அமெரிக்காவில் மீண்டும் சைபர் தாக்குதல்

By Unknown → செவ்வாய், 16 ஜூன், 2015
Advertise
அமெரிக்காவில் ராணுவ ரகசியங்கள் மற்றும் ராணுவ வீரர்களின் ரகசியங்களை சீன நாட்டை சேர்ந்த ஹேக்கர்கள், கணினி வழியாக திருடியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அமெரிக்க ராணுவ ரகசியங்களை கணினி வழியாக திருடிய (hacking) சீன நாட்டினர் மீது நடவடிக்கை எடுக்க, அதிபர் ஒபாமா பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவில் ஓ.பி.எம். என்னும் ‘ஆபிஸ் ஆப் பெர்சனல் மேனேஜ்மென்ட் நெட்வொர்க்’கில் சட்டவிரோதமாக நுழைந்து, முக்கிய ராணுவ ரகசியங்களை மீண்டும் சீன நாட்டினர் திருடியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள், வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் பற்றிய தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இப்படி ‘ஆபிஸ் ஆப் பெர்சனல் மேனேஜ்மென்ட் நெட்வொர்க்’கில் புகுந்து தகவல்கள் திருடப்பட்டிருப்பது, இது இரண்டாவது முறை என கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்க அரசு துறை ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள் என 40 லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

அமெரிக்க புலனாய்வு துறையினர், ராணுவத்தினர், ஒப்பந்தக்காரர்கள் பாதுகாப்பு அனுமதிக்காக சமர்ப்பித்திருந்த ரகசிய தகவல்களை குறிவைத்து, திருட்டு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. 2 திருட்டுக்களையும் செய்திருப்பது ஒரே தரப்பினர்தான் எனவும் நம்பகமான தகவல்கள் கூறுகின்றன.
இணையதளத்தில் புகுந்து தகவல்கள் திருடப்பட்டிருப்பதை தொடர்ந்து, அதன் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து அமெரிக்க அதிபர் ஆலோசனை நடத்தி வருகிறார்.  இது தவிர தகவல்களை திருடியவர்கள் மீது, பொருளாதார தடை விதிக்கவும் அதிபர் ஒபாமா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


Read more: http://www.ns7.tv/ta/%E2%80%8B%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D#ixzz3dCSr3Wtl
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " அமெரிக்காவில் மீண்டும் சைபர் தாக்குதல் "

Your Comment Has Been Published!