ஒரே நேரத்தில் 200 பேருக்கு call செய்ய உதவும் Popcorn Buzz அப்பிளிக்கேஷன்
மொபைல் அப்பிளிக்கேஷன்களை உருவாக்கும் Line நிறுவனம் Popcorn Buzz எனும் அப்பிளிக்கேஷனை அன்ரோயிட் மொபைல் சாதனங்களுக்கு மட்டுமே தற்போது அறிமுகம் செய்துள்ளது.
இந்த அப்பிளிக்கேஷன் மூலம் தற்போது ஒரே நேரத்தில் 200 பேருக்கு அழைப்பினை ஏற்படுத்தக்கூடிய வசதி உள்ளது. முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளக்கூடியதாக Popcorn Buzz அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அப்பிளிக்கேஷனில் வீடியோ வசதி உட்பட மேலும் பல வசதிகள், இதன் அடுத்த வெர்சனில் வரும் என எதிர் பார்க்கபடுகிறது.
மேலும் இது android ல் மட்டுமே கிடைக்கும் இந்த அப்பிளிக்கேஷன் விரைவில் iOS இயங்குதளத்தில் செயற்படும் மொபைல் சாதனங்களுக்காகவும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

No Comment to " ஒரே நேரத்தில் 200 பேருக்கு call செய்ய உதவும் Popcorn Buzz அப்பிளிக்கேஷன் "
Your Comment Has Been Published!