம். அக்பர், தான் போர்க்களத்தில் வெற்றி வாகை சூடியதன் நினைவாக, நூற்றுக்கணக்கான ரகங்களுடன் கூடிய மாந்தோப்பை நிறுவியதாக வரலாறு சொல்கிறது. இதனாலேயே ஹிமாயுதீன், ஜஹாங்கீர் என்று மா ரகங்கள் பலவும் முகலாய மன்னர்களின் பெயரையேத் தாங்கிநிற்கின்றன.
பண்டைய திருவிதாங்கூர் மகாராஜாக்களும் மா மீது தீராத பற்று கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் நாகர்கோவில் ராணித் தோட்டத்தில் ஒரு மாந்தோப்பையும், அரண்மனைத் தேவைக்காக கன்னியாகுமரியில் பழத்தோட்டத்தையும் அமைத்துள்ளனர். இங்கு நீலம், பெங்களூரா, செந்தூரா, பங்கனப்பள்ளி, ஹிமாம்பசந்த் உட்பட ஏராளமான வணிக ரகங்களோடு கல்கண்டு, அதிமதுரம், சூரங்குடி, வெட்டையன், பொட்டல் போன்ற உள்ளூர் ரகங்களும் பராமரிக்கப்படுகின்றன.
பசுமை விகடன் இதழிலிருந்து...

No Comment to " மன்னர்கள் விரும்பிய மாம்பழம்! "
Your Comment Has Been Published!