ஆப்கானிஸ்தான், அபிசினியாவின் மலைபிரதேசங்களிலிருந்து செந்தூரகச் செடி
இந்தியா வந்திருக்க வேண்டும். செந்தூரம் பணமீட்டும் பொருளாதார பலன் உள்ள
செடி.
தாவரவியர் பெயர் -- Carthamus Tinctorius
சமஸ்கிருதத்தில் -- அக்னிஸிகா, குசும்பா, லோஹிதா, வஸ்ரரஞ்சனா முதலியன
இந்தி - - குசும், கசும்பா
தெலுங்கு - - அக்னிசிகா, குசும்பா
கன்னடம் -- குசம்பே, குசும்பா
தாவர விவரங்கள்
நேர் நிமிர்ந்து வளரும் சிறிய மூலிகை செடி. உயரம் 0.3 (அ) 0.6 மீட்டர் வரை
இருக்கும். ஆரஞ்ச் - சிவப்பு வண்ண பூக்கள் 2.5 செ.மீ.லிருந்து 3.3 செ.மீ.
நீளம் இருக்கும்.
பயன்படும் பாகங்கள்
பூ, விதைகள்
விளையும் இடங்கள்
காட்டுச் செடியாகவும் பயிரிடப்படும் செடியாகவும், தேசம் முழுவதும் விளைகிறது. இதன் பூக்கள் Safflower எனப்படுகிறது. இந்த Safflower லிருந்து எடுக்கப்படும்
சமையல் எண்ணெய் பிரபலமாகிவிட்டது. அதனுடன் செந்தூரக செடியும் பணமீட்டும்
தாவரம் ஆகிவிட்டது. முன்பு நரைத்த முடியை மறைக்கும் முடிச்சாயம்
தயாரிப்பில் தேவைபட்டது. தற்போது எண்ணெய் தயாரிப்புக்காக பயிரிடப்படுகிறது.
செந்தூரக செடிக்கு அதிக நீர் தேவைப்படாது. மழைத்தண்ணீரே போதுமானது. வளமை
இல்லாத, செழிப்பற்ற நிலங்களில் கூட விளையும். விதைகளால் பயிரிடப்படுகிறது.
பொதுவாக கோதுமை, பார்லி போன்றவற்றுடன் சேர்த்து விதைக்கப்படும். தனித்தும்
பயிரிடப்படுகிறது.
இரு ரகங்கள், தேவைக்கேற்ப பயிரிடப்படுகின்றன. ஒன்று இலைகளில் நடு நரம்பு
இருக்கும் வகை. இது சாஃப்ளவர் எண்ணெய் தயாரிக்க சிறந்தது. மற்றொரு வகையின்
இலைகள் நடு நரம்பில்லாதவை. இந்த ரகம் முடிச்சாயம் தயாரிக்க பயனாகிறது. முழு
வளர்ச்சி பெற்ற செடிகள் பூமியிலிருந்து பிடுங்கப்பட்டு, அடிக்கபட்டு
விதைகள் சேகரிக்கப்படுகின்றன. ஒரு ஹெக்டேருக்கு 4.8 லிருந்து 6.7
குவின்டால் விதைகள் கிடைக்கும். உலர்ந்து பூக்கள் 0.89 லிருந்து 1.34
குவின்டால் வரை கிடைக்கும்.
அய்யா,
பதிலளிநீக்குஎனக்கு குசும்பா பூ தேவைப்படுகிறது.