வெந்தயம் -

By Unknown → திங்கள், 22 செப்டம்பர், 2014
Advertise
வெந்தயம் - மருத்துவ பயன்கள் :- 

நமது முன்னோர் சமையலறையிலேயே வைத்தியத்தையும் வைத்திருந்தனர். அதில் முக்கியமானது வெந்தயம். வெந்தயத்தில் புரதம், நார்ச்சத்து,  வைட்டமின் சி, நியாசின், பொட்டாசியம், இரும்பு, ஆல்கலாய்டு போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.மேலும் கூட்டு டையோஸ்ஜெனின் உள்ளதால்,  ஈஸ்ட்ரோஜென் போன்ற குணங்கள் மற்றும் ஸ்டீராய்டல் சப்போனின் போன்றவைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

கொலஸ்ட்ராலை குறைக்க வெந்தயம் உதவி செய்கிறது. முக்கியமாக கொழுப்புப்புரதத்தை குறைக்க உதவுகிறது. இதய நோய்க்கு வெந்தயம் ஒரு  சிறந்த மருந்து. வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து இதய அடைப்பு இடர்பாட்டை குறைக்கும். இதில் பொட்டாசியம் உள்ளதால், இதயத் துடிப்பு மற்றும்  ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, சர்க்கரையை ரத்தம் உட்கொள்ளும் வீதம் குறையும். 

வெந்தயத்தில் அமினோ அமிலம் உள்ளதால், இன்சுலின் உற்பத்தியை அது தூண்டிவிடும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கண்டிப்பாக வெந்தயம்  தேவை. அதிலுள்ள டையோஸ்ஜெனின் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும்.கருப்பைக்குரிய சுருங்குதலை வெந்தயம் ஊக்குவிப்பதால்,  பிரசவ வலியை குறைத்து குழந்தை பிறப்பை தூண்டும். ஆனால் கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக வெந்தயத்தை எடுத்துக் கொண்டால்,  கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் ஏற்படும் அபாயம் உள்ளது. 

கருப்பைக்குரிய சுருங்குதலை வெந்தயம் ஊக்குவிப்பதால், பிரசவ வலியை குறைத்து குழந்தை பிறப்பை தூண்டும். ஆனால் கர்ப்ப காலத்தில்  அளவுக்கு அதிகமாக வெந்தயத்தை எடுத்துக் கொண்டால், கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் ஏற்படும் அபாயம் உள்ளது. மாதவிடாய் காலத்தின்  போது ஏற்படும் காய்ச்சல் உணர்வு, உடல் சூடு மற்றும் மனநிலை மாற்றத்தையும் சாந்தப்படுத்தும். உணவில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்துக்  கொண்டால், அதிகப்படியான அமிலப் பாய்ச்சல் அல்லது நெஞ்செரிச்சலுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நமது வயிற்றின் அக உறை மற்றும் குடலில், வெந்தயத்தின் பசைப் பொருள் சூழ்ந்து கொள்வதால், எரிச்சலை உண்டாக்கும் இரையக குடலிய  தசைகளை இதமாக்கும். அதனை உட்கொள்வதற்கு முன்பாக, வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்தால், அதன் வெளிப்புறம் பசைத்தன்மையை  பெறும். வெந்தயத்தை ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேனுடன் கலந்து பருகினால், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சலை  குறைத்து, உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும். வெந்தயத்தின் பசைப்பொருள், இருமல் மற்றும் தொண்டை எரிச்சலையும் நீக்கும்.

வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து (சபோனின்ஸ், பசைப்பொருள் போன்றவைகள்) உணவுகளில் இருந்து உள்ளேறிய நச்சுத்தன்மையை, உடலில் இருந்து  வெளியேற்றும். இது பெருங்குடலின் சீதப்படலத்தை புற்றுநோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். செரிமானத்தை ஊக்குவித்து, உடலிலுள்ள  தீமையான நச்சுக்களை வெளியேற்றும். இது செரிமானமின்மையை நீக்கி, மலச்சிக்கலுக்கு போக்கும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிட்டால், அதிலுள்ள இயற்கையான கரையத்தக்க நார்ச்சத்துக்கள், பசியை அடக்கிவிடும். ஊற வைத்த சுத்தமான வெந்தயத்தில் இருந்து செய்யப்பட்ட பேஸ்ட்டை சரும சிகிச்சைகளுக்கு பயன்படுத்தலாம். அதில் தீக்காயம், கொப்பளம், சரும  படை போன்ற பிரச்சினைகளும் அடக்கம். கரும்புள்ளிகள், பருக்கள், சுருக்கங்கள் போன்றவைகளை தடுக்க வெந்தயத்தை ஃபேஸ் பேக்காக  பயன்படுத்தலாம். 

வெந்தயத்தை போட்டு கொதிக்க வைத்த நீரை கொண்டு முகத்தை கழுவினாலும் சரி அல்லது நற்பதமான வெந்தய இலைகளை கொண்டு செய்த  பேஸ்ட்டை 20 நிமிடங்களுக்கு முகத்தில் தடவினாலும் சரி, சருமத்தில் பல அதிசயங்கள் அரங்கேறும். கரும்புள்ளிகள், பருக்கள், சுருக்கங்கள்  போன்றவைகளை தடுக்க வெந்தயத்தை ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம். வெந்தயத்தை போட்டு கொதிக்க வைத்த நீரை கொண்டு முகத்தை  கழுவினாலும் சரி அல்லது நற்பதமான வெந்தய இலைகளை கொண்டு செய்த பேஸ்ட்டை 20 நிமிடங்களுக்கு முகத்தில் தடவினாலும் சரி, சருமத்தில்  பல அதிசயங்கள் அரங்கேறும்.

வெந்தயத்தை உணவோடு சேர்த்து கொண்டாலும் சரி அல்லது அதன் பேஸ்ட்டை தலைமுடியில் தடவிக் கொண்டாலும் சரி, உங்கள் தலைமுடியை  பளபளவென கருமையாக்கும். தினமும் இரவு தேங்காய் எண்ணெயில் ஊற வைத்த வெந்தயத்தை கொண்டு, மறுநாள் காலை தலையில் மசாஜ்  செய்தால், பொடுகை விரட்டும், முடி உதிர்தலுக்கு பெரிய நிவாரணியாக இருக்கும்.

Sivasutagaran Darma
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " வெந்தயம் - "

Your Comment Has Been Published!