Tags:

ஊமத்தை

By Unknown → திங்கள், 10 மார்ச், 2014
Advertise
ஊமத்தை

இலையை நல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம், வாயுக்கட்டிகள், அண்ட வாயு, தாய்பால் கட்டிக்கொண்டு வலித்தல், நெரிகட்டுதல், ஆகியவை குணமடையும்.

இலைச்சாற்றுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து காச்சி, இளஞ்சூட்டில் 2-3 துளி காதில் விட சீதளத்தால் வந்த காது வலிதீரும்.

இலையை நீர் விடாது அரைத்து நல்லெண்ணெயில் வதக்கி நாய்கடிப் புண்ணில்கட்ட ஆறும்.மூன்று துளிச் சாறு வெல்லம் கலந்து காலை,மாலை 3 நாள் மட்டும் கொடுக்க நஞ்சு தீரும்.கடும் பத்தியம்- பகலில் தயிர் சோறும்இரவில் பால் சோறும் உப்பில்லாமல் சாப்பிடவும்.

இலைச்சாற்றைச் சமளவு தேங்காய் எண்ணெயில் காச்சி சிறிதளவு மயில் துத்தம் கலந்து வெளிப்பூச்சாகப் பயன்படுத்த ரணம், சதைவளரும் புண்புரைகள், தீரும்.

ஊமத்தைப் பிஞ்சை அவரவர் உமிழ் நீரில் மையாய் அரைத்துத் தடவ புழுவெட்டு தீரும்,புழு இறந்து முடி வளரும்.

இலை, பூ, விதை மூன்றையும் பாலில் பிட்டவியலாய் அவித்து உலர்த்தி, தூள் செய்து (ஒன்றிரண்டாய்) பிடியாய்ச் செய்து புகைக்க ஆஸ்துமா, மூச்சுத்திணரல் உடனே குறையும்.

அனைத்து வகைப் புண்ணுக்கும். - ஊமத்தம் இலைச்சாறு 500 மி,லி.தேங்காய் எண்ணெய்500 மி.லி. கலந்து மயில் துத்தம் 30 கிராம்போட்டு சுண்டக் காச்சி சாறு வடிக்கவும்.இதனை அனைத்து வகையான புண்களுக்கும் மேல் பூச்சாக இட குணமடையும்.மேகப் புண், நீரிழிவுப்புண், ஆறாத குழிப்புண், வளர் புண் குணமடையும்

Post Tags:

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " ஊமத்தை "

Your Comment Has Been Published!