நகர வாழ்க்கையை மேம்படுத்த கூகுள் முயற்சி

By Unknown → செவ்வாய், 16 ஜூன், 2015
Advertise

நகரத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையை, தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்த, கூகுள் நிறுவனம், "Sidewalk Labs" என்னும் ஆய்வு நிறுவனத்தை அமைக்க உள்ளது.

இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம் நகர வாழ்வை மையப்படுத்தி, புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதே ஆகும்.

நகர வாழ்வின் முக்கிய பிரச்சனைகளான சுற்று சூழல் மாசு, புதுப்பிக்க முடியாத ஆற்றல் பயன்பாடு (Non-renewable energy), போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை தொழில்நுட்பம் கொண்டு கட்டுப்படுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது.

ப்லூம்பர்க் (Bloomberg LP) நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான, டான் டாக்டராஃப், இந்த ஆய்வு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக செயல்பட உள்ளார். மேலும் இந்த ஆய்வு நிறுவனம் நியூயார்க்கை தலைமையகமாக கொண்டு இயங்க உள்ளது.

கூகுளின் புதிய ஆய்வு நிறுவனம் குறித்து முதற்கட்ட தகவல்கள் மட்டுமே வெளியாகியுள்ளது.  மேலும் எப்போது செயல்பட உள்ளது என்பது குறித்து, எந்த தகவலும் வெளியாகவில்லை.

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " நகர வாழ்க்கையை மேம்படுத்த கூகுள் முயற்சி "

Your Comment Has Been Published!