Browsing "Older Posts"

Browsing Category "இயற்கை மருத்துவம்"
ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை வாங்கி சாப்பிடுவது போல், யாரும் நாவல் பழத்தை வாங்கி சாப்பிடுவதில்லை. நாவல் பழத்தின் மகிமை, நமக்கு தெரியாததே இதற்கு காரணம். நாவல் பழத்தின் மருத்துவ குணம் தெரிந்தால், ஒருபோதும் இப்பழத்தை ஒதுக்க மாட்டோம். இதன் துவர்ப்புச் சுவை ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. நாவல் பழத்தில் ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை இருக்கிறது. ரத்தத்தில் கலந்திருக்கும் கெட்ட கழிவுகளை, இது வெளியேற்றி விடும்.

நாவல் பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும். தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள், தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். நாவல்பழம் வியர்வையை பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பழம் சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோய் பாதிப்பு உள்ளவர்கள், நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நோயின் தாக்கம் குறையும்.
நாவல் பட்டையை இடித்து, நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பை பாதிப்புகளைப் போக்கும். எனவே, நாவல் பழம் கிடைக்கும் சீசன் காலங்களில், அதனை வாங்கி சாப்பிடுவது உடலுக்கு நல்லது.



நாவல் பழம் - இயற்கை மருத்துவம்

By Unknown → திங்கள், 5 அக்டோபர், 2015


தினசரி உணவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக உட்கொண்டால்தான், ஆரோக்கியம் நம்மிடத்தில் நிலைக்கும். போதிய நேரமும், ஆலோசனையும் இல்லாததால், வயிற்றை நிரப்ப ஏதேனும் சாப்பிட வேண்டும் என்றாகி விட்டது. ஆகவே, சத்துள்ள உணவுகளை உட்கொள்ள பழகுங்கள். நாம் உண்ணும் உணவில், பருப்பு வகைகளை சேர்த்து கொண்டாலே ஆரோக்கியம் நிலைக்கும்.

பருப்பு வகைகளில், பச்சை பயறு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு பவுல் வேக வைத்த பச்சை பயறில், 100 கலோரிகளுக்கு மேல் உள்ளது. இவை நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியாக மட்டுமில்லாமல், சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கும் பயன்படுகிறது. பச்சை பயறை தினசரி சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்:

உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு, பச்சை பயறு ஏற்ற மருந்தாக பயன்படுகிறது. பச்சை பயறு நீண்ட நேரம், வயிற்றை நிறைவாக வைத்திருக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பவுல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒருநாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து கொள்ளும் போது, இரும்புசத்தும் கூடும்.

பச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அன்றாடம் வெளியில் சுற்றுவோர், பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை உணவில் சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கலாம்.

பச்சை பயறு தரும் ஆரோக்கியம் - இயற்கை மருத்துவம்

By Unknown →

சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.

சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.

சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும். சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.

சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.

சுண்டைக்காய் வற்றல் - இயற்கை வைத்தியம்

By Unknown →
தர்பூசணிப்பழச் சாறு:

கோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும்.

நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்.

அத்திப்பழச்சாறு:

அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று பழமொழி இருந்தாலும் கூட அத்திப்பழத்தை உபயோகிக்கலாம். அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து அருந்தலாம்.

இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரும்.

அத்திப்பழமும் தேனும் கலந்து கல்உப்புடன் சேர்த்து உண்ண ஆரம்பகாலச் சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்..

ஆப்பிள் பழச்சாறு:

ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும்.

மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.

திராட்சைச் சாறு:

திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), காமாலை, வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும்.

திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.

ஆரஞ்சுச் சாறு:

தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம்.

இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும். ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.

சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும். இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்தும் அருந்தலாம்.

எலுமிச்சைச் சாறு:

பாத்திரங்களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சை பயன்படுவதில்லை. நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் பயன்படுகிறது. எலுமிச்சைச் சாறு அத்துடன் தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும்.

தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.

இளநீருடன் கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும். வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்த எலுமிச்சைச் சாறுடன் அருந்துவதால் காலரா குணமாகும்.

உடல் களைப்புகள், கை, கால் கனுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம்.

பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சைச் சாறும் தேனும் கலுந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்கலாம்.

தக்காளிச் சாறு:

தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்கள் குணமாகும்.

மேலும் தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு ஏற்ப பல விதமான நோய்களை குணமாக்கும் ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகான சத்துடன் விலை மலிவாக கிடைக்கும்.



இயற்கை பழச்சாறுகளின் மகத்துவம்

By Unknown →



மலச்சிக்கல்:-

செம்பருத்தி(Hibiscus) இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி:-

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு:-

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில்(Olive Oil) காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு:-

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்:-

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

தேமல்:-

வெள்ளை பூண்டை(Garlic) வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

மூலம்:-

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

தீப்புண்:-

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு:-

ஒரு துண்டு சுக்கை(Dry Ginger) தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வரட்டு இருமல்:-

எலுமிச்சம் பழசாறு(Lemon Juice), தேன்(Honey) கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

எளிய இயற்கை மருத்துவம்

By Unknown →

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். பேரீச்சம் பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இரும்புசத்து அதிகம் உள்ள பேரீச்சம் பழம் நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது. வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்த பழம் நரம்பு தளர்ச்சியை போக்கும். புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிரம்பியுள்ள பேரிட்சம் பழங்கள் புற்றுநோய் வராமல் தடுக்கும். 

கண்பார்வை தெளிவடைய

வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

பெண்களுக்கு:

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆண்களுக்கு:

ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது. பார்வை குறைபாடை போக்கி பார்க்கும் திறனை அதிகரிக்கும். கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மை உள்ளது. இனிப்பு சுவையுள்ளதால் இந்த பழத்தை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நன்மை அளிக்கும் பேரிட்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் நலம் பெறும். தூசு இல்லாத சுத்தமான பேரீச்சம் பழத்தைதான் வாங்கி சாப்பிட வேண்டும்.

பேரீச்சம் பழத்தின் நன்மைகள் - இயற்கை மருத்துவம்

By Unknown → செவ்வாய், 7 ஜூலை, 2015
1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது...

எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால் , தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது... பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துக ிறது...

2. உடலின் pH ஐ சீராக்குகிறது...

எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையா க மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது...

3. உடல் எடையைக் குறைக்கிறது...

எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ள உணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பதுநிருபணமான உண்மை...

4. சமிபாட்டை வேகப்படுத்துகிற து...

5. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறத ு.

6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக்குறைக்கிறது.

7. வாய்த்துற்நாற்ற த்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது...

8. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.

9. stress ஐ குறைக்கிறது.

இது விட்டமின் சீ காரணமாய் இருக்கலாம் என்பது தியறி... ஆனால் நிருபிக்கப்படவில்லை.

10. காலையில் டீ அல்லது கோப்பி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்

By Unknown →

கறிவேப்பிலை தைலம்

கறிவேப்பிலை – 200 கிராம்
கொத்தமல்லி இலை– 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
நல்லெண்ணை – 600 கிராம்
பசுவின் பால் – 200 மில்லி

கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லி இலையையும் மையாக அரைத்துக் கொள்ளவும்.

சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மி.லி. பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடவும். ஐந்து நிமிடங்கள் மேலும் சூடேறியப் பிறகு கொத்துமல்லி இலையைப் போடவும். அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு, தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.

நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்து குளிக்கலாம். தைலத்தை தேய்த்து குளிக்கும் அன்று குளிர்ந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

தலைச்சுற்றை விரட்டும் கறிவேப்பிலை தைலம்

By Unknown → வெள்ளி, 26 ஜூன், 2015

* எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

* கொழுகொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

* வாழைத்தண்டுச் சாறு, பூசணிச்சாறு, அருகம்புல் சாறு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வர சதை போடுவதைத் தடுக்கலாம்.

* எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

* கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.

* கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

* தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப்பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

* ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் கரண்டி மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.

* வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

* வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் இரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால், தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

* பச்சை கொத்துமல்லித் தழைகளை அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

* சுக்கை அரைத்து நெற்றியில் பற்று வைக்க தலைவலி குணமாகும்.

* ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

* புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

* வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

* மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும்.

* வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.

* பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் நெஞ்சு சளி சீக்கிரம் குணமாகும்.

* தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ நெஞ்சு சளி குணமாகும்

* வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

* சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் வயிற்றுப் போக்கு குணமாகும்.

* தொடர் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிட குணமாகும்.

* நார்த்தங்காய் ஊறுகாய் மலச்சிக்கலைப் போக்கி நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும்.

* சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும், மலச்சிக்கல் தீரும். நாள்பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.

* மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

* பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

* சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

* வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

* சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்றுவேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய்நாற்றம் போகும்.

* கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

* காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவு கீழாநெல்லிச் சாறு குடித்து வந்தால் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

* துளசிச்சாற்றை தினமும் குடித்து வந்தால் கல்லீரல், மண்ணீரல் நோய்களை தடுக்கலாம்.

* பருப்பு கீரை, கீழா நெல்லி இரண்டையும் சம அளவில் எடுத்து மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் வற்றும்

* பொன்னாங்கண்ணிக் கீரையை பருப்பு போட்டு கடைந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் குணமாகும்.

* நெல்லிக்காய் வற்றல் 50 கிராம், சீரகம் 50 கிராம் – இந்த இரண்டையும் பொடி செய்து ஒரு வாரத்துக்கு காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

* பூவரசு மரத்தின் கொழுந்து இலைகளுடன் 6 மிளகு சேர்த்து அரைத்து, அதை மோரில் சுண்டைக்காய் அளவு கலந்து மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

* தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலம் கரும்புள்ளிகளைக் கரைத்துவிடும்.

* கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்.

* தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

* பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.

* சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும்

* கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.

* தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.

* கசகசாவை நைசாக அரைத்து குழந்தையின் தொப்புள் சுற்றி தடவினால் குழந்தையின் அழுகை நின்றுவிடும்.

* தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்.

* வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.

* நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்

* துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.

* கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இருமுறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.

* இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த காலரா குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது.

* ஒரு டம்ளர் கொதிநீரில் 1 மேசைக்கரண்டி தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வயிற்றுவலி பறந்துவிடும்.

* முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் உடல் அசதி குணமாகும்.

* காய்ச்சிய வேப்ப எண்ணெய் தடவி வர சேற்றுப்புண் குணமாகும்.

* வில்வபழம் சாப்பிட மூளை தொடர்பான நோய்கள் தீரும்.

* வெண்ணீரில் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வர ஞாபகசக்தி பெருகும்.

* யானைக்கால் நோய் குணமாக வல்லாரை கீரை தொடர்ந்து சாப்பிடலாம்.

* பாதாம் பருப்பு வறுத்து அடிக்கடி உண்டு வர கண் பார்வை தெளிவு பெறும்.

* வேப்பம் பூவுடன் மிளகு, சீரகம் சேர்த்து உண்டுவர பித்தப்பை நோய் குணமாகும்.

* சப்போட்டா பழம் தினமும் பகல் பொழுதில் உண்டுவர இரவில் நன்றாக தூக்கம் வரும்.

* காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து சுட வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்; முடி உதிர்வது நிற்கும்.

* எருக்கஞ் இலையின் பின்புறம் விளக்கெண்ணெய் தடவி தணலில் காட்டி கட்டிகள் மீது வைத்துக் கட்டினால் கட்டி பழுத்து உடையும்.

* இலந்தை மரத்தின் இலையை மைய அரைத்து காயத்தின் மீது போட்டு வர வெட்டுக்காயம் குணமாகும்.

இருமல் குறைய பாட்டி வைத்தியம்

1. முளைக்கீரை, அதிமதுரம் (ஒரு துண்டு) மஞ்சள் (3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.

2. புளிச்சக்கீரையை அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

3. வெந்தயக் கீரையுடன், உலர்ந்த திராட்சை (10), சீரகம் அரை கரண்டி இரண்டையும் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.

4. கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறில் அதிமதுரத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் இருமல், புகைச்சல் ஆகியவை சரியாகும்.

