மது, புகையிலைக்கு இருக்கும் கட்டுப்பாடு கோக், பெப்சி போன்ற பானங்களுக்கும் விதிக்கப்பட வேண்டும் !
அண்மையில் தமிழகத்தில் பெப்சி குடித்த ஒரு சிறுமி இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும் இப்போது அது குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. நடந்ததை மறந்து பலரும் வழக்கம்போல் கோக், பெப்சி அருந்தியவாறே உள்ளனர். பெப்சி, கோக் போன்ற பானங்கள் உடல்நலத்திற்கு எந்த அளவிற்கு கேடு விளைவிக்கிறது என்பதை பற்றி அண்மையில் பிபிசி தொலைக்காட்சி கோக் நிறுவன தலைவரிடம் பேட்டி எடுத்தது. அப்பேட்டியின் போது ஒவ்வொரு அரை லிட்டர் கோக் பானத்தில் சுமார் 40 தேக்கரண்டி சர்க்கரை உள்ளதை ஆதாரத்துடன் கூறிய போது அதை கோக் நிறுவன தலைவர் மறுக்கவில்லை. கோக் நிறுவன தலைவர் ஜேம்ஸ் , கோக் பானத்தில் உள்ள சர்க்கரை அளவை பற்றி அறிந்து மக்கள் குடிக்கப் பழகிக் கொள்ளவேண்டும் . எங்கள் நிறுவனம் சார்பாக நாங்கள் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. உலகில் உள்ள மற்ற குளிர் பானங்களிலும் இவ்வாறு சர்க்கரை கலந்துள்ளது . அதை பற்றி யாரும் கவலைப் படவில்லை என்று கூறியுள்ளார். பிபிசி தொடர்பாளர் கூறுகையில், ஒரு திரைப்படம் பார்க்கும் வேளையில் ஒரு மனிதன் 40 தேக்கரண்டி சர்க்கரை கொண்ட கோக் உட்கொண்டால் அவன் உடல் எத்தகைய பாதிப்புக்கு உள்ளாகும் . இதனால் உடல் எடை கூடி பல்வேறு நோய்களுக்கு ஆளாகக் கூடும் என்பதை விளக்கியுள்ளார் .
பொதுவாக நவீன நாகரீக மனிதர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் தினமும் தங்கள் உணவில் கோக் பெப்சி போன்ற பானங்களை சேர்த்துக் கொள்கின்றனர். இதனால் அளவிற்கு அதிகமாக சர்க்கரை அவர்கள் உடலில் சேர்க்கிறது . நாளைடைவில் கணையம் முற்றிலும் பாதிக்கப்பட்டு சர்க்கரை நோய்க்கு ஆளாகுவதுடன் சிறுநீரகம் செயலிழந்து , கண்கள் பார்வை குறைந்து , எடை கூடி , இருதய நோய்க்கும் இடம் அளிக்கிறார்கள். முதலில் கோக் பருகுவர்களுக்கு இப்படியான பாதிப்புகள் பற்றி தெரியாமல் இருந்தாலும் , நாளடைவில் மேற்கூறிய அனைத்து நோய்களுக்கும் இவர்கள் ஆட்படுவது உறுதியாகவே உள்ளது. நகர்புற மக்களின் ஆயுட்காலமும் கணிசமாக குறைகிறது. குறிப்பாக சிறுவர்கள் அதிக பருமனுடன் வளர்கிறார்கள். வளர வளர பல்வேறு நோய்களுக்கு உள்ளாகிறார்கள். இதை தடுக்க வேண்டிய கடமை பெற்றோர்களுக்கும் உள்ளது . இத்தகைய பானங்களை தடை செய்வது நடைமுறை சாத்தியம் இல்லாத காரணத்தால் , புகையிலை , மதுவிற்கு இருக்கும் எச்சரிக்கை தகவல்கள் இந்த பானங்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோருகின்றனர் சமூக ஆர்வலர்கள். இதை பிபிசி செய்தியாளரும் தன்னுடைய கருத்தாக தெரிவித்து உள்ளார். ஒவ்வொரு முறை கோக் பெப்சி விளம்பரம் வெளியாகும் போது 'இதை அருந்துவது நாட்டுக்கு , வீட்டுக்கு , உயிருக்கு கேடு ' போன்ற வாசகமும் இடம் பெற வேண்டும் .
இந்தியா போன்ற நாடுகளில் வெளிநாட்டு மோகம் அதிகம் இருப்பதால் உள்நாட்டு இயற்கை பானங்களான இளநீர் , பதநீர் , மோர் , பழரசம் ஆகியவற்றை மக்கள் அதிகம் பருகாமல் கோக், பெப்சி போன்ற பானங்களையே விரும்பி குடிக்கின்றனர் . இதனால் மக்களுக்கு சிறு வயதிலேயே பலவகையான நோய்கள் வருகின்றன. இதை தடுக்க வேண்டிய அரசும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. நாட்டின் வளமான நீர்வளம் இந்த கோக் பெப்சி நிறுவனங்களால் கொள்ளை அடிக்கப்படுகிறது . குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும் காலத்தில் கூட கோக் பெப்சிக்கு பஞ்சமில்லை இந்த நாட்டில் .
பொதுமக்கள் தங்கள் உடல்நலம் , இயற்கை நலம் , சுற்றுப்புற சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இப்படியான வெளிநாட்டு கோக் பெப்சி பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும் . தங்கள் குழந்தைகளுக்கும் இதை பற்றி சொல்லிப் புரியவைக்க வேண்டும் . கோக் பெப்சி போன்ற செயற்கை பானங்களை தவிர்ப்போம். வளமுடம் வாழ்வோம் . கோக் பெப்சி அருந்துவது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்பதை உரக்கச் சொல்வோம்.

No Comment to " மது, புகையிலைக்கு இருக்கும் கட்டுப்பாடு கோக், பெப்சி போன்ற பானங்களுக்கும் விதிக்கப்பட வேண்டும் ! "
Your Comment Has Been Published!