உடலுக்கு வலிமை தரும் ஆலமரம்!

By Unknown → ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014
Advertise
Benefits and Medicinal uses of Banyan Tree - Food Habits and Nutrition Guide in Tamil
கட்டுப்படும் சர்க்கரை நோய்:
  • ஆலம்பட்டையை இடித்து சாறு பிழிந்து 10 பங்கு நீர் சேர்த்து குடித்துவர நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) கட்டுப்படும்.
  • ஆல மொக்கினை மென்று, பல் வலி உள்ள இடத்தில் வைக்க பல் வலி, ஈறில் இருந்து ரத்தம் கசிதல் போன்றவை குணமாகும்.
  • பழுத்த ஆலம் இலையை சுட்டு சாம்பலாக்கி, நல்லெண்ணெயில் குழைத்து, பாதிப்பு பகுதியில் பூசி வர கரப்பான், சொறி, சிரங்கு போன்றவை தீரும்.
  • ஆலம் பாலில் அருகம்புல் சூரணம் (பொடி) சேர்த்து உட்கொண்டு வர வெண்குஷ்டம், உடல் ஊதல் மற்றும் வெளுத்தல் போன்றவை குணமாகும்.
  • ஆலமரத்தின் பட்டையை குடிநீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண், ஈறுப்புண், வாய்நாற்றம் போன்றவை நீங்கும்.
ஆண்மை அதிகரிக்க:
  • ஆலமரத்தின் மொக்கு, தளிர் இலை, விழுது, விதை இவற்றில் ஏதேனும் ஒன்றை அரைத்து, அதை பாலில் கலந்து சர்க்கரையும் சேர்த்து குடித்து வர ஆண்மை அதிகரிக்கும். இதனையே பெண்கள் உட்கொண்டு வர அவர்களது மலட்டுத்தன்மையும் நீங்கும்.
  • ஆலம் விழுதை எலுமிச்சை சாறுவிட்டு அரைத்து தலைக்கு தேய்த்து குளித்துவர முடி நன்கு வளரும்.
  • ஆலம் விழுது, செம்பருத்திப்பூ இரண்டையும் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி கூந்தலில் தடவிவர கூந்தல் நன்கு கருப்பாகும்.
  • பித்த வெடிப்புகள் மீது ஆலம்விழுதை அரைத்தோ அல்லது ஆலம்பாலையோ பூசி வர அது குணமாகும்.
  • ஆலமரத்தின் கொழுந்து இலைகளை அரைத்து, சிறிதளவு எருமைத் தயிரில் கலந்து குடிக்க சீதபேதி, கழிச்சல் ஆகியவை குணமாகும்.
குணமாகும் மூலம்:
  • ஆல மொக்கு, விழுது இவற்றை அரைத்து, அதில் 10 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து குடித்து வர மூலம், ரத்த மூலம் குணமாகும்.
  • ஆலம் விதையை அரைத்து பாலில் கலந்து இரவில் குடித்து வர மலச்சிக்கல், மூல நோய் தீரும்.
  • ஆலம் விழுதை சாம்பலாக்கி நல்லெண்ணெயில் குழைத்து பூசி வர அக்கி குணமாகும்.
  • ஆலம்பட்டையை நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதை கொண்டு புண்கள், ஆறாத புண்களை கழுவ அதி விரைவில் குணமாகும்.
  • ஆலமரத்தின் இலையை வதக்கி கட்டிகளுக்கு வைத்து கட்ட, கட்டி உடைந்து சீழ் வெளியாகும்.
  • ஆலம் விதை, அரசு விதை இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து பாலில் கலந்த குடிக்க ரத்த வாந்தி குணமாகும்.
ஆலமரத்தின் அனைத்து பாகங்களும் மேகம், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு நோய் ஆகியவற்றை குணமாக்கி உடலுக்கு வலிமையை தரக்கூடியவை.
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " உடலுக்கு வலிமை தரும் ஆலமரம்! "

Your Comment Has Been Published!