5. தூதுவளைக் கீரையுடன் அதிமதுரம், தனியா, உலர்ந்த திராட்சை ஆகியவற்றைச் சேர்த்துக் காய்ச்சி கஷாயமாக்கி வடிகட்டிச் சாப்பிட்டால், இருமல், விடாத தும்மல், புகைச்சல் போன்றவை குணமாகும்.

6. முசுமுசுக்கைக் கீரைச் சாறில் அதிமதுரத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, 2 கிராம் அளவுப் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல், புகைச்சல் போன்றவை குணமாகும்.

7. பண்ணைக் கீரைச் சாறில் அதிமதுரத் தூளை கலந்து சாப்பிட்டால், எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.

8. வங்கார வள்ளைக் கீரை, கற்பூரவல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் இருமல், சளி, ஆஸ்துமா குணமாகும்.

9. மணலிக் கீரைச் சாறில் உலர்ந்த திராட்சையைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.

10 காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.

மருந்தில்லா மருத்துவம்

By Unknown →

சமகாலத்தில் எல்லோரையும் மிரட்டும் வியாதியாக இருப்பது புற்றுநோய். அதிலும் உள்ளுறுப்புகளில் வரும் புற்றுநோயானது எவ்வித அறிகுறியையும் காட்டாமல் இரகசியமாய் வளர்ந்து மற்ற உறுப்புகளையும் முடக்கும் போதுதான் தெரியவரும். ஆனால் அப்போது அதை குணப்படுத்த முடியாத அளவு நிலைமை கைமீறி போய் இருக்கும்.

குறிப்பாக கணைய புற்றுநோய் (Pancreatic cancer)அத்தனை எளிதில் அறிகுறியும் தென்படாமல், வந்தபின் குணப்படுத்த மிகவும் கடினமான வியாதி. சர்க்கரை நோயுடன் கர்ப்ப காலங்களில் புகைக்கும் பழக்கம் கொண்ட பெண்களுக்கு பிற்காலத்தில் இந்த புற்றுநோய் வரும் வாய்ப்பு உண்டு. அதோடு நம்மில் பலர் புகைப்பழக்கத்தால் தாமே இந்த கணைய புற்றுநோயை வரவழைத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட மருத்துவத்திற்கு சவாலான கணைய புற்றுநோயை கட்டுப்படுத்த கருஞ்சீரகம் பெரும் பங்கு வகிக்கிறது.

உடலுக்கு தேவையான பிராணசக்தி குறையும் போது உடலுக்குள் உறைந்திருக்கும் புற்றுநோய் கலங்கள் பல்கி பெருகி வளர்ச்சி அடைகின்றன. கருஞ்சீரகம் உடலுக்கு தேவையான பிராண சக்தி, எதிர்ப்பு சக்தியை பெருக்குவதுடன், இயற்கை நச்சுயிரிப் பெருக்கத் தடுப்புப் பொருளாகவும் (natural interferon), எலும்பு மஜ்ஜை உற்பத்தி சீராக இயங்க வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவை சமன் செய்யவும் பேருதவி புரிகிறது.

மேலும் இதில் உடலுக்கு தேவையான பலவித அமிலங்களான மிரிஸ்டிக் அமிலம், பாமிற்றிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், ஒலீயிக் அமிலம், லினோலியிக் அமிலம், ஒமேகா-6 ஃபேட்டி அமிலம், ஃபோலிக் அமிலம் போன்றவற்றை உள்ளடக்கியது. மற்றும் புரதம், கல்சியம், இரும்புச்சத்து, காப்பர், ஜிங்க், பாஸ்பரஸ், விட்டமின்கள் B1, விட்டமின்கள் B2, விட்டமின்கள் B3 போன்ற சத்துக்களை உள்ளடக்கிய அறிய மூலிகையே இந்த கருஞ்சீரகம்.

மருத்துவகுணங்கள்

*தோல் நோயை குறைப்பதில் கருஞ்சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

*பசியைத் தூண்டவும் கருஞ்சீரகம் பயன்படுகிறது. ஜீரணத்தை சீர்படுத்தும்.

*வயிற்றுப் போக்கை குணப்படுத்தும்.

*கருஞ்சீரகம் புழுக்கொல்லியாக செயல்படும். வாந்தியைத் தடுக்கும். இதய வலியை குறைக்கும்.

*சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.

*கருஞ்சீரகத்தை நீர் விட்டு அரைத்து, நல்லெண்ணையில் குழைத்து கரப்பான், சிரங்கு ஆகியவற்றில் பூசி வர குணம் தெரியும்.

*கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து பிரசவித்த பின் ஏற்படும் வலிக்குப்பூசிட வலி மாறும்.

*கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மேல் பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும்.

*கருஞ்சீரகத்தை வறுத்து காடி விட்டு அரைத்து சொறி, தேமல் மேல் பூசி வர தேமல், சொறி மறையும்.

கருஞ்சீரக பூ*கருஞ்சீரகப்பொடி, மல்லிப்பொடி இரண்டையும் பாலில் கலந்து சாப்பிட அஜீரணம் மாறும்.

*கருஞ்சீரகப் பொடியை தயிரில் கலந்து சாப்பிட அஜீரணம் மற்றும் வாயு உற்பத்தி மாறும்.

*கருஞ்சீரகத்தை எருமைப்பால் விட்டு அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு மாறும்.

*கருஞ்சீரகத்தை வெற்றிலை சாறு விட்டு அரைத்து காது, கன்னப் பகுதியில் ஏற்படும் வீக்கம் மேல் பற்று போட வீக்கம் மறையும்.

*கருஞ்சீரகத்தை vinegarல் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்

*கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.

*கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீர்பை கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும்.

*கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது

* கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி நல்எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.

* இது தலைமுடிக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியது. கருஞ்சீரகத்தை 4 டீஸ்பூன் எடுத்துக்கொண்டு லேசாக வறுக்கவும். 250 மி.லிட்டர் நல்லெண்ணெயைக் காய்ச்சி அதில் போட்டு வேக விடவும். (எண்ணெய் புகை வரம்படி காயக்கூடாது). பின் ஆறியதும், இந்த எண்ணெயை வடிகட்டி வைத்துக் கொண்டு தலையில் தேய்த்து வரலாம்.

கருஞ்சீரகம்

By Unknown →

முகத்தின் பொலிவு*வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.

* பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர்ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

* தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும், முகம் பொலிவுடன் காணப்படும்.

* கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

* தேன் மூன்று மேசைக்கரண்டி எடுத்துக் கொண்டு அத்துடன், ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை( கறுவா) தூள் கலந்து கரும்புள்ளிகள்உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

* முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும். அதேபோல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.

* முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங் களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.

* ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர,கரும்புள்ளிகள் மறையும்.

* கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.

* உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

* எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர அவை நாளடைவில் மறைந்து விடும்.

* வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.

* முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து, முகத்தில் தேய்த்து காய்ந்ததும், அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால் கரும்புள்ளிகள் நீங்கும்.

* முட்டைகோசுடன் பன்னீர் ரோஜாவை மசித்து அதில் பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

* வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் கரும்புள்ளிகள் நீங்கும்.

* சந்தனத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி, காய்ந்த பின் தண்ணீரால் கழுவ வேண்டும்.

* தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

* முகப் பருவைக் கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளியைப் போக்க ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப்பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும்புள்ளியின் மேல் போட்டு வரவும். தினமும் இது போல் செய்து வர சில நாட்களில் கரும்புள்ளி மறைந்து விடும்.

கோபி சந்தனம் – ஒரு தேக்கரண்டி, பாதாம் பருப்பு – மூன்று(நீரில் ஊற வைத்தது), தயிர்- 2 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி. இவைகளை அரைத்து எடுத்து முகம்,கழுத்து பகுதிகளில் பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவவும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகப்பரு, கரும்புள்ளி, தழும்புகள் நீங்கி முகம் அழகுபெரும்.

முகத்தில் தழும்புகள் – தீப்புண் தழும்புகள் மறைய:
அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரியாக்கி தூள் செய்து தேங்கா எண்ணையில் விட்டு குழப்பி வைத்துக் கொள்ளவும். இதனை இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவிவர தழும்புகள் படிப்படியாக மறையும்.

முகப்பரு, கரும்புள்ளி, தழும்புகள் நீங்க

By Unknown →

ஆண்மைத்தன்மை குறைபாடு நீங்கவிந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடு, உரிய எழுச்சி ஏற்படாமல் போதல், பாலுணர்வு வேட்கை குறைதல் போன்ற பல சிக்கல்களும் இருக்கக்கூடும். அவர்கள் எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. பாலியல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பல்வேறு மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.

காரணங்கள்
ஹார்மோன் மாறுபாடுகள், ஆண் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் பாதிப்புகள், குரோமோசோம் மாறுபாடுகள், அம்மைக்கட்டு, காசநோய், பால்வினை நோய்கள், மனநிலை மாறுபாடுகள், புகைபிடித்தல், மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பாதிப்புகள், கதிரியக்கத்திற்கு உட்படுதல் மற்றும் இறுக்கமான உள்ளாடை அணிதல் போன்றவை.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்

* நிலப்பனைக் கிழங்கைப் பொடித்து, ஒரு மேசைக்கரண்டி எடுத்து பால், சர்க்கரை கலந்து உண்டுவரலாம்.

* பூனைக்காலி விதை, நெல்லிவற்றல் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, ஒரு கரண்டி எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.

* அமுக்கரா கிழங்குப் பொடியுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து ஒரு கரண்டி சாப்பிடலாம்.

* நிலப்பூசணிக் கிழங்கின் சாறுடன் பால், சர்க்கரை சேர்த்து உண்ணலாம்.

* ஓரிதழ் தாமரையை அரைத்துப் பாக்கு அளவு எடுத்துப் பாலில் கலந்து அருந்தலாம்.

* தாமரைப்பூவின் மகரந்தப் பொடியுடன் சர்க்கரை, தேன் கலந்து சாப்பிடலாம்.

* சம அளவு நீர்முள்ளி விதை, மாதுளம் விதையைப் பொடித்து, ஒரு கரண்டி வெண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம்.

* துவளைப்பூ, முருங்கைப்பூ இரண்டையும் கைப்பிடி எடுத்து நெய், வெங்காயம் சேர்த்து சமைத்து உண்ணலாம்.

* முள்முருங்கை இலையை நெய், அரிசி மாவு சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.

* வில்வப் பிசின், வாதுமைப் பிசின் சம அளவு எடுத்துப் பொடித்து அதில் கால் கரண்டி எடுத்துப் பால் சேர்த்து குடிக்கலாம்.

* நாவல் வேர்ப்பொடி ஒரு கரண்டி எடுத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.

சேர்க்க வேண்டியவை
முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, முருங்கைப் பிஞ்சு, மாதுளம்பழம், மாம்பழம், பலாப் பிஞ்சு, பலாக் காய், புடலங்காய், எலுமிச்சம்பழம், பசலை, அரைக்கீரை, கொத்துமல்லிக் கீரை, கோதுமை, சவ்வரிசி, உளுந்து, வெந்தயம், நிலக்கடலை.

தவிர்க்க வேண்டியவை
அதிகக் காரம், துவர்ப்பு மற்றும் கசப்புள்ள உணவுகள், சிகரெட் மற்றும் போதைப் பொருட்கள்.

ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க

By Unknown →

மூலிகையின் பெயர் – கண்டங்கத்தரி
ஆங்கிலப் பெயர் – Solqnumsuraltense, Burmfi solqnqceae
வேறு பெயர்கள் – பாப்பார முள்ளி, கண்டம், கண்டு, கபநாசம், கண்டங்காரி துற்பஞ்சா, நிதித்திகா, பிறசோதி, நிராட்டிகா, சிங்கி, நிசப்பிரிய வாணாதாகி, சுவாக்கனி, கண்டநியா.
வளரியல்பு – கண்டங்கத்திரி செடி வகையைச் சேர்ந்தது. எல்லா இடங்களிலும் விளையக் கூடியது. இதற்கு கபத்தை அகற்றும் தன்மை (Expectorant Action) உண்டு. இந்த தாவரம் முழுவதும் கூர்மையான முட்களை கொண்டது. முட்கள் மஞ்சளாக, பளபளப்பாக 1.5 செ.மீ. நீளத்தில் இருக்கும். பூக்கள் நீல நிறமானவை. சிறு கத்தரிக்காய் வடிவான காய்களையும், மஞ்சள் நிறமான பழங்களையும் கொண்டது. கண்டங்கத்திரி செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் கொண்டவை. இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் போன்ற அனைத்தும் சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது.
மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களில் மிகவும் முக்கியமானது சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள்தான். இருமல், சளி, மூக்கடைப்பு, தொண்டைகட்டு, சுரம் என்று பற்பல விதங்களில் கப நோய்கள் பாதிக்கின்றன. இவை அனைத்திற்கும் மூலிகை மருந்துகள் உடனடி நிவாரணம் அளிக்கின்றன. பக்க விளைவுகள் இல்லாமலும், அதேநேரம் உடனடி நிவாரணம் அளிக்கக்கூடிய மூலிகைகளில் முக்கியமான மூலிகை கண்டங்கத்திரி.
‘காச சுவாசங் கதித்தஷய மந்தமனல்
வீசு சுரஞ் சன்னி விளைதோடம்-ஆசுறுங்கால்
இத்தரையு னிற்கா, எரிகாரஞ் சேர்க்கண்டங்
கத்திரியுண் டாமாகிற் காண்.”
இப்பாடல் அகத்தியர் குணவாகடம் நூலில் உள்ளது. இப்பாடலின் பொதுவான கருத்து கண்டங்கத்திரி மருத்துவ குணம் மிக்க மூலிகை. கண்டங்கத்திரி காசம், சுவாசம், ஷயம், அக்கினி மந்தம், தீச்சுரம், சன்னி வாதம், எழு வகை தோஷங்கள், வாதநோய் ஆகியவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது, என்பதே.
சுகாதார சீர்கேட்டால் இன்றைய சுற்றுச்சூழல் மிகவும் சீர்கெட்டு உள்ளது. நாம் அனைவரும் சுவாசிக்கும் காற்று மாசுபட்ட நிலையில் உள்ளது. இதனால் சிலருக்கு நுரையீரல் பாதிப்படைகிறது. மேலும், சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. இதனால் பிராண வாயு உறிஞ்சும் தன்மை பாதிக்கப்படுகிறது. மேலும், மூச்சுக்குழல் தொண்டைப் பகுதிகள் பாதிப்படைகின்றன. அடிக்கடி சளி பிடித்துக் கொள்ளுதல், மூக்கில் நீர் வடிதல், அதிகளவு தும்மல், மூச்சுத் திணறல் போன்றவை உண்டாகிறது. இத்தகைய பிரச்சினைகளுக்கு கண்டங்கத்திரி நிரந்தர தீர்வை கொடுக்கிறது.
கண்டங்கத்தரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு. சித்த மருந்துகளில் புகழ் பெற்ற மருந்து “தசமூலம்” என்பதாகும். இது பத்து மூலிகைகளின் வேர்களை கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த பத்து வகை மூலிகைகளில் கண்டங்கத் திரியும் ஒன்றாகும்.
முள்ளுள்ள மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் நீலநிற மலர்களையும் சிறுகத்திரிக்காய் வடிவிலான காய்களையும் மஞ்சள் நிறப்பழங்களையும் உடைய நேராக உயர்ந்து வளரும் சிறுசெடியின் வகை கண்டங்கத்திரி. இதன் தண்டுப் பகுதி முதல் இலைகள் வரை பூனை முட்கள் செடி முழுவதும் இருக்கும். இது கத்திரியின் வகைகளில் ஒன்றாகும். இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் ஆகியவை மருத்துவ குணமுடையவை. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தரிசு நிலங்களிலும் தானே வளர்கின்றது. கோழை அகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் பயன்படுகின்றது.
கண்டங்கத்திரியின் தன்மை பற்றி அக்தியர் கூறும் கருத்து
‘மாறியதோர் மண்டைச்சூலை கூறியதோர் தொண்டைப்புண் தீராத நாசிபீடம்.”
தலையில் நீர் கோர்த்தல், தொண்டையில் நீர்க்கட்டுதல், தொண்டை அடைப்பு ஏற்படுதல், பேச முடியாமல் தொண்டை அடைத்தல், மூக்கில் நீர் வடிதல், மூச்சுத் திணறல், இருமல் போன்ற அனைத்திற்கும் சிறந்த நிவாரணம் தரக்கூடியது கண்டங்கத்திரி என அகத்தியர் கூறுகிறார்.
பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைச் செடிகள் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தக் கூடிய தன்மை கொண்டவை. அந்த வகையில் கண்டங்கத்திரியை ஒத்த குணமுடைய மூலிகைகளான இண்டு, இசங்கு, தூதுவளை ஆகிய அனைத்தும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துகிறது.
இந்த பொதுப்பண்பினைக் கொண்டே கண்டங்கத்திரி அவலகம், சுதர்சண சூரணம், கனகாசவம், நெல்லிக்காய் லேகியம் ஆகிய ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
ஆஸ்துமா குணமாக
இண்டு, இசங்கு, கண்டங்கத்திரி, ஆடாதோடை, தூதுவளை, துளசி, வால்மிளகு, சுக்கு, திப்பிலி இவற்றில் ஒவ்வொன்றையும் 25 கிராம் அளவு எடுத்து இடித்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் 10 கிராம் எடுத்து 2 கப் நீரில் கொதிக்க வைத்து ½ கப்பாக வற்ற காய்ச்சி வடிகட்டி ஒரு வேளை அருந்த வேண்டும்.
இவ்வாறு காலை, மாலை இரு வேளை ஒரு வார காலம் அருந்தலாம். இது ஆஸ்துமாவில் மூச்சு விடத் திணறுபவர்களுக்கு நல்ல நிவாரணத்தை உடனடியாக அளிக்கும். நாளடைவில் ஆஸ்துமாவை குணப்படுத்தும்.
தொண்டைச் சளி குணமாக
கண்டங்கத்திரியின் முழுத்தாவரத்தையும் சேகரித்து பின் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின்னர் தூள் செய்து கொள்ள வேண்டும். அரை தேக்கரண்டி தூளுடன் அரை தேக்கரண்டி தேன் சேர்த்து குழைத்து உள்ளுக்குச் சாப்பிட தொண்டை சளி குணமாகும்.
கண்டங்கத்திரி வேர் குடிநீர்
‘கரிய கண்டங் கத்திரிவேர் கார முள்ள
சிறுதேக்கு
முரிய முத்தக் காசுடனே யொத்த சுக்குச்
சிறுமூலம்
தெரிய விருபடி நீர்விட்டுச் சிறுகக்
காய்ச்சிக் குடிப்பீரேல்
தரியா தோடும் வாதசுர மென்றே
தரணிக் குரைசெவ்வாய்.”
– தேரன்-குடிநீர்
கண்டங்கத்திரி வேர், கண்டுபரங்கி, மூத்தக்காசு, சுக்கு, சிறுவலுதலைவேர் இவை அனைத்தையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு எட்டில் ஒன்றாய் வற்றக் காய்ச்சி அருந்தினால் வாதசுரம் குறையும்.
இதர பயன்கள்
கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்துக் கொள்ள வேண்டும். இதனை உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசிவர நாற்றம் நீங்கும்.
கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து தலைவலி, கீல்வாதம் முதலிய வாதநோய்களுக்கு பூசிவர அவை நீங்கும்.
காலில் ஏற்படுகின்ற வெடிப்புகளுக்கு இதன் இலையை இடித்து எடுத்து சாற்றுடன் ஆளிவிதை எண்ணெய் சமஅளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசிவர மறையும்.
கண்டங்கத்திரி பூவை சேகரித்து வாதுமை நெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி மூலநோய்க்கு பூசிவர நன்மை தரும்.
கண்டங்கத்திரி காயை சமைத்து உண்டுவர நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளியேற்றும், பசியை தூண்டும். கழிச்சலை உண்டாக்கும்.
வெண் குட்டத்திற்கு இதன் பழம் சிறந்த மருந்தாகும். கண்டங்கத்திரி பழங்களை பறித்து சட்டியிலிட்டு நீர்விட்டு வேக வைத்து கடைந்து வடிகட்டிக் கொண்டு நான்கு பங்கெடுத்துக் கொண்டு அத்துடன் ஒரு பங்கு நீரடி முத்து எண்ணெய் சேர்த்து காய்ச்சி பக்குவத்தில் வடித்து வெண்குட்டம் உள்ள இடங்களில் பூசி வர வெண்புள்ளிகள் மறையும்.
சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம்.
பல் வலிக்கும், பல்லில் இருக்கும் கிருமிகளை போக்கவும் கண்டங்கத்திரி பழத்தின் விதைகள் பயன்படும். நெருப்பில் இவற்றை போட புகை எழும். இந்த புகையை பற்களின் மேல்படும்படி செய்ய வலி தீரும். இதன் பழத்தையும் உலர்த்தி பொடித்து நெருப்பில் போட புகை வரும். இதனாலும் பல்வலி, பல்லிலுள்ள கிருமிகள் நீங்கும்.
கண்டங்கத்திரி எனும் அற்புத மருத்துவ மூலிகையின் மகத்துவம் அறிந்து அதனை பயன்படுத்தி பயன் பெறுவோமாக.



