குறுஞ்செய்திகளை பகிர உதவும் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் இனி வியாபாரம் செய்யலாம். சோதனை முயற்சியாக அமெரிக்காவில் இருக்கும் குறிப்பிட்ட இசைக் கலைஞர்கள், இசைக்குழுக்கள் மற்றும் அமைப்புகள் தங்கள் பொருட்களை ட்விட்டரில் விற்கும் வசதியை தந்துள்ளது.
இந்த வசதி மூலம் யு.எஸ் பயனாளர்களில் சிலர் மட்டுமே பொருட்களை வாங்க முடியும். பொருட்கள் விற்கப்படும் ட்வீட்களில் “Buy” என்ற பட்டன் இருக்கும். அதை க்ளிக் செய்தால் அந்த பொருள் பற்றிய மேலதிக தகவல்களை காட்டும். பிறகு கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் மூலம் விலைக்கு வாங்கலாம்.
வரும் வாரங்களில் இந்த வசதி விரிவுப்படுத்தப்படும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.
குறிப்பு: இந்த வசதி தற்போது மொபைலில் மட்டுமே செயல்படும்.
No Comment to " இனி ட்விட்டரில் வியாபாரம் செய்யலாம் "
Your Comment Has Been Published!