குப்பைமேனி

By Unknown → செவ்வாய், 18 மார்ச், 2014
Advertise
குப்பைமேனி "குப்பை" யல்ல. பல பலன்களை தரும் மூலிகை. இதை 'மார்ஜால மோகினி' என்பார்கள். வடமொழியில் மார்ஜாலம் என்றால் பூனையை குறிக்கும். இந்த செடி அருகில் பூனை போகாது என்கிறார். மூலிகை சக்ரவர்த்தி, வேலூர் டாக்டர் திரு. ஏ.ஆர். கண்ணப்பர்.
இந்தியா முழுவதும் காணப்படும் குப்பைமேனி செடி, ஒரு அடி உயரமுள்ளது. சிறிய, பல கிளைகளுடன் அடர்த்தியான செடி. இதன் இலையில் ஒரு ரூபாய் அளவு மஞ்சள் புள்ளிகள் காணப்படலாம். இலையின் ஓரம், ரம்பத்தின் பற்கள் போலிருக்கும். பூக்கள் வெண்மையாக, மிகச்சிறதாக இருக்கும். காய்கள் மிளகு போல், பச்சையாக இருக்கும்.
குப்பை மேனி செடியை ஒரு 'களை' (Weed) அல்லது 'புல் பூண்டு' என்றே சொல்லாம்.
இதன் தாவரவியல் பெயர் - Acalypha Indica.

சமஸ்கிருதம் - அரித்தமஞ்சரி, ஹிந்தி - குப்பி, கோகாலி, 
தமிழில் இதர பெயர்கள் - அரிமஞ்சரி, பூனை வணங்கி, மேனி
இதன் பயன்கள்
வயிற்றுப்பூச்சிகளை வெளியேற்ற - குப்பைமேனி செடியை வேருடன் எடுத்து, செடியை (வேர் உள்பட) நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி உலர வைக்க வேண்டும். இதில் ஒரு கைப்பிட எடுத்து, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி, ஆற வைத்து வடிகட்டவும். அதை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், பேதியாகி, மலத்துடன் வயிற்றுப்பூச்சிகள் வெளியேறும். சிறுவர்களுக்கு பாதி அளவு கொடுத்தால் போதும். சித்த வைத்தியத்தின் படி, இலைகளை சாறு பிழிந்தோ, குடிநீர்லிட்டோ சிறுவர்களுக்கு 1 முதல் 4 தேக்கரண்டி வரை கொடுக்கலாம். வெறும் இலைகளை பொடித்துக் கொடுத்தாலும், வயிற்று பூச்சி, புழுக்கள் வெளியேறும். குப்பைமேனி வேரை (50 கிராம்) எடுத்து, 200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக குடித்தால், நாடாப்பூச்சி போன்ற அரைத்து பூச்சிகளும் வெளியேறும்.
ஆயுர்வேதம் மார்ச் 2013


Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " குப்பைமேனி "

Your Comment Has Been Published!