கண்டங்கத்தரி

By Unknown → வியாழன், 25 ஜூன், 2015

ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளது. 100 கிராம் ஜவ்வரிசி, 94 கிராம் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் உள்பட 355 கலோரிகள் வரை கொடுக்கிறது. அரிசியுடன் ஜவ்வரிசியும் சேர்த்துச் சாப்பிட்டால், அது சூடான உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். 

மேலும் அதில் உள்ள கார்போஹைட்ரேட்டும் உடலுக்கு அதிக சத்தைக் கொடுக்கிறது. இந்திய பாரம்பரியமிக்க உணவாகக் கருதப்படும் ஜவ்வரிசி, சில மூலிகை மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஜவ்வரிசி கொண்டு பல வகையான உணவுகளை நாம் தயாரிக்க முடியும்.

இதில் புரதம், வைட்டமிகள் குறைவாக இருப்பதால், எந்த வகையான உணவுடனும் அதைச் சேர்த்து சத்தான உணவாக மாற்றலாம். சிலர் இதைக் கிச்சடியாகவும் செய்து சாப்பிடுவார்கள். ஜவ்வரிசியில் செய்யப்பட்ட உணவைக் காலையில் எடுத்துக் கொண்டால், அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

மேலும் நோய் வாய்ப்பட்டவர்களுக்கு ஒரு சரியான மாற்று உணவாக ஜவ்வரிசியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்

உடலுக்கு குளிர்ச்சி தரும் ஜவ்வரிசியின் மருத்துவ குணங்கள்

By Unknown →

பொதுவாக பழங்களின் உட்பகுதியை சாப்பிட்டு, அதன் தோலை தூக்கி எரிந்துவிடுவோம். ஆனால் பழங்களின் தோல்களில், அதன் உட்பகுதிக்கு இணையான சத்துக்கள் அடங்கியுள்ளது. 

ஆரஞ்சு பழத்தின் தோல் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இது சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேறி, முகத்தை பிரகாசமாக வெளிக்காட்டும். அதுமட்டுமின்றி ஆரஞ்சு பழத்தின் தோல் வாய் துர்நாற்றம், சுவாச பிரச்சனைகள், மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணத்தை வழங்கும். முக்கியமாக புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

வாழைப்பழத்தின் தோல் பற்களை வெள்ளையாக்க உதவும். அதுமட்டுமின்றி, சூரியக்கதிர்களால் பாதிக்கப்பட்ட சருமத்தில் ஏற்படும் எரிச்சல்களை சரிசெய்யவும் வாழைப்பழத்தின் தோல் உதவும். மேலும் குதிகால் வெடிப்பு உள்ளவர்கள், வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு குதிகாலை மசாஜ் செய்து வந்தால், ஒரே வாரத்தில் குதிகால் வெடிப்பு மறைந்துவிடும்.

மாதுளையின் உட்பகுதியில் உள்ள முத்துக்களில் எவ்வளவு நன்மைகள் அடங்கியுள்ளதோ, அதேப் போல் அதன் தோலிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. அதில் பருக்கள், சரும அரிப்புகள், முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் நீங்கி அழகு பாதுகாக்கப்படுவதோடு, இதய நோய், தொண்டைப் புண் போன்றவை தடுக்கப்பட்டு, எலும்புகளின் ஆரோக்கியம், பற்களின் சுகாதாரம் போன்றவை மேம்படும்.

தர்பூசணியில் இருக்கும் வெள்ளைப் பகுதியில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இந்த வெள்ளைப் பகுதியானது உடல் எடையைக் குறைக்க உதவி புரியும். மேலும் இந்த வெள்ளைப்பகுதியை சருமத்தில் தேய்த்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

வெள்ளரிக்காயின் தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளதால், உடல் எடையைக் குறைக்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவும். வெள்ளரிக்காயின் தோலில் பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே உள்ளது.

பழங்களின் தோலில் உள்ள சத்துக்கள்

By Unknown →

அருகம்புல் சாறு.: எல்லா நோய்களுக்கும் ஏற்ற டானிக் அருகம்புல் சாறு. புதியதாக குளுக்கோஸ் ஏற்றியது போலவும், உடலுக்கு புது ரத்தம் செலுத்தப்பட்டது போலவும் அதிக சக்தியை அளிக்கும். ரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். மலச்சிக்களை தீர்க்கும். ஆண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்கும். ரத்ததில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும். வாய்துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய்கள் வராமல் தடுக்கும். ஆஸ்துமா ரத்த அழுத்தத்தை குறைக்கும். தாய்பாலை அதிகரிக்க செய்யும். உடலில் நச்சுத்தன்மையை அகற்றும். கொழுப்பு சத்தை குறைக்கும்.

துளசி இலைச்சாறு: காய்ச்சல், இருமல், ஜீரணக்கோளாறு, ஈரல் சம்பந்தமான நோய்கள் காதுவலி ஆகியவற்றறை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யும்.

தூதுவளை இலைச்சாறு: மார்புச் சளியை அகற்றும். நரம்புத் தளர்ச்சி மறையும். மூளை வளர்ச்சி நினைவாற்றல் அதிகரிக்கும். தோல் நோய்கள் மறையும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி சாறு: உடல்நிறம் பொலிவு பெறும். கண்களுக்கு நல்ல பார்வை கிடைக்கும். மூளைக்கு சுறுசுறுப்பை தந்து, அறிவு தெளிவு ஏற்படும். காமாலை, மலச்சிக்கல் நீங்கும்.

பொண்ணாங்கண்ணி சாறு: உடலுக்கு வலிமை ஊட்டும். பொன் போல் உடல் பளபளப்பாகும். கண்ணொளி அதிகரிக்கும். வாதநோய்கள் மறையும். உடல்சூடு குறையும்.

வல்லாரை இலைச்சாறு: நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்பு தளர்ச்சி அகலும். வயிற்று நோய்கள், குடல் நோய்கள், நீங்கும். தாது விருத்தியாகும். சிறுநீர் நன்கு பிரியும் இதயம் வலுவாகும்.

வில்வ இலைச்சாறு: காய்ச்சல், நீரிழிவு குறையும். வயிற்று புண்கள் ஆறும். நல்ல பசி எடுக்கும். மந்த புத்தி மாறும். மஞ்சள் காமாலையை போக்கும்.. காலாரா குறையும்.

புதினா இலைச்சாறு: வாய் புண், வயிறு, குடலில் புண்கள், சளி, கபம், இருமல் குறையும். வெண்குஷ்டம் குறையும்.

நெல்லிக்காய் சாறு: தலைமுடி உதிர்வது குறையும். தும்மல், இருமல், சளி, கண்நோய், பல் நோய்கள், குறையும். நன்கு பசி எடுக்கும். இதயநோய்கள், நீரிழிவு நோய், தோல் நோய் குறையும். உடல் பலமடையும்

வாழைத்தண்டு சாறு: சிறுநீர் அடைப்பு, சிறுநீரக சம்பந்தமான நோய்கள் குறையும். ரத்த அழுத்தம் தொந்தி, அமிலத்தனமை போன்றவற்றை குறைக்கும். உடல், கை, கால் வீக்கத்தை குறைக்கும். ரத்தம் சுத்தமாகும்.

கேரட் சாறு: கண் பார்வை ஒளி பெறும். கண் நோய்கள், பல் நோய்கள் குறையும். அமிலத்தன்மையை குறைக்கும்.

அரச இலைச்சாறு: மலச்சிக்கல், உடல்சூடு, கர்ப்பப்பை நோய்களை குறைக்கும். காம உணர்ச்சியை தூண்டச் செய்யும்.

கொத்தமல்லி சாறு: பசியை தூண்டும். பித்தம், வாத நோய், காய்ச்சல் குறையும். மூலம், சளி, இருமல் குறையும்.

நோயற்ற வாழ்வு தரும் சாறுகள்.

By Unknown →

கிராமப்புறங்களில் வயல் வெளிகள் பக்கம் மிகவும் எளிதாகக் கிடைக்கக்கூடிய மூலிகை இது. உலர்ந்த கோரைக் கிழங்கை நாட்டு ம ருந்துக் கடைகளில் முத்துக்காசு என்றும் குறிப்பிடுவர். உலர்ந்த கோரைக்கிழங்கு மருந்துப் பொருளாக மட்டுமின்றி ஊதுவத்தி போன்ற நறுமணப் பண்டங்கள் செய்யவும் பயன்படுகிறது.

கோரைக்கிழங்கு உடல் கட்டிகளை அகற்ற உதவும் டானிக் போன்றது. கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. கோரைக்கிழங்கினால் பொதுவாக குளிர்காய்ச்சல் நீங்கும். அதிதாகம் பித்த வளர்ச்சி போன்றவற்றிற்கும் இது நல்ல மருந்து. கடு மையான குன்ம நோயை அகற்றி குணமாக்க கீழ்கண்ட முறையில் இம்மருந்தினை தயாரிக்க வேண்டும்.

இரண்டு பச்சை கோரைக்கிழங்கை எடுத்து நறுக்கி நூறு மில்லி நீரில் போட்டு பாதியளவாகச் சுண்டக்காய்ச்சிக் கொள்ள வேண்டும். இந்தக் குடிநீரை வேளைக்கு ஒன்றரை அவுன்ஸ் வீதம் முன்று வேளை என்ற கணக்கில் இருபது நாட்கள் சாப்பிட்டு வர கடுமையான குன்ம வயிற்றுவலி குணமாகும். குடிநீரை சாப்பிட்டால் அஜீரணபேதி, சீதபேதி, வாந்திபேதி ஆகியவையும் குணமாகும்.

குடலில் பூச்சித்தொல்லை இருந்தால் ஒரு கோரைக்கிழங்கை எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு துண்டு இஞ் சியை எடுத்துத் தோலை நீக்கிக் கொள்ள வேண்டும். இரண்டையும் சேர்த்து நன்கு இடித்துப் பின் சிறிது தேன் விட்டு அரைத் துக்கொள்ள வேண்டும்.

காலையில் இதனை சுண்டைக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குடல் கிருமிகள் அனைத்தும் முற்றிலுமாக அகன்றுவி டும். இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் நாட்களில் சுடு சோற்றில் எலுமிச்சம் பழம் சாறும் கொஞ்சம் நெய்விட்டும் சாப்பிடவேண் டும். இதே முறையில் சாப்பிட சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.

தாய்பால் குறைந்து விட்ட தாய்மார்கள் கோரைக்கிழங்கை பச்சையாகக் சந்தனக்கல்லில் இழைத்து மார்பகத்தில் பற்றாக இட பால் நன்றாக சுரக்கும்.

உடல் நலனை பாதுகாக்கும் கோரைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்

By Unknown →

1.வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மணமாகவும் இருக்கும்.

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

வாழை இலையின் மருத்துவ பயன்கள்

By Unknown →

அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு உண்டு. சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மினரல் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. 

அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம் முடிவுறும் நிலையில் உள்ள பெண்கள் வரை தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.

கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும். கர்ப்ப காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திபழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாக பெறமுடியும். சரிவர பசி எடுக்காத குழந்தைகளுக்கு இதை கொடுக்க அவர்கள் பசி எடுத்து உண்பார்கள்.

சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நாட்பட்ட வறட்டு இருமல் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கொண்டது. உயரழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழம் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது

உடல் நலத்தை பாதுகாக்கும் அத்திபழத்தின் மருத்துவ குணங்கள்

By Unknown →

துரியன் பழம் நிறைய மக்களிடம் மிகவும் பிரபலமான பலமாக உள்ளது. நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம் இனிப்பு சுவையை கொண்டுள்ளது. ஆரோக்கியம் தரும் துரியன் பழம் பல உடல் சுகாதார நலன்களை கொண்டுள்ளது. பழங்கள் மட்டும் மருத்துவ பலன்களை கொண்டுள்ளாமல் இலைகளும் மருத்துவ பலன்களை கொண்டு செயல் படுகிறது. சில துரியன் பழம் நோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது என கருத்தும் வெளியாகிறது..

உண்மையில் அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை துரியன் பழம் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் மற்றும் உயர்நிலை கொழுப்பை அதிகரிக்கும் என்பதால் கூறுகின்றனர். போதுமான அளவு துரியன் பழம் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான உடல் நிலைக்கு மிகவும் நல்லது. துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்பு, ரிபோப்லாவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் அமிலம், வைட்டமின் சி, நார்ச்சத்து , துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் உள்பட பல சத்துகளை கொண்டுள்ளது.

வாழை பழத்தை விட 10 மடங்கு இரும்பு, பாஸ்பரஸ் அதிகம் கொண்டுள்ளது. ஒரு 100 கிராம் துரியன் பழத்தில் 520 கிராம் உற்பத்தி திறன், 1 கிராம் நார்ச்சத்து, கொழுப்பு 2.5 கிராம், புரதம் 28 கிராம், கார்போஹைட்ரேட் மற்றும் நீர் 66 கிராம் கொண்டுள்ளது. துரியன் பழத்தின் சதை மஞ்சள் காமாலை நோயால் அவதி படுபவர்களுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. துரியன் பழத்தின் வேர்கள் நகம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மருந்தாவும் பயன்படுகிறது-. துரியன் பழத்தில் உள்ள மாங்கனீசு நிலையான இரத்த அளவை பராமரிக்க உதவுகிறது.

துரியன் மரத்தின வேர், இலை, போன்றவற்றை தண்ணீருடன் சேர்த்து பருகுவதால் சுரவெதிரியில் இருந்து குணம் பெறலாம். துரியன் பழம் கொண்டுள்ள பி வைட்டமின், பொட்டாசியம், கால்சியம், மூட்டுகள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது. துரியன் பழத்தின் தோல் கொசுக்கடியை தடுக்க உதவுகிறது. துரியன் பழம் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகளவு கொண்டுள்ளதால் இரத்த சோகையை சரிசெய்கிறது. கருப்பை பலவீனமாக இருந்தால் கருத்தரிக்காது. அப்படி கருத்தரித்தாலும் சில வாரங்களில் கலைந்துவிடும்.

இத்தகைய பிரச்சனை உடைய பெண்கள் துரியன் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். கருப்பை பலம் பெறும். மேலும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவால் குழந்தையின்மை குறை இருக்கும். துரியன் பழம் அணுக்களின் எண்ணிக்கயை அதிகரிக்க வல்லது. எனவே துரியன் பழம் சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.இந்த பழத்தில் கொண்டுள்ள பாஸ்பரஸ் பல் சுகாதாரத்திற்கு உதவுகிறது. துரியன் பழத்தில் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருளான வைட்டமின் சி உள்ளதால் முதிர்ச்சியை தடுத்து இளமையை தக்க வைத்துக்கொள்கிறது.

துரியன் பழம் பைரிடாக்சின் உள்ளடக்கத்தை கொண்டுள்ளதால் தளர்ச்சி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.. உடலில் ஏற்படும் கட்டிகளை தடுக்கிறது. காப்பர் மற்றும் ரிபோப்லாவின் கொண்டுள்ளதால் தைராய்டை பராமரித்து ஒற்றைதலைவலிக்கு நிவாரணம் அளித்து ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கிறது. துரியன் பழத்தின் இலை மலச்சிக்கலுக்கு தீர்வு வழங்குகிறது. தயாமின் மற்றும் நியாமின் கொண்டுள்ளதால் பசியை தூண்டுகிறது. படை சொறி சிரங்கு ஆகியவற்றிற்கு துரியன் பழத் தோல் மருந்தாக பயன்படுகிறது.


ஊட்டச்சத்து நிறைந்த துரியன் பழம்

By Unknown →